குருவை அடையாளம் காண்பது எப்படி?

Author: தோழி / Labels:

இந்த ஆன்மா பரம் பொருளில் இருந்து வந்தது. அந்தப் பரம் பொருளிலேயே சென்று ஒடுங்க வேண்டும். ஆனால் இது தன்னை "தான்" என்று கருதி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறது. அந்த இன்னல்களில் இருந்து விடுபட்டு தன்னை அறியவும், பரம்பொருளை அறியவும் ஞானம் பெறவேண்டும். அந்த ஞானத்தை அடைய வழிகாட்டுபவரே குரு என்பவர்.

குரு இன்றி ஞானம் இல்லை, ஞானம் இல்லை என்றால் முக்தி இல்லை.

"கு" என்ற எழுத்து இருளைக் குறிக்கும். "ரு" என்ற எழுத்து ஒளியைக் குறிக்கும், அஞ்ஞான இருள் நீக்கி மெய்ஞான ஒளி தருபவர் குரு.

"சத்குருவின் அருளால் மனதைச் சும்மா இருக்க செய்தாலன்றி எல்லாரும் விரும்பும் அமைதியை எவ்வழியிலும், எவ்வேளையிலும், எவ்விடத்திலும் எவராலும் அடைய முடியாது" என்பார் ரமணர்.

தகப்பனுக்கே உபதேசம் செய்து குருசுவாமியாகியவர் முருகன். ஆகவே குருவுக்கு வயது என்பது இல்லை. குருவானவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். எந்தப் பாலினத்தவராகவும் இருக்கலாம்.

போலிக் குருவை அடையாளம் கண்டு கொண்டால் உண்மைக் குருவை யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்ளுவார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழு மாறே"


- திருமந்திரம் -

"ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே"

- திருமந்திரம் -

'வீணான நினைவுகளை விடாமல் எண்ணுபவர் செய்யும் உபதேசத்தில் சிவத்தியானம் சிறந்து வெளிப்படாது தீமைகளே வெளிப்படும். அவுபதேசத்தைக் கேட்பவர் அறிவு கெடும். அக்குருவால் வாழும் நாட்டுக்கும் அரசுக்கும் தீங்கு வரும்' என்கிறார் போலிக் குரு பற்றி திருமூலர்.

குரு ஒளியாயிருக்கிறார், சீடனுக்கு ஒளியை வழங்குகிறார், சீடனின் மனதில் இருக்கும் இருளை போக்குகிறார், சீடனை ஒளிமயமாக்குகிறார். ஆகவே எவர் சிந்தனைகள், சொற்கள் உன்னை தெளிய வைக்கிறதோ அவரே உனது குரு ஆவார் என்கிறார் சட்டைமுனி.

ஆகவே, உங்களைத் தெளிய வைப்பவரை உணர்வது உங்கள் உள்ளுணர்வேயாகும். அந்த உள்ளுணர்வு உங்கள் குருவை உங்களுக்கு அடையாளம் காட்டும் என்கிறார் சட்டைமுனி.

இனி சித்தர்கள் சொன்ன சிறு சிறு மருத்துவ முறைகளைப் பற்றி பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

chandru2110 said...

நான் உங்களை குருவாக அடையாளம் கண்டுகொண்டேன்.

தோழி said...

@chandru2110

யாராவதும் எதாவதும் சொல்லிடப்படாதே குருன்னு பின்னால போய்டுவீன்களே... (இவங்கள திருத்த முடியாது)
சரி ஆச்சிரமம் அமைக்க நன்கொடை தாங்க முதல்ல... அதுக்கு அப்புறமா யோசிச்சு சொல்லுறேன் சீடரா ஏத்துக்கலாமான்னு.. :))

chandru2110 said...

ரொம்ப மகிழ்ச்சி . ஆசிரமம் அமைக்க பணம் கேட்டு உங்களை நீங்களே போலி குருன்னு அடையாளப் படுத்திட்டீங்க. நானும் அடையாளம் கண்டுகொண்டேன். எனக்கு சீக்கிரமே உண்மையான குரு கிடைத்துவிடுவார்ன்னு நம்பிக்கை வந்துட்டு. நன்றி போலியை அடையாளப்படுதியதர்க்கு.

தோழி said...

@chandru2110

மிக்க நன்றி நல்ல குரு கிடைத்து நலமாக வாழ வாழ்த்துக்கள்...

டவுசர் பாண்டி... said...

குருவின் அருள் எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வரலாம், ஆனால் அதற்குத் தகுதியானவர்களாய் நாம் இருக்க வேண்டும்.

