தலை முடி வளர...

Author: தோழி / Labels: ,

"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்".


- அகத்தியர் குணபாடம் -

கையாந்தகரைச் சாறு நாலுபலம் எடுத்து அத்துடன் ரெண்டுபலம் குன்றிமணிப் பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து அதில் நல்லெண்ணய் ஒருபலம் சேர்த்துக் காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலையில் பூசிவர வயோதிகருக்கும் இளைஞர் போல முடி வளருமாம் என்கிறார் அகத்தியர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

33 comments:

துபாய் ராஜா said...

அன்புள்ள தோழி, கையாந்தகரை,குன்றிமணிப் பருப்பு என்றால் என்ன,அவை எங்கு கிடைக்கும் போன்ற விவரங்களும் (நாலு பலம், இரண்டு பலம், ஒரு பலம்) பலம் என்றால் தற்போதைய நடைமுறையில் என்ன அளவு போன்ற விவரங்களும் சேர்த்து தந்தால் படிப்பவர்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்குமே..

தோழி said...

அன்புள்ள தோழா, ஒரு பலம் என்பது எத்தனை அளவு, இந்த மருந்துப் பொருட்களை இந்தியாவில் எந்தக் கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரங்கள் என் முந்தய பதிவுகளில், அல்லது முந்தய பதிவுகளின் பின்னூட்டங்களில் சொல்லி இருக்கிறேன் அதனால் திருப்பி திருப்பி பதிவுகளில் அதை இணைப்பது தொடர்ந்து படிபவர்களுக்கு சலிப்பை உண்டுபண்ணும் என்பாதால் இணைக்க வில்லை. நன்றி.

டவுசர் பாண்டி... said...

ஒண்ணு கேட்டா கோவிக்கப்டாது...!

நமக்கு படிப்பறிவு கம்மி,எனவே இந்த சிறியவனின் பின்வரும் சந்தேகஙக்ளை விளக்கிடுமாறு வேண்டுகிறேன்.

கையாந்தகரை என்பது என்ன?, செடியா, கொடியா? இதற்கு வேறு பெயர்கள் இருக்கிறதா?

குன்றிமணி பருப்புக்கு வேறு பெயர்கள் ஏதும் இருக்கிறதா?

தோழி said...

கையாந்தகரை என்பது கரிசலாங்கண்ணியை... குன்றிமணி பருப்புக்கு வேறு பெயர்கள் தெரிய வில்லை.. நான் அறியும் போது பின்னூட்டத்தில் இணைக்கிறேன்... நன்றி

டவுசர் பாண்டி... said...

நான்கு பலம், இரண்டு பலம், ஒரு பலம்....என்பதை நான்கு பங்கு, இரண்டு பங்கு, ஒரு பங்கு என வைத்துக் கொள்ளலாமா?

டவுசர் பாண்டி... said...

என் சந்தேகத்தை உடனடியாய் தீர்த்து வைத்தற்கு நன்றி...நன்றி...நன்றி

:)

தோழி said...

பங்கு என்று வைத்துக் கொள்ளும் போது அளவுகள் மாறுபடாமல் பார்த்துக் கொள்ள கடினமாக இருக்கும், நன்றி.

V Dhakshanamoorthy said...

குன்றிமணி பருப்புக்கு வேறு பெயர் குண்டுமணி.
விநாயக சதுர்த்தி அன்று

விநாயகருக்கு கண்ணுக்காக வைப்போமே அது தான்.

9 April 2010

pondicherry said...

அன்புள்ள தோழிக்கு, மிக சிறப்பான பதிவுகள். வாழ்த்துக்கள்.
இங்கு பலம் என்றால் என்ன அளவு என்று கேட்டு இருந்தார்கள். அதற்கான விளக்கம். ஓர் பலம் என்பது 35 கிராம் அளவு.

மேலும் குன்றி மணியில் பல விதங்கள் உள்ளது, வெள்ளை குன்றிமணி , கருப்பு குன்றிமணி, எந்த குன்றிமணி என்று குறிப்பாக சொன்னால் நலமாக இருக்கும்.

தோழி said...

