பரம்பொருள் சோதிமயமானது...

Author: தோழி / Labels: , ,
மேலான பரம் பொருளைப் பற்றி சித்தர்களும் சரி, ஏனைய பிற சைவப் பெரியவர்களும் சரி சோதி வடிவானது பம்பொருள் என்றே சொல்கின்றனர். ராமலிங்க அடிகளாரும் கூட இறைவனை அருட் பெரும் ஜோதி என்று தான் வர்ணிக்கிறார். ஆக, பரம் பொருள் சோதிமயமானது என்பதே சிவனடியார்களின் தீர்மானம்.

பட்டினத்தாரும் இதே போல இறைவனை சோதி என்றே குறிப்பிடுகிறார். இறைவன் பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சோதியானவன். இப்படியான சோதியை சரியாக புரிந்து சிந்தையில் வைக்காதவர்கள் மூடர்கள் என்று சொல்கிறார் பட்டினத்தார்.

"எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச்சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பார். கருத்தில்வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே".

இனி வரும் பதிவுகளில் பதினென் சித்தர்களைப் பற்றி பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

Praveenkumar said...

வணக்கம் தோழி. தங்களது ஆன்மிக தகவல்கள் தரும் பதிவுகள் அனைத்தும் அருமை. பாராட்டுகள். தொடர்ந்து தங்களது ஆன்மீக தகவல்களை வாசகர்களுக்கு அள்ளித் தாருங்கள்.
பகிர்வுக்கு நன்றி..! தோழி.

Radhakrishnan said...

பட்டப்பகலை இரவென்று கூறிடும் பாதகரே! அருமை.

Anonymous said...

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே...

Anonymous said...

அரிதான சிந்தனைக்குரிய ஆக்கங்கள் சகோதரியே !!
வாழ்க உங்கள் சேவை !!

aanmiga udhayam said...

அருமையான விளக்கம் தோழி, அருட்பெரும் ஜோதி வடிவானவன் இறைவன், என்று போதித்த இராமலிங்க அடிகளார் கூறிய புலால் உண்ணாமை பற்றியும் விளக்க வேண்டுகிறேன். " உயிரில் யாம் எம்மில் உயிர் இவயுனர்ந்தே உயிர் நலம் பரவுகேன்றார் அருட்பெரும் ஜோதி". மிக்க நன்றி தோழி.
உதயகுமார்.s

Uthamaputhra Purushotham said...

இறைவனை ஜோதி மயமாகக் கண்டவர்கள் சித்தர்கள் என்பது உண்மை. ஆனால் ராமலிங்க அடிகளாரின் காலம் மிகப் பிந்தியது. எனவே பட்டினத்தாருக்குப் பிறகு இவரும் அதை மேற்கொண்டார் என்று கூறி இருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

அன்றில் இங்குள்ள பதிவு இராமலிங்க சுவாமிகளைன் கொள்கையைப் பட்டினத்தார் பின்பற்றினாரோ என்னும் படி சந்தேகத்தை ஏற்படுத்தும். இல்லையா?

தோழி said...

@UthamaPuthra

உண்மை தான் இந்த பதிவை மட்டும் படிப்பவர்களுக்கு அந்த சந்தேகம் வரலாம், ஆனால் நான் முன்பே ராமலிங்க அடிகளார் சித்தர்களில் காலத்தால் பிந்தியவர் என்று குறிப்பிட்டிருந்தேன். அகவே தொடர்ந்து படிப்பவர்களுக்கும் குழப்பம் வராது என்றே எண்ணுகிறேன் , நன்றி...

உங்களில் ஒருவன் said...

தோழி அவர்களே,

பரம் பொருள் என்பது ஒன்றுதான் அல்லவா? நீங்கள் குறிப்பிடும் அந்தபரம் பொருளத்தான் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லாஹ் என்கிறோம்.(அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு பண்மை கிடையாது, அது ஒரு நபருடைய பெயரல்ல, தமிழில் புரிந்துக்கொள்வதானால் கடவுள் என்று சொல்லலாம்) நீங்கள் குறிப்பிடுவதுபோல் குர்ஆனிலும் மிகுந்த ஒளி மிக்கவன் என்று சொல்கிரது. ஆனால் அது எங்கும் நிறைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து உள்ளது ஆனால் எல்லாவற்றையும் தன் ஞானத்தால் சூழ்ந்துள்ளார் இறைவன் என்று வேதம் சொல்கிறது.

kaliyuga ravanan said...

யோவ் உத்தமபுத்திர......

ரொம்போ ஓவர் யா.....

சுவாமி ராமலிங்கம் சித்தர்களுக்கு எல்லாம் மஹா சித்தர் யா!!!!

கோடி கோடி சித்திகள இறைவன் மூலமா கற்றார் யா....

பட்டினத்தார் என்னதயா கிழிசா??

Antonybaskar said...

Kaliyuga ravanan avargalae...thaangal yenna கிழித்theergal...patinatharai solluvatharkku.

Anonymous said...

Nice...

Anonymous said...

Nice...

Anonymous said...

Nice...

Anonymous said...

Nice...

Post a comment