வெறும் தேவையும், தேடலும் மட்டுமே தகுதியாகுமா?, அல்லது வேறெதுவும் தேவையா?....விளக்கினால் தன்யனாவேன்

தோழி said...

@டவுசர் பாண்டி...
முதலாவதாக தேவையும், அதற்கேற்ற சிறந்த தேடலும் முக்கியம்... நன்றி..

ஸ்வாமி ஓம்கார் said...

நல்ல வடிவம். உங்கள் பணி சிறக்கட்டும்

தோழி said...

@ஸ்வாமி ஓம்கார்

உங்களை மாதிரி பெரியவர்கள் வந்ததே எனக்கு பெருமை...உங்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி..

Anonymous said...

அருமையான பின்ஊட்டம் தோழி :)))

Anonymous said...

அனைவருக்கும் குரு என்பவர் நிச்சயம் இருக்கவேண்டும் , அப்படி குரு கிடைக்கவில்லை என்றால் பிறகு அந்த ஈசனையே குருவாக எற்றுகொள்வதில் தவறில்லை

snavaneelan said...

எல்லோரும் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறிர்கள்.

வார்த்தைகளுக்கு அப்பால் சிக்கி சிறைப்ப்டு இருக்கும் அர்த்ததுக்கு உயிர் கொடுங்கள்.

உண்மையில் சித்தர்கள் சொருபம் விளங்கும்.

snavaneelan said...

குரு என்பவர் உண்மையில் ஒரு தனி நபர் அல்ல.
நம் சொந்த அனுபவம்+ பயிற்சி.
இது இரண்டும் சேர்ந்து வெளிப் படுத்தும் உள் ஆற்றல்.

கோடானு கோடி விசயங்கள் உலகத்தில் உள்ளது. நாம் அறியாததை அறியச் செ்ய்து,பின் அந்த விசயத்தை, நம் ஆற்றல், இச்சை, தகுதி அறிந்து
நம்மிடம் வளர்ப்பவர் குரு என்று சொல்லலாமா?

என் கருத்து இல்ல.

இதற்கு எல்லாம் அப்பற்பட்டு உன்னில் இருந்து...
உன்னை வழி நடத்தும் சக்தி எதுவோ ..உனக்கு
உன்னுள் வரும் சந்தேகத்தை உடைத்து...உண்மையை உணர செய்யும் விந்தை
எதுவோ அதுவே குரு.. உணர வேண்டும்.
கண்களால் தேட கூடாது.
தேடினால் காணாமல் போவாய்.
பா்தைகள் மாற்றி வைக்கப் பட்டு உள்ளது.

மன்னிகவும்.

santhanam said...

ஒருவருக்கு , நடப்பு நிகழ்சிகளில் தெரியாத ஒன்றை ஒருவர் தெரிய படுத்தினால் அவரே குரு .அந்த செயல் சிறியதோ , பெரியதோ .

PREMKUMAR said...

HOW CAN TYPE IN TAMIL.

Rathnavel said...

அருமை.
வாழ்த்துகள்.

Kanna said...

@Premkumar: http://www.google.com/ime/transliteration/ ... இதனை தரவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்ய பயன் படுத்தவும் - முரளி கண்ணா

Rajan said...

எந்த ஒரு மனிதனும்(தேகதாரி) ஞானம் கொடுக்க முடியாது. யாருக்கு தனக்கென்று தாய் தந்தை ஆசிரியர் & குரு இல்லையோ,யார் கர்ப்பத்தில் இருந்து ஜென்மம் எடுப்பதில்லையோ அவரே சத்குரு. God சிவா தவிர வேறு யாரும் முக்தி ஜீவன் முக்தி கொடுக்க முடியாது அவரே நமது தந்தை ஆசிரியர் & சத்குரு
pls visit nearby brahmakumaris meditation centre www.bkwsu.org www.brahmakumaris.com

srinivasan said...

உங்களுடைய குரு யார்

mega nathan said...

respetful sister i like to speak with u in phone would u please tell me u r number please

Srinivasan Rajagopalan said...

Rajan2010 a buman can give self realisation . Instead of visiting brammakumRi sangam pl visit ramanashramam or yogiramsuratkumar ashram Ts thiruvannamalai

gopi said...

udalal iranthavargalai guru vaga erkalama? Shirdi sai Baba, yogi ram surathkumar.. pondrorai..

Sara30 said...

ungaludaya ovovndrum arumaiyana pokkisham
vazthkkal

Sairam said...

வணக்கம்,

நல்ல பதிவு,
வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !
நன்றி !

Suba Krish said...

Hi my name is Balakrishnan ineed to contact u.please give me ur contact details.my contact details.ph: 0015879897784, subakrish86.bala@gmail.com.thankyou.

Post a Comment