தாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...

Author: தோழி / Labels:

தாயத்து அல்லது தாயித்து எனப்படுவது, மந்திரத் தகடு அடங்கிய அணி அல்லது ஆபரணம் ஆகும். இவை தனிப்பட்ட மனிதர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் பொருட்டு உருவாக்கப் படுபவை. இவை பெரும்பாலும் சிறிய உலோக உருளை வடிவத்தில் இருக்கும். இதனுள் சிறிய யந்திர தகடு, மந்திரங்களினால் உருவேற்றப் பட்டு அடைக்கப் பட்டிருக்கும்.

தாயத்துகளில் பயன் படுத்தப் படும் யந்திரங்களுக்கும் பூஜையில் வைத்து வணங்கப் படும் யந்திரங்களும் வெவ்வேறானவை......தாயத்துகளுக்கான யந்திரங்கள் உருவத்தால் சிறியவை, மேலும் இதனுடன் வேர், புனுகு, ஜவ்வாது , திருநீறு, மேலும் சில எண்ணெய் வகைகள் சேர்த்தே தாயத்தில் அடைப்பதுண்டு. தாயத்தில் அடைக்கப் படும் யந்திரங்கள் குறிப்பிட்ட சில மனிதர்களின் குனங்களுக்கேட்ப தொழிற படுபவை, ஆனால் ஓரிடத்தில் வைத்து வணங்கும் யந்திரங்கள் பெரும்பாலும் பரந்த சக்தியை உடையவை.

உலகம் முழுதும் பல்வேறு சமுகம் மற்றும் சமயத்தார் காலம் காலமாய் தாயத்துகளை பயன் படுத்தி வருகின்றனர். சித்தர்களும் தங்களுக்கே உரிய தனித்துவமான முறையில் பல தாயத்துக்களை பழக்கத்தில் வைத்திருந்தனர்.

இவை பெரும்பாலும் தங்களின் சீடர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப் பட்டவை. கொடிய வன விலங்குகள் அணுகாமல் இருக்கவும், உயிர் கொல்லும் விஷ ஜந்துக்களிடம் காப்பாற்றவும், மேலும் வைத்திய காரணங்களை முன்னிருத்திய மருத்துவ தாயத்துகளையும் உருவாக்கி பயன் படுத்தி வந்தனர். இவற்றை தயாரிக்கும் முறைகள் ரகசியமானவை. இதன் விவரங்களை தங்களின் பாடல்களில் சொல்லியிருக்கின்றனர்.

தற்போது வணிக ரீதியாக விற்கப் படும் தாயத்துகள் பலவும் போலியானவை.இவை பலருக்கும் உரிய பலனை அளிக்காததனால் தாயத்துகள் குறித்த அவநம்பிக்கை பொதுவில் மேலோங்கி இருக்கிறது. ஆனால் சித்தர்கள் அருளிய முறையில் உருவாக்கப் படும் தாயத்துக்கள் சக்தி வாய்ந்தவை.அவை குறித்து பிரிதொரு சமயத்தில் விரிவாய் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Radhakrishnan said...

தாயத்து தந்த நம்பிக்கை முன்னர்; தாயத்து தரும அவநம்பிக்கை இப்போது.

Sabarinathan Arthanari said...

நல்ல தொடக்கம்
நன்று

sury siva said...

தான் எனும் செருக்கறுத்தாருக்கு
தாயத்து ஏதுக்கடி = குதம்பாய்
தாயத்து ஏதுக்கடி !

தான் யாரெனத் தெளிந்தவர்க்கும்
தாயத்து ஏதுக்கடி = குதம்பாய்
தாயத்து ஏதுக்கடி !!


சுப்பு ரத்தினம்.

murugadas said...

குன்றிமணிப் பருப்பு என்றால் என்ன,அவை எங்கு கிடைக்கும் போன்ற விவரங்களும் சேர்த்து தந்தால் படிப்பவர்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்குமே

ganesh said...

THANKS

Post a comment