இங்கு சொல்லப்பட்டது கருப்பு குன்றிமணி.. நன்றி.. pondicherry

Unknown said...

Ithai evalavu pangu varum varai kaaicha vendum, appuram evvalavu nal theikka vendum.

Natarajan

தோழி said...

@Natarajan

தினசரி தைலமாக தலையில் பூச இந்த எண்ணையை பயன்படுத்தலாம் நன்றி.

Venkatesh R said...

அன்புள்ள தோழி வணக்கம்!!! எனக்கு தலை முடி உதிர ஆரம்பித்துள்ளது, மேலும் இதே நிலை நீடித்தால் தலை வழுகை ஆகிவிடும், நீங்கள் சொன்னது போல இந்த தைலத்தை தயாரித்து தேய்த்து வந்தால் பலன் தருமா? உங்களது ஆலோசனை எனக்கு மேலானது.

Venkatesh R said...

அன்புள்ள தோழி வணக்கம்!!! எனக்கு தலை முடி உதிர ஆரம்பித்துள்ளது, மேலும் இதே நிலை நீடித்தால் தலை வழுகை ஆகிவிடும், நீங்கள் சொன்னது போல இந்த தைலத்தை தயாரித்து தேய்த்து வந்தால் பலன் தருமா? உங்களது ஆலோசனை எனக்கு மேலானது. நன்றி !!!

Unknown said...

madam enakku konjam vilakkam thevai please madam udaney sollunga enooda mailukku anuppi vainga

Unknown said...

entha vaiththiam palan tharuma udane sollunga

Smiling World said...

Vanakkam Thozhi.... Pakka Vilavugal(side effects) Varuma

rkramesh22 said...

vanakam thozhi அகத்தியர் மந்திரம் book KEDAIKUMA

swaminathan said...

hair loss medcine for me

murugadas said...

hi mam
what is kundu mani pl give me dedailes mam

k1 said...

Dear mam,
which "கரிசலாங்கண்ணி" use..here so many varaity கரிசலாங்கண்ணி is there...plz clarify the doubts..

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

venkat said...

plz tell what is kundremaniparrupu

Unknown said...

good matter for world

naturesachi said...

அன்புள்ள தோழி,, என் தந்தை நன்கு உயரமாக முரட்டு கம்பீர தோற்றத்துடன் இருக்கிறார்,, அனால் நான் சற்று குள்ளமாக தெரிகிறேன்,, சித்தர்கள் குறிப்பில் உயரமாக வளர எதேனும் கூறப்பட்டுள்ளதா என்று தயவு கூர்ந்து சொல்லவும்

THIRUMAL said...

அன்புள்ள தோழி,, என் தந்தை நன்கு உயரமாக முரட்டு கம்பீர தோற்றத்துடன் இருக்கிறார்,, அனால் நான் சற்று குள்ளமாக தெரிகிறேன்,, சித்தர்கள் குறிப்பில் உயரமாக வளர எதேனும் கூறப்பட்டுள்ளதா என்று தயவு கூர்ந்து சொல்லவும்

THIRUMAL said...

அன்புள்ள தோழி,, என் தந்தை நன்கு உயரமாக முரட்டு கம்பீர தோற்றத்துடன் இருக்கிறார்,, அனால் நான் சற்று குள்ளமாக தெரிகிறேன்,, சித்தர்கள் குறிப்பில் உயரமாக வளர எதேனும் கூறப்பட்டுள்ளதா என்று தயவு கூர்ந்து சொல்லவும்

Chennai Rajan said...

ungal porumaikku thalai vanangukiren - Mikka nanri

Unknown said...

VELLAI AND MANJAL 2 IRUKU, ITHULA YETHAI PAYANPADUTHANUM THOLI

ROCKY said...

hai how prepare that oil

Unknown said...

Oru Palam = 35 Gram

online supermarket said...

super thozhi my name prasath this info is very useful

PRINCE (ALAIS) ELAVARASAN, SALEM said...

சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி. ( Crab's eye)

குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் கொடி.

இணையத்தில் கண்ட வேறு பெயர்கள்

Post a comment