பூநீர் என்பது என்ன?...

Author: தோழி / Labels: , ,

பூநீர் என்பது ஒருவகைத் தாவரம் என்கிறார் அகத்தியர்.

"புதிய மரம் ஒன்று கண்டேன் பூநீரப்பா
பூக்காமல் கதிர் வாங்கும்
பதி கண்டேன் புதுமை கண்டேன்
காய் காணேன் கனி காணேன்
இலைகள் கண்டேன் பாங்கான
கொட்டியது தானும் கண்டேன்
மதிரிந்தோர் தமை எல்லாம்
வினவிக் கேட்டேன் வகையறிந்து
கூருதட்க்கு மாந்தர் காணேன்
என் மனதிலே அறிந்து கொண்டேன்
அப்பனே பரமன் அன்று பணியலாமே"


பூநீர் என்றொரு மரத்தினை கண்டதாகவும், அதில் பூக்காமல் கதிர் வந்த புதுமையும், அத்தோடு காயோ கனிகளோ இல்லையென்றும், ஆனால் இலையும், விதையும் கண்டதாக சொல்லும் அகத்தியர், இந்த அதிசய பூநீர் மரத்தைப் பற்றி தெரியுமா என்று மற்றவர்களிடம் கேட்டும் யாரும் தக்க பதில் சொல்லவில்லை என்பதால், இம் மரத்தின் காட்சி தனக்கு சிவனின் அருளால காணக் கிடைத்தது என்று சொல்கிறார்.

இந்த பூநீருக்கான வேறு பெயர்கள் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

டவுசர் பாண்டி... said...

குறுகிய காலத்தில் 10000 ஹிட்ஸ் வந்துருச்சு போல....வாழ்த்துகள்.

தோழி said...

@டவுசர் பாண்டி...

அட நானும் இப்பதான் கவனிக்கறேன்... சுட்டிக் காட்டியதற்கு நன்றி...

எல் கே said...

koncham periya pathivaga ittal nandragam irukkum

Radhakrishnan said...

அகத்தியர் கனவு கண்டு இருப்பாரோ? :)

Anonymous said...

Is that Rubber Tree??

Anonymous said...

is that rubber tree,no flowers,only seeds with rubber oil in the stem.
leon 9551845639

nagen said...

நான் இந்ந்த பகுதிக்கு புதியவன். உங்கள் படைப்பு
மிக்க சிறப்பு

அறிவன் said...

வணக்கம்.வாழ்க தங்கள் சித்தர் பணி.
(மரமென்று சொன்னது மாயச்சூது )
என்று நந்தீஸ்வரர் கூறுகிறார்.
விளக்கம் சொல்ல முடியுமா??????....நன்றி.தங்கள் தொண்டு தொடரட்டும்.

Anonymous said...

Dear Tozhi,
If it were Puuneer, then half the land would be transformed base metals into gold.
Agastyar wrote metaphors, and you do not understand what real Pooneer. No one profession does not understand, no Ph.D. - no one will understand. Siddhas have hidden behind metaphors all the knowledge of Alchemy and a half of knowledge on medicine. Can understand the true meaning of verses from the Siddhas mercy, and a hidden mystic Guru, who is not happy with the show.
If you knew the exact meaning of words Puuneer, Andakkal, Muppu - you would not write it here and have achieved immortality as Siddas and would not violate their covenants. Because they write that you need to hide and does not reveal secrets.

Therefore, I personally think your theory is not true about Puгneer and Muppu. In this area you do not understand the secrets Agastyar.

I have some poems Agastyar who ridicules people like கழுதை,
who eat juices from trees, leaves, and so on, thinking that it Punneer.

kumar said...

all ur posts, we ca see and learn all this things made by help of proper Gurus. now a days where we can find out such type of peoples? is it possible..

Unknown said...

it is called fullers earth. i have seen it and taken it

S.Chandrasekar said...

சிவகங்கை மாவட்டத்தில் கோவனூர் என்ற ஊரில் அகத்தியர் தவம் இயற்றும் போது, தன் கமண்டலத்திலுள்ள நீர் அருகிலிருந்த ஒரு தாவரத்தின் மேல் பட்டதும் அது ஜொலிக்கும் தாவரமானதாம். அது பூமியின் மேல்பரப்பில் உப்பு படிமம்போல் தெரியுமாம், அதை விடியற் காலையில்தான் சேகரிக்கவேண்டும் என்கிறார்கள். அதைத்தான் Fullers Earth என்று ஒரு நண்பர் இங்கு சொல்லியுள்ளார் என்று நினைக்கிறன். கோவனூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது.

Post a comment