இதமதிகச் சித்து...

Author: தோழி / Labels: , , ,

"வரிசையென்ன இதமதிகச் சித்துச் சொல்வேன்
வால் நீண்ட கருங்குருவி பிச்சு வாங்கி
உரிசையுள்ள யேரண்டத்தெண்ணெவிட்டு
ஓமெனவே மதித்து ரவியில் வைக்க
முரசதிரத் திருவேறி மையாய்ப் போகும்
மூர்க்கமுள்ள மையதனைச் சிமிழில் வைத்து
குருபதியை நோக்கி மையைப் போட்டுக்
கும்பித்து நிற்பதனால் குணத்தைக் கேள்"

"கேளப்பா நாலுறு சனங்கள் கூட்டி
கம்பிரமா யிருக்கும் கூட்டத்தேகி
கோளப்பாமிகப்பேசி சண்டை செய்வார்
குணமாக நீயடக்கப் போகும் போது
வேலப்பா மதன்ரதி போலிணங்கி நிப்பர்
வேடிக்கை பார்க்கவும் நீ பின்பு சென்றால்
காலப்பா மிகஓங்கி மிதித்துக் கொண்டு
கடினமுள்ள சண்டையிட்டு ஓடும்பாரே"


வால் நீண்ட கருங்குருவியின் பிச்சு வாங்கி விளெக்கெண்ணை விட்டு மத்தித்து வெயிலில் வைக்க மையாகும். இதை சிமிழில் பதனம் செய்து, அதனை பொட்டாக இட்டுக் கொண்டு சண்டைக்குச் சென்றால் எதிரிகள் அடங்கி நிற்பார்கள்.நீ அந்த இடத்தை விட்டு அகன்றால் மீண்டும் மிகச் சத்தமிட்டு சண்டையிடுவர்.இதைத்தான் இதமதிகச் சித்து என்கிறார் அகத்தியர்.

நண்பர்களே!, அடுத்து வரும் பதிவு, இந்த வலைத் தளத்தின் நூறாவது பதிவு. காண்பதற்கரிய ஒரு புகைப்படத்துடன் நூறாவது பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

VELU.G said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

தோழி said...

மிக்க நன்றி... VELU.G

பாலா said...

அருமை தோழி நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ....,காண்பதற்கரிய புகைப்படம்னு கண்மூடாம இருக்க வச்சுடீங்க
நூறை நோக்கி ............

நட்புடன்
பாலா

தோழி said...

மிக்க நன்றி... bala

Radhakrishnan said...

பிச்சு என்றால் என்ன? முதலில் ஊர்க்குருவி, இப்போது கருங்குருவி.

THIRUMAL said...

பிச்சு என்றால் என்ன?

Martial arts info and downloads said...

picchu enral enne?

Unknown said...

பிச்சு என்பதிற்கு பித்த நீர் என்று ஒரு அர்த்தமிருக்கிறது இங்கு அதை குறிப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை

Post a comment