ஜீவ காருண்யம்...

Author: தோழி / Labels: , ,

பத்திரகிரியார் ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த கோட்பாடாகவே உபதேசிக்கின்றார். உயிர்களைக் கொன்று அவற்றின் மாமிசங்களைப் புசிப்பதை கண்டிக்கிறார். உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தன்னுயிராக நினைத்து நேசிப்பது ஒரு தவம் என்று சொல்கிறார் இவர்.

இராமலிங்க அடிகளாரும் பிற உயிட்களிடம் கருணை காட்டுவதை உயர்ந்த நெறியாக மக்களுக்கு உபதேசித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு உழலாமல்
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?


என்கிறார் பத்திரகிரியார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

Anonymous said...

மிகவும் சரி . எதை அனைவரும் உணர வேண்டும்

Anonymous said...

சீவகாருண்யமே சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனம் என்கிறார் வள்ளலார்.

தோழியின் பதிவு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது எனினும், வள்ளலாரின் வாய்மொழியையும் சற்று காண்போம்.

"புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல்
விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூஜைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும், உணவை நீக்கிஉறக்கத்தை விட்டு விஷயச்சர்புகளைத்
துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்சம் என்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழ
மாட்டார்கள் என்று உண்மையாக அறிய வேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்"
என்று வள்ளலார் கூறுகிறார்.

sachin gallery said...

lakhs of thanks

Post a comment