சிறுநீரகக் கல் கரைய மருந்து...

Author: தோழி / Labels: ,

"ஏலரிசியும் தேங்காய்ப்பூவும் நெரிஞ்சிவேற் மாவி
லங்கம் வேற் சிறு பூனை வேற்றிவை மூணும்
அரைத்துக் தண்ணி விட்டு சிறந்து காச்சி
இருவேளை ஆறுநாட் கொடப்பா கல்லுவீழும்".

- அகத்தியர் நயன விதி -

ஏலரிசி - 25 கிராம்
தேங்காய்ப்பூ - 25 கிராம்
நெரிஞ்சி வேர் - 25 கிராம்
மாவிலங்கம் வேர் - 25 கிராம்
சிறு பூனை வேர் - 25 கிராம்

இவை அனைத்தையும் எடுத்து ஒரு புதுப் பானையில் போட்டு பத்தில் ஒருபங்காகக் காய்ச்சி அதாவது ஒரு லீட்டர் தண்ணீர் விட்டு நூறு மில்லி லீட்டராகக் காச்சி தினமும் காலை மாலை என இரு வேளையாக ஆறுநாள் குடிக்கக் கொடுத்தால் சிறுநீர் கழியும் பொது கல்லானது சிறுநீருடன் வெளியில் வந்து விடுமாம்.

இந்த மருந்து குடிக்க எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

ATOMYOGI said...

தகவல்கள் எல்லாம் அருமை! ஆனால் நீங்கள் தரும் பாடல்கள் எந்த சித்தருடையது, எந்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்குமே!

தோழி said...

குறித்து விட்டேன் நன்றி...

rajsteadfast said...

Ariya thagavalgal...

Nanri.

தோழி said...

மிக்க நன்றி...

Maalini said...

தோழியே! ஜலதோஷம் நீங்குவதற்கு சித்தர் மருத்துவம் சொல்வதாக சொல்லி இருந்தீங்க!
அப்படியே ஜலதோஷம் ஆரம்பம் தும்மல் அதற்கும் சேர்த்து சொல்லுங்க!
மிகவும் நன்றி!

தோழி said...

ஜலதோஷம் நீங்குவதற்கு சித்த மருத்துவமுறை விரைவில் தருகிறேன்.. நன்றி..

rajendran said...

சிறுபீளை வேர் என்பதுதான் சறியானதாக இருக்கும்.
சிறு பூனை அல்ல.

THIVAKAR said...

தோழிக்கு ஒரு சிறிய வேண்டுகோள் . நெறிஞ்சி வேர் , மாவிலங்கம் வேர் மற்றும் சிறு பூனை வேர் . இதன் அறிவியல் பெயர்களை தந்தீர்களானால் மிகவும் உதவியாக இருக்கும் . எனக்கும் சிறுநீரகத்தில் கல் உண்டு . இந்த அகபக்கத்தை தற்செயலாக காண்பது இயலாது ஏன் என்றால் நான் தமிழில் இணையத்தை வலம் வருவது அரிது . ஆதலால் இதை சித்தர்களின் கருணையே என்று நம்புகிறேன். இந்த நேரத்தில் இந்த குறிப்பை தெளிவுபட கொடுத்ததற்கு தோழிக்கு மிகவும் நன்றி. உங்கள் முயற்சியை தொடருங்கள். வாழ்த்துகள்.

RAVINDRAN said...

நன்று

சிவஹரிஹரன் said...

சதுரகிரியில் அன்னதானம் செய்து கொண்டுவரும் 72வயது முதிர்ந்த ஸ்ரீசிவசங்கு ஐயா அவர்கள், அவருக்கு சதுரகிரியில் ஒரு சித்தர் கற்றுக்கொடுத்த மருந்தினை இன்றளவும் இலவசமாக கொடுத்து உதவுகிறார். மூன்றே மாத்திரையில் 8மி.மீ அளவுள்ள சிறுநீரக கற்கள், சென்னையில் உள்ள ஒரு மருத்துவருக்கு வெளியில் வந்தது உண்மை. வேண்டுவோர் கண்டிப்பாக தொடர்பு கொள்ளலாம். srisivasangu@gmail.com

Unknown said...

my husband suffered very much of stone problem. he crossed so many times of lithotrypsy. how can we prevent his metabolic system by the stone formation plz don' ignore my question.

Post a comment