அகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...

Author: தோழி / Labels: , ,

பொதுவாக எல்லா சித்தர்களும் மருந்து வகைகளை அரைப்பதற்கும் இரசமணி கட்டுவதற்கும், இரசுத்தி, மூலிகை சுத்தி போன்றவற்றுக்கும் கல்வத்தை பயன் படுத்தினார்கள்.

அந்தக் கல்வம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார் அகத்தியர்...


"வாறான குழிக்கல்லின் மார்க்கங் கேளாய்
மைந்தனே பிரம்மாவின் சிரசுபோல
கூரான கலமணி விரல்மு ப்பத்துங்
கொள்கையாம் கலமணி விரல்நா ல்பத்து
வீறானவி ளம்பதுதான் விரலிரண்டு
விதியிலேயா ழமதுவி ரலிரண்டு
போறானயி ருபுறமும் மூக்குமாகும்
பெரிதான குழவியைத்தான் பேசுவேனே"

"பேசுகிறேன் பதினாறு விரற்கடை நீளம்
பெரிது முகவட்ட மணிவிரல் நால்வீதி
ஆககா நேரடி விரற்கடை பத்தாம்
ஆவுடையும் சிவலிங்கமும் ஆனவாறு"


கல்லானது பிரம்மாவின் சிரசு போலவும், அகலம் முப்பது விரல் கடை அளவிலும் , நீளம் நாற்பது விரல் கடை அளவும், விளிம்பானது இரண்டு விரல் கடை அளவும் குழியின் ஆழமும் இரண்டு விரல் கடை அளவும், இந்தக் கல்லின் இரு புறமும் மூக்கு நீண்டபடி இருக்க வேண்டும் (கீழே படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு) என்றும் சொல்லும் அகத்தியர், இதற்க்கு ஏற்ற பெரிதான குழவி பற்றி சொல்கிறேன் கேள் என்று பதினாறு விரல் கடை நீளமும் , கைப்பிடி நான்கு விரல் கடையும், அரைக்கும் பகுதி பத்து விரல் கடை அளவும் இருக்கவேண்டும் என்றும் இது ஆவுடையும் சிவலிங்கமும் போல இருக்கும் என்கிறார்.

ஒரு விரல்கடை என்பது ஒரு இஞ்ச் அளவையே குறிக்கும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

bala said...

வணக்கம் தோழி ..
பாம்பாட்டி சித்தர் பற்றிய உங்களது பதிவை பார்த்தேன் அருமை .....மேலும் ஏதும் அவரை பற்றிய தகவல்
இருந்தால் தெரிவிக்க இயலுமா?
சித்தர்கள் வாழ்ந்த காலம் மற்றும் இருப்பிடம் பற்றிய அறிய தகவல் அறிந்து கொள்ள ஆவல் ...... பதிலை எதிர் நோக்கி

அகல்விளக்கு said...

கல்வம் பற்றிய தகவல்கள் அருமை்...

தொடருங்கள் தோழி...

தோழி said...

@bala

தொடர்ந்து இணைந்திருங்கள் என்னால் முடிந்தவரை விவரங்களை தர முயல்கிறேன் நன்றி

தோழி said...

@அகல்விளக்கு

மிக்க நன்றி...

bala said...

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி தோழி ......

bala said...

நீங்க கோயம்புத்தூர் அருகே உள்ள மருதமலை ........பற்றி ஏதும் அறிந்ததுண்டா.......?

தோழி said...

@bala

புத்தகங்களில் படித்திருக்கிறேன், இந்தியா வரும் வாய்ப்பு எனக்கு இன்னமும் அமையவில்லை.. நன்றி...

bala said...

பதிலுக்கு மிக்க நன்றி தோழி ......மருதமலைல ..பாம்பாட்டி சித்தார்வாழ்ந்த குகை இருக்கு இப்ப அது தியானமண்டபம்
அது போல இலங்கை கதிர்காம் ......அருகே பாபாஜி சிலை மற்றும் போகர் தியானம் செய்த இடம் இருக்காம் .இதை பற்றிய
தகவல் ஏதும் உண்டா தோழி .....?நன்றி ..

தோழி said...

@bala

நீங்கள் கூறுவது உண்மைதான், விரைவில் இதைப் பற்றி ஈழமும், சித்தர்களும் என்ற தலைப்பில் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன். நன்றி

bala said...

வாவ் .............நன்றி தோழி ......உங்களது தகவலுக்காக காத்திருக்கிறேன் .....ஆவலாக .........நன்றி

bala said...

உங்களுக்கு சித்தர்கள் பற்றிய தேடலுக்கான காரணம் என்ன என தெரிவிக்க இயலுமா.......?
ரகசியம் ஏதும் இருப்பின் தவிர்த்து விடவும் ....நன்றி ..

தோழி said...

@bala

ரகசியம் ஒன்றும் இல்லை, சிறுவயதில் துவங்கிய தேடல் இன்றும் தொடர்கிறது,இனியும் தொடரும்... நன்றி..

bala said...

உங்களது தேடல் தொடரவும்.....வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் ....தோழி

தோழி said...

@bala

மிக்க நன்றி...

bala said...

என்னுடைய குரு .......அறிமுகம்..தான் உங்களது தொடர்பு .....மிக்க நன்றி குரு

Anonymous said...

மிகவும் அருமையான தகவல்கள் முன்னொரு காலத்தில் நான் தேடி அலைந்த விடயங்களை எல்லோருக்கும் பயன்படும் வண்ணம் இணையத்தில் வெளியிட்டுல்லீர்கள் இலங்கையில் சித்தர் கலைகளை கற்பிக்கும் இடங்கள் ஏதும் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும் அன்புத் தோழி ...
நன்றி

தோழி said...

@SuKa

இலங்கையில் அப்படி எந்த ஒரு இடமும் இருப்பதாக தெரிய வில்லை நன்றி..

sai said...

@தோழி

sai said...

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றி தெர்யும?

snavaneelan said...

நம் உடலில் உள்ள ஆன்மவை புரி்ந்து கொண்டு. பின் அதனை நம் ஆசையில் இருந்து பிரிக்க முடிந்தால், நாம் மற்ற ஆன்மாக்களோடு தொடர்பு கொள்ள முடியும்

rajni said...

do you found any sidda up to this, if yes could you please share with us

Karikalan said...

வணக்கம் ,
தங்களின் வலைதளதிற்குள் என்னை இணைத்துக்கொள்வதில் அகமகிழ்வு கொள்கிறேன் .

சித்தர்கள் செய்திகளை படிக்கும் நண்பர்களே உங்களின் சிந்தனைகளுக்கு செயலூக்கம் கொடுங்கள். அறிவியல் மூலம் ஆன்மிகத்தை பகிர்ந்துகொள்ள நானும் முயற்சி செய்கிறேன் . வினா பலவாக இருப்பினும் இறுதியில் விடை ஒன்றாகவே இருக்கும்.

prabha said...

பீர்மக்கல் பற்றி அறிய ஆசைப்படுகிறேன்.

srinivasan said...

tholi ungal thahavalhalai padikkumbothu en kangalil neer varuhirathu.. nandri thodarattum ungal pani. enakku thamilil type seivathu patri kooravum

Post a Comment