சித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.....

Author: தோழி /

நண்பர்களே !

சித்தர்களின் படைப்புகளை இயன்றவரையில் மிகைப் படுத்தாமல் அவர்களின் மொழியில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய ஆவல், குருவருளால் சாத்தியமாகி இருக்கிறது. இதுவரையில் கிடைத்த ஆதரவும் ஊக்கமும் நான் சிறிதும் எதிர்பாராதது. இனிவரும்நாட்களில் இந்த சிறியவளின் முயற்சியில் ஏதேனும் பிழையிருந்தால் பொறுத்தும், திருத்தியும் வழிநடத்த வேண்டுகிறேன்.

சித்தர்கள், இயற்கையோடு இனைந்த தற்சாற்பு வாழ்வியல் நெறியினை பின்பற்றியவர்கள். தமது தேவைகள் அனைத்தையும் தான் வாழும் சூழலில் இருந்தே உருவாக்கிக் கொள்ளும் வல்லமையும், ஞானமும் கொண்டிருந்தனர். .தங்களின் கண்டுபிடிப்புகள் அல்லது வழிமுறைகள் எப்போதும் நல்லவற்றுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே பயன் பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர்.ஆசையே அத்தனை அழிவுக்கும் மூலாதாரம் என்பதை, புத்தருக்கு முன்னரே உறுதியாய் சொன்னவர்கள்.

இந்த வகையில் சித்தர்கள் நமக்கு அளித்துள்ள அரிய, எளிய நுட்பங்கள் சிலதை பகிர விரும்புகிறேன். இந்த நுட்பங்களை வித்தைகள் என்றும் கூறலாம். அரிய மூலிகைகளைப் பயன்படுத்தி செய்யப் படும் இந்த வித்தைகள் சமகால தொழில் நுட்பங்களையெல்லாம் மிஞ்சும் வகையில் அமைந்திருக்கிறது.

உதாரணத்திற்கு வெறும் நூலால் இரும்பினை அறுக்கும் வித்தையைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் தங்களின் பாடல்களில் மறைபொருளாய் பதிந்து வைத்திருக்கின்றனர். இனி வரும் பதிவுகளில் இத்தகைய சில நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறேன்...

இந்த வித்தைகள் எல்லாமே, குருவருளால் மட்டுமே சித்தியாகும். குருவை மிஞ்சிய வித்தை இல்லை.

குருவின் தாளடி பணிந்து தொடர்கிறேன்......

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

Mugilan said...

வாழ்த்துக்கள் தோழி! தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்!

V Dhakshanamoorthy said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள், தோழி !

மங்கை said...

சிறு முயற்சி பெரிய வெற்றியைத் தர வாழ்த்துக்கள்...

இந்த முறை உங்கள் எழுத்து நடை சற்று வித்தியாசமாய் இருக்கிறது...தொடர்ந்து எழுதுங்கள்.. உங்கள் பொறுமைக்கும் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள்

தோழி said...

மிக்க நன்றி...Mugilan

தோழி said...

மிக்க நன்றி...V Dhakshanamoorthy

தோழி said...

மிக்க நன்றி...maduraiveeran

தோழி said...

மிக்க நன்றி...மங்கை

rajsteadfast said...

தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள், தோழி !

அண்ணாமலை..!! said...

தோழி! காலத்தால் அழியாத பதிவுகளாக இவை இருக்கும்!
தங்களது தொண்டு தொடரட்டும்!
புதிய வலைஅமைப்பு மிக அருமை!

தோழி said...

மிக்க நன்றி rajsteadfast...

தோழி said...

மிக்க நன்றி.. தோழா... அண்ணாமலை..!!

Unknown said...

Sidhargal kudi pazhakathai seri seyya edhenum paadalgalil kuripitullargala?

Post a comment