முதல் சித்தர் யார்?

Author: தோழி / Labels: ,

பதினெட்டு சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை.

அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் அநேக சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......,

"நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்"

- அகத்தியர் -

"சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்"

- தேரையர் -

"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல"

- போகர் -

"சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல"

- தன்வந்திரி -

"பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது
பதியான விதியாளி அறிவான்  பாரே"

- யூகிமுனி -

இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்தக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப் படும் இடங்களிலெல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

Unknown said...

சித்தம் போற்றி ! சிவன் போற்றி !!

Anonymous said...

சிவ சிவா !!!

மங்கை said...

18 சித்தர்களைப் பற்றி எழுத ஆரம்பிச்சாச்சா... தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள்

Ammu Madhu said...

எங்கிருந்து இவ்வளவு தகவல் சேகரிக்கறீங்க?கலக்கலா இருக்கு தோழி.

Mubeen Sadhika said...

உங்கள் பதிவுகள் படிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கின்றன. உங்கள் முயற்சி மிகவும் பயனுள்ளது.

அண்ணாமலை..!! said...

முற்றிலும் புதிய அருமையான தகவல்கள் முதல் சித்தரைப் பற்றி!
தொடருங்கள்!

Unknown said...

பதிவுகள் அருமை...ஆதியோகி சிவன் தான் என்பதை சித்தர்களிங் பாடல்கள் மூலம் எடுத்து உரைததர்க்கு நன்றி

NARAYAN said...

நல்ல தகவல். அனைவரும் இதனை ஒத்து கொண்டு உள்ளனர்.

தங்கள் வலைபூ அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள்.

நாராயணசாமி.ம

Anonymous said...

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

Unknown said...

nanrigal pala

Unknown said...

"Ellaam siva mayam", "om namasivaya"

AYYAN said...

amma punniyavathi, romba nanri amma. Nan thediya pala visayangal ithil iruku. Athukku than romba nanri. Thadarnthu varuven ini nan.

AYYAN said...

thodanthu varuven ini nan. Nanri

Unknown said...

if shiva is the first sittar then who is the guru for siva?
சிவன் முதல் sittar என்றால் சிவன் குரு யார்?

Post a comment