"மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்போர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ?
அலையாமல் அகத்தினை அதன் பால்வைத்தோர்
அழியார் என்றே நீ துணிந்து ஆடு பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
அதிக பொருள் சேர்த்து வைத்திருக்கும் யாருமே இறக்கும் போது அவற்றைக் கொண்டு செல்வதில்லை. உலக இன்பங்கள் எல்லாமே வெறும் மயக்கங்களே தான். உண்மையிலேயே அழிவில்லாதது பரம்பொருள் ஒன்று மட்டுமே, அந்தப் பரம் பொருளின் மீது நம்பிக்கை வைத்து அதனை நாடி நின்றவர்களுக்கு என்றுமே அழிவு வருவதில்லை. உலக இன்பங்களில் மனதை அலையவிடாமல், இறைவனை நினைத்திருப்பவர்கள் நிலையான பேற்றைப் பெறுகிறார்கள் என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
4 comments:
சித்தர்களுக்கு குடும்பம் இல்லை அதனால் நாம் கொண்டு செல்வதில்லை எனவும் பரம்பொருள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் எனவும் எழுதிவிட்டார்கள். ஆனால் கிரகஸ்தர்கள் அந்த பணத்தை அடுத்த அடுத்த சந்ததிகளுக்கு உதவும் வண்ணம் அல்லவா சேர்த்து வைக்கிறார்கள். நல்ல பாடல் , சித்தர்களுக்கு மட்டுமே.
மிக்க நன்றி... V.Radhakrishnan
இருக்கு என்பவரிடம் இல்லை
இல்லை என்பவரிடம் இருக்கிறது - அறியாமை
வாழ்க வளமுடன்
இருக்கு என்பவரிடம் இல்லை
இல்லை என்பவரிடம் இருக்கிறது - அறியாமை
வாழ்க வளமுடன்
Post a Comment