பிறையதிகச் சித்து...

Author: தோழி / Labels: , ,

"பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
பண்பான பிறையதிகச் சித்துசொல்வேன்
காரப்பா திக்கப் பூண்டு தனைக்கருக்கி
கருவானா எரண்டத்தெண்ணெவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்திலாட்ட
விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்ப சிமில்தனிலே பதனம் பண்ணித்
திருவான பதிநோக்கி திலாகம் போடே"

"போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
போக்குடனே நாலுதிக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிகமாகத் தோன்றும்
நாரான மானிடர்க்கு அப்படியே காணும்
வாட்டமுடன் இடதுகண்ணை மூடிப்பார்த்தால்
வலமான சூரியன் போல வரிசை காணும்
காட்டாதே உலகத்தி லிந்த நூலை
கர்மவிதி தீர்ந்தவர்க்கு காட்டு காட்டு"


திகைப் பூண்டை கருக்கி எரண்டத்தெண்ணை விட்டு கல்வத்தில் அரைக்க மைப் போலாகும். இதனைச் சிமிழில் பதனம் பண்ணி, திலகமிட்டுக் கொண்டு அமாவாசையில் இருட்டில் பார்க்க நாலு திசையும் வெளிச்சம் தெரியும்.இடது கண்ணை மூடி வலதுகண்ணால் பார்க்க சூரிய ஒளியில் பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படித் தெரியும்.

ஆனால் இந்த நூலை உலகத்தவருக்குக் காட்டாதே, கர்ம வினை அறுந்தவர்களுக்கு மட்டும் கொடு என்கிறார் அகத்தியர்.

இதுதான் பிறையதிகச் சித்து எனப்படும். அடுத்த பதிவில் வேறொரு சித்தினை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Radhakrishnan said...

ஆச்சரியமாக இருக்கிறது. பூண்டு மருத்துவ குணம் வாய்ந்தது.

தோழி said...

மிக்க நன்றி... V.Radhakrishnan.

அண்ணாமலை..!! said...

இந்த சித்தர் பாடல் படிப்பதற்கும் நன்றாக உள்ளது! தோழி! அதென்ன
எரண்டெத்தெண்ணை??

தோழி said...

எரண்டத்தெண்ணை என்பது விளெக்கெண்ணையின் மறை பொருட் பெயர் நன்றி

Unknown said...

@தோழி

what an info.thanks

Kumar P said...

திகைப் பூண்டு என்று சொல்ல காரணம் என்ன தோழி ?

raja said...

erandathennai entral enna?

Nainbain said...

Tholi vanakam ,

Whoingal tharavukal nalila tharavukal.

Thikai pooindu enpathu enna ?

Satharana pooinda ???

Is there anyway that i can link these updates to my email account please let me know..

Thank you very much

Unknown said...

திகைப்பூண்டு: மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை என்றே தமிழ் அகராதியில் சொல்லப்பட்டிருக்கிறது ஆகவே இது சாதாரண பூண்டு அல்ல.

Post a comment