காயகற்பங் கொண்ட சித்தர்கள்...

Author: தோழி / Labels: , ,

"கேளப்பா அகத்தீசர் கற்பம் நூறு
கிருபையுள்ள நந்தீசர் கற்பம் நூறு
நாளப்பா போகமுனி நாதர் கற்பம்
நாற்பத்து நாலுகற்பம் நன்றாய்க்கொண்டார்
வேளப்பா சட்டை முனிதின்ற கற்பம்
மேதினியில் லிருபத்தோர் கற்பமாகும்
ஆளப்பா கொங்கண ரீரெட்டாக
அருந்தினார் கற்பமிக அருந்தினாரே"

"அருந்தினார் திருமூலர் அறுபத்தாறு
அற்புதமாய் கற்பன்களன்பாய்க் கொண்டார்
பொருந்தியதோர் கோரக்கநாதர் தானும்
பூதலத்தில் தொண்ணூறு கற்பங்கொண்டார்
திருந்தியதோர் ரோமரிஷி கூகைக்கண்ணர்
செப்பமுள்ள மச்சமுனி இராமதேவர்
வருந்தியே எழுபத்தோர் கற்பங்கொண்டார்
மானிலத்தில் சாகாவரம் பெற்றாரே"


சித்தர்கள் அவரவர் அனுபவித்தபடி கற்ப முறைகளைக் கூறியுள்ளார்கள் என்றும் அவரவர் கொண்ட கற்ப எண்ணிக்கைகளைத் தேரையர் பட்டியலிடுகிறார்.
அகத்தியர் 100, நந்தீசர் 100, போகர் 44, சட்டைமுனி 21, கொங்கனவர் 16 , திருமூலர் 66, கோரக்கர் 90, ரோமரிஷி 71, மச்சமுனி 71,ராமதேவர் 71. இப்படிக் கற்பம் சாப்பிட்டவர்கள் அநேகம் பேர் தெரியாமலும் இருக்கிறார்கள். வள்ளல் பெருமான் இவர்கள் காலத்துக்குப் பிந்தியவர், ஆனால் வள்ளலார் மருத்துவ காயகற்ப முறைகளை விட யோக காயகற்ப முறைகளையே பின்பற்றினார்.

அது என்ன யோக காயகற்ப முறை? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

மங்கை said...

தோழி

மரபு வழியாக வரும் நோய்களைக் கூட சில மாதங்களில் இதன் மூலம் சரியாக்கி விடலாம் என்று கேள்விபட்டேன்...உண்மையா?.. முக்கியமாக ஆஸ்துமா நோய் குணமாக எனக்கு இந்தப் பயிற்சியை சிலர் பரிந்துரைத்தனர்..

தோழி said...

@மங்கை

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன் யோக காயகற்பம் வேறு யோகாசனம் வேறு...

நீங்கள் செய்வது எது என்று சொன்னால் விளக்கம் சொல்ல முடியும் என்று நம்புகிறேன்...

மங்கை said...

காய கல்ப யோகம் பற்றி சொன்னேன்

தோழி said...

@மங்கை

காய கற்ப யோகப் பயிற்சி தனியாக செய்வது தவறு... குரு வழி மூலமே பயிற்சி செய்ய வேண்டும்... இல்லையேல் தவறான பின்விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்... இப்படி சொல்வதற்க்கு மன்னிக்கவும்.. உங்களை பயமுறுத்த சொல்லவில்லை...

மங்கை said...

:)

தோழி...

நான் அத்தன சுறுசுறுப்பில்லை...என்கிட்ட சொன்னாங்க.. ஆனா நான் இது வரைக்கும் அதை முயற்சி செய்யக்கூட இல்லை.. தெரிந்து கொள்ள கேட்டேன்...

மங்கை said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

நல்ல செய்திகளை சொல்லி வருகிறீர்கள். தோழி.. நன்றி

உங்களது பெயரில் வேறு ஒருவரும் எழுதி வருகிறாரே.. ?

மங்கை said...
This comment has been removed by the author.
தோழி said...

@மங்கை

மிக்க நன்றி...

தோழி said...

@Cable Sankar

நான் ஆரம்பம் முதல் இந்த பெயரில் மட்டுமே எழுதுகிறேன்...எனக்கு வேறு வலைபதிவுகள் இல்லை... மிக்க நன்றி...

dhysek said...

mikka nandri

Post a comment