கருவூராரின் ஐங்கோண யந்திரம்...

Author: தோழி / Labels: , ,

"தானேதா னாறுவரை நேரே கீறி
தன்மையா யாறுவரை குறுக்கே கீறி
கோனேகே லிருபத்தியஞ்சு மாச்சு
கொற்றவனே யறை தோறும் பீடங்கேளு
தேனே பார் முதலரையில் முக்கொனந்தான்
தெளிவாக மறுவறையில் நாற்கோணம் தான்
மானே கேளடுத்த ரண்டை வீட்டில்
மயக்கமின்றி வட்டமத்தை போடு போடு
போடே நீ அடுத்த வரையங்கோணம் பார்
பொன்னவனே யாரு கோணம் அடுத்தவீடு
நீஎநீ நடுவ ணையாம் பிடித்த மாறு
நாயகனே வரின்தொரும் மாற்றிக் கொள்ளு
வாடாதே வயநமசி என்று போடு
வகையாக நடுவனையாம் முன்போல மாறு
தேடாதே வகரத்தில் றீயும் போடு
தெளிவாக யாக்ரத்தில் ஸ்ரீயும் போடே
போடவே போட்டவுடன் சொல்லக் கேளு
புகலான நாகரத்தில் ஐயும் போடு
தேடவே மகரத்தில் கிலியும் போடு
நேர்மையாய் சிகாரத்தில் சௌம்போடு
நாடல்லாய் ஏ, ஒ, அ, இ, உ போடு
வாகாத வகாரத்தில் லம்தானையா
சஸ் வகுர சொல்வேன் கேண்மா
மாயவ யகரத்தில் சௌம்போடு
போட்டவுடன் நகரத்தில் ஐம்தானப்பா
பொன்னவனே மகாரத்தில் ஈம தான் போடு
நலமாகப் போட்டு மல்லே நவிலக் கேளு
தாட்டிகமாய் இவையெல்லாம் கோர்வையாக
தப்பாமல் அறை தோறும் வரைந்து கொண்டு
காட்டுவேன் நடுவணைய முன்போல் மாறு
கருத்தாக வரை தோறும் இப்படியே மாறே"

என்று ஐங்கோண யந்திரம் வரைவதை சொல்லும் கருவூரார் (படம் கீழே)
"மேலான புத்தி கொண்டு மாறாமல்
கண்டு மாயா தானடைக்க யந்திரந்தான்
பாலகா தேயுமல்லோ மகிமை மெத்த
பாருலகில் உனக்கீடு சொல்லப் போமோ
காலான கால் கண்டு நின்று பூசி
கைகண்ட வசியமடா இன்னும் கேளே
கேளப்பா கீழ் திசையில் புலிதோலப்பா
கேடியான ஆசனத்தில் வீற்றிருந்து
நாளப்பா போகாது ருத்ர மாலை
ஆளப்பா செபன்சே வாய்மலர ரோமமல்லி
ஆளப்பா சதாசிவம் போலிருந்து கொண்டு
அடைவாக பூசிக்க வசியமாகும்
கண்மணியே கலங்காதே ஆடிப் பாரே
பாரப்பா அதிசயமா இந்த போக்கு
அவனியிலே கிடையாது சொன்னேன்
சேப்பா செகமெங்கும் கிடையாதையா
கோடியில் ஒருவனல்லோ அறிவானிதை
கோடி சித்தும் கனத்துக்குள்ளே வருமே
நாடிப்பார் பெரியோரை வணங்கி நில்லு"


மேற் சொன்ன பாடல்களின் படி, ஒரு காரீயத் தகட்டிலோ, அல்லது பொன் அல்லது செப்புத் தகட்டிலோ, இந்த யந்திரத்தைக் கீறி தூய இடத்தில் வைத்து ஊது பத்தி , சாம்பிராணி கற்பூரதீபங்காட்டி, வழிபட வேண்டும். கிழக்கு நோக்கி புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து, ருத்திராட்ச மாலை கொண்டு ஜெபம் செய்ய வேண்டும்.(இன்றைக்கு புலித்தோல் ஆசனம் தேடிப் போனால் ஜெயிலில் களி திங்க வேண்டியிருக்கும் என்பதால் புலித் தோலாசனம் தரும் உஷ்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, அதற்கு மாற்றாய் சணல் கோணியை பயன் படுத்தலாம்.)

"ஓம் றீம் ஸ்ரீம் ஐம் கிலீம் சவ்வும் வயநமசி சர்வலோக வாசியாய சிவ சிவ சுவாஹா"

என்ற மந்திரத்தை தினசரி 1008 தடவை வீதம் ஒரு மண்டலத்திற்கு தொடர்ந்து சொல்லி வந்தால் இது சர்வ லோக வசியமாகுமாம். இதை முறையாக செய்பவரை மிஞ்ச உலகில் எவருமில்லை என்கிறார் கருவூரார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

அண்ணாமலை..!! said...

சித்தர்களின் மிகப்பெரிய ரகசியங்கள்
இங்கே எளிதாக..
உங்கள் தொண்டு தொடரட்டும்!

தோழி said...

@அண்ணாமலை..!!
மிக்க நன்றி...

செ.கானியப்பன் KANIYAPPAN.S said...

Enthirathin padathai theliva anuppavum pls

செ.கானியப்பன் KANIYAPPAN.S said...

konjam theliva Enthirathin padathai anuppavum,
skaniyappan@gmail.com

THIRUMAL said...

wow

Anonymous said...

"வாகாத வகாரத்தில் லம்தானையா
சஸ் வகுர சொல்வேன் கேண்மா
மாயவ யகரத்தில் சௌம்போடு
போட்டவுடன் நகரத்தில் ஐம்தானப்பா
பொன்னவனே மகாரத்தில் ஈம தான் போடு" இந்தப்பாடலில் ”சஸ்” என குறிப்பிட்டிருப்பது ”நம”என்று யந்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை கூறமுடியுமா? இவ்வாறான மாற்றத்தால் யந்திரத்தின் சக்தி சரியான முறையில் இயங்குமா?

HHH said...

1."tharpai pullu" mat is a good substitute for tiger's skin. the basic idea is to prevent the energy gained (when chanting the mantra) from draining into the earth.
2. a wooden "palagai" is another substitute - but i dont know the details of what wood wood should be used etc.
3.a silk cloth is also a good substitute.

Unknown said...

can you send me this clear pic without link details... i would like to frame..

Unknown said...

மிகவும் தேடியவிசயம்

Post a comment