சித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்...

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் பாடல்கள் ஆழமான மறை பொருள் கொண்டு விளங்குபவை. பொதுவாகவே சித்தர் பாடல்களின் கருத்து இது தான் என்று அறுதியிட்டுக் கூறுவது மிகவும் கடினமாகும். சித்தர் பாடல்களுக்கு உரை சொன்னவர்களும், பாடல் எங்கே நெருடுகிறதோ அந்த இடங்களை மழுப்பலாகவே விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

சில பாடல்களில் வருகின்ற வார்த்தைகள் நமக்குப் பழக்கமான பொருள் குறிப்பது போல இருந்தாலும், உண்மையில் அந்தச் சொற்களுக்கு அழமான வேறு பொருள் உள்ளதை நம்மால் உணரமுடியும், உணரும் அந்தப் பொருளை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுத்தில் வடிப்பது மிகவும் கடினமாகவே இருக்கின்றது.

கீழே உள்ள இரண்டு குதம்பைச் சித்தர் பாடல்களை இதற்கு எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம்.

"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?"

"மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?"


நான் அறிந்த வரையில் இந்தப் பாடல்களின் முழுமையான விளக்கத்தை யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

20 comments:

Unknown said...

முடிந்ததை தெரிந்து கொள்வோம்
முடியாததை விட்டு விடுவோம்.
-----
கற்றது கை மண்ணளவு
கல்லாதது உலகளவு

VELU.G said...

உண்மை தான்

அண்ணாமலை..!! said...

சித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்...ஆனாலும் தங்களது முயற்சி மிகப்பெரிது தோழி!

அதனாலேதான், இது ஒரு தனித்துவமிக்க வலைப்பூ..!

puduvaisiva said...

"சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ"
- அழுகணிச் சித்தர்

சித்தர் பாடலுக்கு முழுமையான விளக்கம் பெற வேண்டுமானால் அதன் மறை பொருள் தெரிய குரு மந்திரம் மிக அவசியம்.

இல்லை என்றால் மனோமணி தவத்தில் வித்தகராக இருந்தால் சிறு தேவதை வசியம் மூலம் எழுத்துகளை மாற்றி போடும் கலைகளின் திறமையால் இவர்களை அக்காலத்தில் சித்தவித்தி என்று கூறுவார்கள்.

Unknown said...

இடம்,பொருள்,காலம்,நிமித்தம்,அறிந்தால் ஜீவநாடி அறியலாம்.ஜீவநாடி அறிந்தால் பரிபாஷை தோன்றும் அதன் மூலம் அறியலாம் இதன் பொருளை,,,நன்றி

Anonymous said...

"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?"

வெங்காயம் ,மிளகு, சுக்கு உட்கொண்டு வாழ்ந்தால்
உணவு பசிக்காமல் இருக்கும் நோய் எப்படி உடலில் வரும்.
சரிதானா ?

தோழி said...

மிக்க நன்றி... Sri Kamalakkanni Amman Temple

தோழி said...

மிக்க நன்றி... VELU.G

தோழி said...

மிக்க நன்றி... அண்ணாமலை..!!

தோழி said...

உண்மை தான் குருவருள் தேவை... நன்றி..புதுவை சிவா.

தோழி said...

மிக்க நன்றி.. hai_cha70

தோழி said...

வெங்காயம் உண்பதை வெறுத்தவர்கள் சித்தர்கள் ஏன் எனில் வெங்காயம் ஆசைகளை தூண்டும் என்பது அவர்கள் கருத்து. ஆகவே இங்கு வெங்காயம் உண்பதைப் பற்றி சொல்லவில்லை... நன்றி... winmani.

Radhakrishnan said...

ஒருமுறை கோவிலில் ஒருவர் இந்த பாடல்களுக்கு விளக்கம் கொடுத்து பேசினார். எனக்கு அப்போதே புரியவில்லை. பல முறை படித்த பின்னர் புரிந்து கொண்டேன்.

மிகவும் எளிமையாகத்தான் சொல்ல வருகிறார், அதில் ரகசியம் மறைந்திருக்கும் என கடவுளை மறைந்திருப்பது போல நாம் நினைத்து விடுகிறோம்.

வெங்காயம் அல்ல வெண் காயம். சுக்கு, மிளகு போன்றவையும் இறைவன் அருளும் இருக்கும் போது உண்பதும் அதனால் வரும் ஆசைகளும் எதற்கு என்கிறார்.

மாங்காய் பால் என்பது கசக்கும். இறைவனை பின்பற்றுவது லௌகிக வாழ்வில் இருப்போர்க்கு கசக்கும். இப்படி எல்லா சுகங்களையும் விட்டுவிட்டு இறைவனே சுகம் என இருப்போருக்கு இனிக்கின்றதாய் நினைக்கப்படும் தேங்காய் பால் எதற்கு என்கிறார் அவர்.

தோழி said...

மிக்க நன்றி... V.Radhakrishnan

rajsteadfast said...

nalla Pathivu. Keep it up.

Thanks

Lingeswaran said...

Maangaaipaal denotes 'the Paerinbam-the feeling of communion with god'.
Thengaaipaal denotes 'Sitrinbam-the seonsory pleasures'.
Most important is that 'malai mael denotes the THURIYAM OR SAHASRADHARAM' Center in human body.

shema said...

i read somewhere that maangapal is a harmone secreted from the peneal gland which tastes like nectar in the ulva. Could this be correct? but what is thengapal?

Tukkaṇamkuruvi said...

"மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?"

சித்தர் பாடலில் வரும், மாங்காய்ப்பால் என்பது சுப்ரமண்ய அனுபூதி ; மலைமேல் இருப்பது என்பது, உச்சியில் உள்ள பிரம்மரந்திரத்தில் (யோக வழியில்) உண்மையான உறவுகொண்டு அழியாத ஆனந்தத்தை அடைவது.

தேங்காய்க்கு மூன்று கண்கள். அதே போல நமக்குள்ளும் மூன்று தீயவை இருக்கின்றன. காமம், கோபம், மயக்கம் என்பவையே அவை. இந்த மூன்று தீமைகளையும் நீக்கி, பிரம்ம மரந்திரத்தை அடைந்து பிரம்ம அனுபூதி நிலைபெற்ற பெரியவர்களுக்கு, இந்த உலகத்தில் எதன் மேலும் ஆசை, கோபம் அறியாமை உண்டாகாது.

Unknown said...

maangai paal enbhadhu thalai oochiyil surakum amirtham aagum.thaengaai paal enbhadhu ulaga icchai.so ennaku intha amirtham irukka,naan yean intha ulahil aasai kolla veandum entru itharku artham

Unknown said...

Here maangaaip paal = amirtham - ambrosis secreted in the head by pineal gland by saathanaas

Post a comment