"உண்டான சித்துவகைக்கு குவமை கேளு
உறுதியுள்ள புலத்தியனே உனக்காய் சொல்வேன்
செண்டான ஊர்க் குருவி பிச்செடுத்து
செந்தேனும் கருன்தேனும் விட்டு மைந்தா
நன்றாக மத்திக்கும் போல் மைந்தா
நன்மையுள்ள மைபோல நலமாய்க் காணும்
குன்றாத சிமிழ் தனிலே பதனம் பண்ணி
குருவான பத்தி நோக்கி திலகம் போடே"
"போட்டவுடன் ரேசகமும் பூரகமும் பண்ணி
புனிதமுடன் கும்பகத்தில் நின்றால் மைந்தா
நாட்டமுடன் நாலுதிக்கில் உள்ள சேதி
நலமாய் தோணுமடா நலாமாய் மைந்தா
தொட்டமுடன் இந்த முறை சித்து தானும்
திறமான பிர வதிகச் சித்து மாகும்
வாட்டமில்லா மனதடங்கி நில்லு நில்லு
மைந்தனே இன்னுமொரு வரிசை கேளு"
நாம் அறிய இருக்கும் அறுபத்தி நான்கு சித்துக்களையும் அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதைப் போலவே அமைந்திருக்கிறது.
ஊர்க் குருவிப் பிச்செடுத்து அதில் செந்தேனும் கருந்தேனும் விட்டு மத்திக்க மை போலாகும். அதை சிமிழில் அடைத்து சேமித்து வைத்துக் கொண்டு, தேவைப் படும் போது உன் குருவை நினைத்து கும்பிட்டு திலகமாக நெற்றியில் இட்டுக் கொண்டு கும்பித்து நிற்க நாலு திசைகளின் செய்திகளையும் உன்னால் உணர முடியும்.
இது தான் பிரவதிகச் சித்து என்கிறார் அகத்தியர்.
அடுத்த பதிவில் இன்னுமொறு சித்து முறையினை காண்போம்.
Post a Comment



12 comments:
/// உறுதியுள்ள புலத்தியனே ///
தான் (அகத்தியர்) வழி தீரமாய் நிற்பவன்.
/// தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதைப் போல ///
இது சரிதானா? நிறைய சித்தர்கள் புலத்தியர் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனின் அர்த்தம் பூவுலகில் இருக்கும் மனிதர்கள் என்றே, எனது கருத்து.
தேவன்
http://gnanamethavam.blogspot.com
நமக்கு கிடைத்திருக்கும் சித்த மருத்துவ நூல்களில்...பரமசிவன் அகத்தியர்க்கும், அகத்தியர் புலத்தியர்க்கும் புலத்தியர் ஏனைய சீடர்களுக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய அனைத்தையும் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்துதுடன் இந்த நூலின் ஆரம்பத்திலேயே உலகத்தவருக்குக் கிடைக்கக் கூடாது என்று சொல்லப் பட்ட காரணத்தால் புலத்தியர் என்பவர் தனி மனிதனே என்பதும் புலனாகிறது.... நன்றி
ஊர் குருவியை பிச்செடுக்க என் மனம் இடம்
தரவில்லையே...
இந்த பதிவின் நோக்கமே விவரங்களை பகிர்ந்து கொள்வதுதான். எனவே, தயவு செய்து இம்மாதிரியான எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்... நன்றி.
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே - 199 (திருமந்திரம்)
இதில் வரும் புலையரை என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன அம்மையே,
அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில் “அன்றான புலஸ்தியனே மாணாக்கனே அருமையுள்ள கண்மணியே கழற்கேண்மா” என்கிறார். இதன் படி அகத்தியரே தனது மாணவன் புலஸ்த்தியன் என்கிறார்.
அனால், நீங்கள் குறிப்பிட்ட பாடலில் திருமூலர் சொல்லும் புலையரை என்பது மக்களைக் குறிப்பது உண்மை தான். அது அகத்தியர் சொல்லும் புலஸ்தியரை அல்ல…
நண்பரே, தாங்கள் என்னை தோழி என்றே அழைக்கலாம். அதையே நான் விரும்புகிறேன்... நன்றி..
என்றென்றும் நட்புடன்,
தோழி.
சரி
மிக்க நன்றி... winmani
நல்ல பாடல்.
மிக்க நன்றி... V.Radhakrishnan
pichu enbathu paravayin yecham enbathu sariya tholiye ?
auer kuruvi piseseduththu enraal enna? eppadi eduppadthu
Post a Comment