திரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...

Author: தோழி / Labels: , , ,"அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே".

"ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே".

"அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே".

"சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே".


என்று சக்கரம் வரையும் முறையை சொல்லும் திரு மூலர் (மாதிரிப் படம் கீழே)"அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே".

"எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே"


இந்த சக்கரத்தை பனை ஓலையிலோ, அல்லது செப்பு தகட்டிலோ கீறி தூய இடத்தில் வைத்து சிவாயநம என்று கூறி விளக்கேற்றி வைத்து தூபங்காட்டி வணங்கி வந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கி நலனுடன் முக்தி பெற வழியாகும் என்கிறார். தூய மனதுடன் வழிபட்டால் கிடைக்காதது என்று எதுவும் இல்லை என்றும், இந்திரனிடம் இருப்பது போல பொருளும் , அட்டமா சித்தியும், முத்தியும் கை கூடும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Radhakrishnan said...

சக்கரத்தில் பிழை உள்ளது.

Radhakrishnan said...

பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை. சிவாயநம எப்படி எழுதினாலும் வாசிப்பது போல் வர வேண்டும் என எதிர்பார்த்தேன், ஆனால் அது போல் அமையாது எனவே மேற்சொன்ன என் பதிவில் தான் பிழை.

Anonymous said...

எது எப்படியோ தங்கள் பதிவுக்கு நன்றி , மனதில் பக்தி மட்டும் இருந்தால் போதும் ,எந்திரமெல்லாம் இரண்டாம் பட்சம் தான் .

Rudras Breeders said...

how do you interpret these poem. could you please explain how all these sidhar poems are decoded.

testing said...

யந்திரத்தில் என்ன பிழையுள்ளது சற்று விளக்கம்

testing said...

இவ் சக்கரத்திக்கு மூல மந்திரம் உண்டுடா? இருந்தால் கூறும் படி மிக தாழ்மையாக வேண்டுகின்றேன்.
பதிலை விரைவாக எதிர்பார்கிந்றேன்

நன்றி

amlu said...

Hello Thozhi,
Is the yantra as given in the book? i am asking this because i came across a pdf that talks of Thirumanthira Sinthanaigal by Sathyavel Muruganar. This pdf shows the same yantra in a diff manner, that is it has the na ma si v ya as the first row followed by ma si v ya na as the second row followed by
si v ya na ma etc...

Please kindly let me which one is rite to be followed.
68c<9
8c<96
c<968
<968c
968c<

Post a comment