ஒலிகளுக்கும் உருவம் உண்டு...

Author: தோழி / Labels:


ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.

"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"


பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின.

இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.


ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.

அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.

நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது?

அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,

1, வைகரி - செவியோசை.

2, மத்திமை -
கருத்தோசை.

3, பைசந்தி -
நினைவோசை.

4, பரை -
நுண்ணோசை, என்பவை ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.

ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.

இது பற்றிய மேலும் விபரமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

உருத்திரா said...

இவைகளெல்லாம் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை,தங்கள் பதிவின் மூலம்,அறிந்து கொண்டேன்,நன்றி

rajsteadfast said...

nalla thagaval..

Nanri

தோழி said...

மிக்க நன்றி.. உருத்திரா

தோழி said...

மிக்க நன்றி.. rajsteadfast

chandru2110 said...

இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது.

தோழி said...

மிக்க நன்றி..chandru2110

selva said...

sithar nantraga irugu
I AM SIVAMANISITHAN PALANI 9942505226

Peter Rodgers said...

THE ANSWER IS IN HOLY BIBLE
JOHN CHAPTER 1: 1-5
ATHIYAGAMAM 1 ST CHAPTER
EBIREYAR 1 ST CHAPTER.

Peter Rodgers said...

THE ANSWER IS IN BIBLE.
YOVAN 1 ST CHAPTER
ATHIYAGAMAM 1ST CHAPTER
YEBIREYAR 1ST CHAPTER

Prasath Honey said...

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

அறிவியல்
ஆன்மீகம்
ஜோதிடம்
பிரபஞ்சம்
ஆழ்மனம்
மரணம்
உளவியல்
கடவுள்
சித்தர்கள்
நோக்குவர்மம்

போன்ற பல தலைப்புகளில் உள்ள அறிவியல் உண்மைகளை வெளிபடுத்த உள்ளோம். இணைந்திருங்கள் ஒரு மாபெரும் இரகசியம் வெளிப்பட உள்ளது.

Page link www.facebook.com/ragasiyaM123

Prasath Honey said...

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

அறிவியல்
ஆன்மீகம்
ஜோதிடம்
பிரபஞ்சம்
ஆழ்மனம்
மரணம்
உளவியல்
கடவுள்
சித்தர்கள்
நோக்குவர்மம்

போன்ற பல தலைப்புகளில் உள்ள அறிவியல் உண்மைகளை வெளிபடுத்த உள்ளோம். இணைந்திருங்கள் ஒரு மாபெரும் இரகசியம் வெளிப்பட உள்ளது.

Page link www.facebook.com/ragasiyaM123

Post a Comment