பட்டினத்தார் பாடல்களில் உலக இயற்கையாய், உலக மக்களின் இயல்பை, அவார்கள் உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டும் பாடால்கள் பல உள்ளன.
"அறந்தான் இயற்றும் அவனிலுங்
. . கோடி அதிகம் இல்லம்
துறந்தான்; அவனின் சதகோடி
. . உள்ளத் துறவுடையோன்;
மறம் தான் அறக்கற்று அறிவோடு
. . இருந்துஇரு வாதனையற்று;
இருந்தான் பெருமையை என்சொல்லு
. . வேன்? கச்சி ஏகம்பனே!"
பல அறங்களைத் தவறாமல் செய்யும் இல்லற வாழ்க்கை உடையவன் சிறந்தவன், அவனை விடவும் இல்லறம் துறந்து துறவரம் கொண்டவன் உயர்ந்தவன். அவன் இல்லறத்தானையும் விட உயர்ந்தவன்.
இல்லற இன்பத்தை துறந்து துறவு கொண்டவனையும் விட உண்மையான உள்ளத் துறவு கொண்டவன் உயர்ந்தவன். மனதால் எந்த எண்ணமும் எண்ணாமல் தன்னலந் துறந்து வாழ்பவன் உயர்ந்தவன்.
சொல்லமுடியாதளவு பெருமையுடையவன் யாரென்றால் சொல்கிறேன் கேளுங்கள் குற்றமற்ற கல்விகற்று, அறநெறியிலே நின்று நல்வினை தீவினைப் பயன்களைப் பற்றி எண்ணாமல் தன கடமையைச் செய்து வாழ்பவனே எல்லோரிலும் அளவிடமுடியாத உயர்ந்தவனாவான் என்கிறார் பட்டினத்தார்.
Post a Comment
8 comments:
நல்ல தகவல். நன்றி.
மிக்க நன்றி.. rajsteadfast..
நல்ல தகவல் அருமை தோழி
மிக்க நன்றி.. hai_cha70
உயர்ந்தவன் யார் என சொல்லும் நல்லதொரு பாடல்.
How to increase our height,any methods?
Leon Gladston,chennai
தோழி அவர்களுக்கு எனக்கு ஓர் சந்தேகம் " குற்ற மற்ற கல்வி " என்பதின் பொருள் என்ன?
@praveen
ஆத்ம சுத்தியுடன் தெளிவுற கற்றதன் வழி உறுதியாய் நிற்பதே குற்றமற்ற கல்வியாகும்.
Post a Comment