"ஒருதலை வலிக்கு பூண்டரைச்சி
மெழுகுருகி அதிட் போட்டு
வலிச்ச பிறத்திலே பூசப்பா
நொடியில் நிக்கும் கேள்"
- அகத்தியர் நயன விதி -
பூண்டேடுத்து அரைத்து , மெழுகை அணலில் உருகவைத்து அதில் அரைத்த பூண்டைப் போட்டு கலக்கி வலிக்கும் இடத்தில் பூச நொடியில் ஒத்தத் தலைவலி நிற்க்குமாம்.>
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



18 comments:
எளிமை அதனிலும் இனிமை
மிக்க நன்றி
புதிய வலைப்பூ...
அழகாக உள்ளது...
மெழுகு என்பது எந்தவகை மெழுகு என்று சொன்னால் மிக உபயோகமாக இருக்கும் தோழி...
:-)
மிக்க நன்றி Sri Kamalakkanni Amman Temple
மிக்க நன்றி..அகல்விளக்கு..
இங்கு மெழுகு பாவிக்கப் பட்டதன் நோக்கம் பூண்டின் மருத்துவ சக்தியை வெப்பம் மூலம் உடலுக்குள் செலுத்தும் ஒரு காரணியாகவே... அதனால் நாங்கள் மெழுகுவர்த்தியின் மெழுகை கூட இதற்க்குப் பயன் படுத்தலாம்..
அம்மாவிற்கு உண்டு.. முயற்சி செய்து பார்க்கிறோம்.. நன்றி
எனக்கு ஒரு சந்தேகம். அகத்தியர் காலத்தில் மெழுகு கண்டுபிடிக்கப்பட்டு இருந்ததா? உபயோகத்தில் இருந்ததா? இதில் கொடுக்க பட்டது எதிலிருந்து கிடைக்கும் மெழுகு?
chandru2110 அகத்தியர் சொன்ன மெழுகு வேற இது வேற ஆனால் இங்கு மெழுகுக்கு மெழுகுவர்த்தியின் மெழுகும் பயன் படுத்தலாம் நன்றி
தேன் மெழுகுன்னு சொல்வாங்களே....அதுவா!
பலவகை மெழுகு இருக்கு... அதுல தென் மெழுகும் ஒன்று ஆனால் அது அல்ல இங்கு சொல்லப்பட்டது... நன்றி..
y
மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றி
மிக்க நன்றி..rajsteadfast
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி தங்களின் நேரத்தை ஒதுக்கி வலையில் இட்டதற்கு. எனக்கொரு சந்தேகம், இந்த முறைகளை கடைபிடிக்க பொருள்களின் அளவும் மிக முக்கியம் அல்லவே? மற்றும் நாமாகவே செய்து பரிசோதனை செய்வற்கு பதில், தேர்ந்த மருத்துவரிடம் (சித்த) ஆலோசனை கேட்டு செய்வது தானே சரியான முறை, ஆபத்தில்லாதது.
குறிப்பிடும் முறைகள் உள்ள புத்தகங்களின் பெயர்களையும் மற்றும் அது சார்ந்த பிற விவரங்களையும் பதிவிட்டால் வேண்டுவோர் வாங்கி பயன் பெறுவர். மீண்டும் மிக்க நன்றி.
நான் குறிப்பிடும் முறைகள் உள்ள புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன்... நன்றி...
மெழுகு என்று சொன்னால் சித்த வைதியத்தில் அது தேன் மெழுகைக் குறிக்கும்
சித்த வைத்தியத்தில் மெழுகு என்றால் தேன்மெழுகைத் தான் குறிக்கும்
உங்கள் உதவியால் பெரிதும் பலன் அடைந்தேன்.
என்னுடைய நோய்கள் பல தீர்ந்தன .
என்னுடைய கஷ்டங்கள் தீர்ந்தன .
இந்த இனைய தளத்தை நான் நிச்சயம் உலகறிய செய்வேன்
வாழ்க தமிழ்
வாழ்க தமிழ் கலாச்சாரம்
வாழ்க தமிழ் மருத்துவம்
வாழ்க தமிழ் இனம்.
செல்வன் ந.ஹரீஷ்ராம்
இலங்கை,திருகோணமலை
Thank you for your useful Blogs. I have a small clarification.
Only "Naaligai, Vinaaligai" were used before thousands of years. "Seconds(Nodi)" was not prevalent those days. It came in to existence only during the English period. Then how did Agathiyar used "Nodi" in the last line of his song.
Post a Comment