பட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...

Author: தோழி / Labels: , ,


மனைவியானாலும், பிள்ளைகளானாலும், நம்முடைய உதவி பெறும் வரை தான் நம்மேல் அன்பு காட்டுவார்கள். நம்மால் அவர்களுக்கு உதவி இல்லை என்றால் அவர்களும் நம்மை வெறுத்திடுவார்கள். உயிருக்குயிரான மனைவியோ, பிள்ளைகளோ கணவன் இறந்ததும் உயிரை விட்டிருக்கிறார்களா? எத்தனை பிள்ளைகள் தந்தை இறந்ததும் உயிரை விட்டிருக்கின்றனர்? இந்த உண்மையை பட்டினத்தார் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

கட்டி அணைத்திடும் பெண்டிரும், மக்களும்,
. . . . காலன் தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை
. . . . வீழ்த்தி விட்டால்
கொட்டி முழங்கி அழுவார்; மயானம்
. . . . குறுகி, அப்பால்
எட்டி அடிவைப் பரோ? இறை வா!கச்சி
. . . . ஏகம்பனே
!

இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. உலகில் உண்மையாகவே தினமும் நடை பெறும் சம்பவம். ஒருவன் இறந்த பிறகு அவனைக் கொண்டுபோய்ச் சுடுகாட்டில் கொளுத்துவார்கள் அல்லது புதைப்பார்கள் அதோடு சரி அவனின் மனைவியோ, பிள்ளைகளோ அதற்குமேல் அவனுடன் செல்லப் போவதில்லை.இந்த உண்மையைச் சொல்வதன் மூலம் பட்டினத்தார் நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறார்.

"புகழ் பெற்று வாழுங்கள், எல்லோருக்கும் நன்மையே செய்யுங்கள், எல்லா மக்களையும் உற்றோராகக் கொண்டு உதவிபுரிந்து, நன்னெறி தவறாது வாழுங்கள் அதனால் வரும் நன்மையையும் புகழும் தான் இறந்த பின்னும் உங்களுடன் வரும்" என்பதே அது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்று காலைமுதல் வடிவுடை அம்மனைத் தரிசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
இங்கு வந்தால் சுவாமி பட்டினத்தாரைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றிம்மா.

Mugilan said...

எல்லா காலத்திற்கும் பொருந்துகின்ற பாடல்!

rajsteadfast said...

Yevvalavu periya unmai...

Mikka Nanri..

தோழி said...

மிக்க நன்றி... வல்லிசிம்ஹன்

தோழி said...

மிக்க நன்றி... Mugilan

தோழி said...

மிக்க நன்றி... rajsteadfast

Sri Kamalakkanni Amman Temple said...

இறை வா!கச்சி
. . . . ஏகம்பனே! means

i think kanchi ekambareeswarar

சுமன் said...

எவ்வளவு பெரிய உண்மை

இது தெரிந்தும் சிலர்போடும் ஆட்டம் இருக்கிறதே....

பதிவிற்கு நன்றி

புதுச்சேரி .கு .முத்துக்குமார் said...

ஓம் நமசிவாய நமஹ
அருமை தோழி

புதுச்சேரி .கு .முத்துக்குமார் said...

ஓம் நமசிவாய நமஹ
மிக அருமை தோழி

புதுச்சேரி .கு .முத்துக்குமார் said...

ஓம் நமசிவாய நமஹ
மிக அருமை தோழி

geethasmbsvm6 said...

அருமையான பதிவுக்கு நன்றி. பட்டினத்தார் குறித்த ஒரு தேடலில் இந்தப் பதிவுக்கு வந்தேன்.

Post a Comment