அங்கிசச் சித்து...

Author: தோழி / Labels: , ,

"காட்டவே பிரயதிகச் சித்துச் சொன்னேன்
கருவான அங்கிசச் சித்து சொல்வேன்
பூட்டான மின்மிநியாம் பூச்சிதனை
போருக்கியொரு சிரங்கை பீங்கானிலிட்டு
எரண்டத்தெண்ணெவிட்டு ரவியில் வைக்க
உருகிநல்ல அரக்கு நிற மைஎனவே
அன்பான மையெடுத்து சிமிழில் வைத்து
நிம்பாமல் நீ இருந்து திலகம் போட்டு
சம்பிரமாய் பூமிதனை பார்க்கும் போது
தட்டாத பாதாளம் கெசமாய் தோன்றும்
மனது பயமாகவே தான் தோன்றும் பாரே"மின்மினிப் பூச்சி ஒரு சிரங்கை எடுத்து, அதனை பீங்கானில் இட்டு அத்துடன் எரண்டத்தெண்ணை சேர்த்து, குருவினை மனதில் தியானித்து வெய்யிலில் வைக்க அது அரக்கு நிறமுள்ள மையாகும். இதனை சிமிழில் சேகரித்து வைத்து, தேவையான பொழுதில் திலகமாய் இட்டுக் கொள்ள, பூமியின் ஆழத்தில் உள்ளவைகள் தெரியும்,அப்படி பார்க்கும் போது பயமாக இருக்கும். இதைத்தான் அங்கிசச்சித்து என்கிறார் அகத்தியர்.

இதுவரையில் ஆறு வகையான சித்துக்களை பார்த்தோம், ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சித்துக்களை பற்றிய பதிவுகளைத் தொடர்கிறேன்.

அடுத்த பதிவில் புதிய தகவலொன்றுடன் சந்திக்கிறேன்.

இப்பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். சித்தர்களின் மகத்துவம் தமிழறிந்த அனைவருக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும் என்பதே எனது நோக்கம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

chandru2110 said...

சித்துக்களுக்காக மின்மினி பூச்சு போன்ற உயிரினத்தை கொல்லலாமா?

தோழி said...

இந்த பதிவின் நோக்கமே விவரங்களை பகிர்ந்து கொள்வதுதான். எனவே, தயவு செய்து இம்மாதிரியான எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்... நன்றி.

எவனோ ஒருவன் said...

தோழி
// பூமியின் ஆழத்தில் உள்ளவைகள் தெரியும்,அப்படி பார்க்கும் போது பயமாக இருக்கும். இதைத்தான் அங்கிசச்சித்து என்கிறார் அகத்தியர்.
//
இதனால் ஏற்படப்போகும் Enlightenement என்னவாக இருக்கும் ?

Unknown said...

என்னதான் சித்து பதிவுகளை போட்டு இருந்தாலும்
நீங்கள் போட்ட பதிவில் என்னை ஈர்த்தது.

புல்லரிடத்திற் போய்ப் பொருள் தனக்குக்கையேந்தி
பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா
பொருளெனக்கு தாராயோ!

மிக்க நன்றி ..

Radhakrishnan said...

நல்லதொரு சித்து.

KARTHIK said...

Very Nice

Nithilan said...

sirangu means??

Unknown said...

சிரங்கை=கைகொண்ட அளவு .

Unknown said...

Arandathannai enadral ena?

Unknown said...

Arandathannai enadral ena?

Unknown said...

Arandathannai endral ena?

Post a comment