உடலை நிலை நிறுத்துவதற்க்காகப் பயன்பட்ட பொருட்கள் உடல் தாதுக்கள் என்று சொல்லும் சித்தர்கள், ஐம் பூதங்களின் சேர்க்கையே உடல் தாதுக்கள் என்கிறார்கள்.
உடலைப் பேணிப் பாதுகாப்பவைகளை மூன்றுவிதமாகப் பிரித்து, அவற்றை வாதம், பித்தம், கபம் என்று குறிப்பிடுகிறார்கள்.
இவை உடலில் சமநிலையில் இருக்கவேண்டும் என்று சொல்லும் அவர்கள், இவை முறையே 4:2:1 என்பதே சரியான அளவு என்றும் குறித்துள்ளனர்.
அகம் அல்லது புறத் தன்மைகளின் வேறுபாடுகளாலும், உணவு வேறு பாடுகளாலும், வாழக்கை முறை மாறுபாடுகளாலும் இந்த அளவுகளில் ஏற்படும் மாற்றமே நோயாகிறது என்கிறார்கள்.
இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வராதிருக்க "வருமுன் காப்போம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் சித்தர்கள் நோய் வராதிருக்க கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை வகுத்து தந்துள்ளனர்.
நோய் வராதிருக்கும் வழியைக் காட்டும் பாடல்...
"பாலுண்போம் எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம்
பகல் புணரோம் பகல் துயிலோம் பருவ முத்த
வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்
இரண்டடக்கோம் ஒன்றைவிட்டோம் இடதுகையில் படுப்போம்
மூலஞ்சேர் கறிநுக ரோம் மூத்த தயிர் உண்ணோம்
முதனாளில் சமைத்தகறி அமுதேனினும் அருந்தோம்
நாலந்தான் அடைந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்குமிடத்தே"
பாலை அதிகளவில் பருக வேண்டும், எண்ணெய்த் தன்மையான உணவுகளைச் சாப்பிடும் நாளில் மட்டும் வெந்நீரில் குளித்து , பகலில் புணர்ச்சி நீக்கி, பகலில் தூங்காது, இள வெய்யிலில் இருக்காது, இருவேளை உண்டு, ஒருவேளை உணவைத் தவிர்த்து, மூலத்தை அதிகப் படுத்தும் உணவு வகைகளைத் தவிர்த்து, புளித்த தயிரையும் தவிர்த்து, முதல் நாள் சமைத்த உணவுகள் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாது, பசிக்கும் போது மட்டுமே உணவருந்தி இருந்தால் எமனுக்கு நாம் இருக்கும் இடத்தில் வேலை இருக்காது என்பது பொருள்.
என்று நோய்வராதிருக்கக் கடைப் பிடிக்கவேண்டியவற்றைச் சொல்லும் இவர்கள்.
உடல் அவயங்களில் ஏற்படும் சில மாற்றங்களைக் கொண்டு மரணம் வருவதையும் முன்கூட்டியே கணிப்பது எந்த மருத்துவத்திலும் இல்லாத தனிச் சிறப்பாக சித்த மருத்துவம் விளங்கக் காரணமாகிறது. ஏன் எனில் மரணம் வருவதை முன்கூட்டியே அறிந்தால் தடுப்பது சுலபமல்லவா?
மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி? பார்க்கலாம் அடுத்த பதிவில்...
Post a Comment
9 comments:
Nalla pathivu..
Nanri
@rajsteadfast
மிக்க நன்றி...
பாடலுக்கு விளக்கம் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@Ramesh
பாடலுக்கு விளக்கம் சொல்லியாச்சு... நன்றி...
ஆரோக்கிய உணவு முறை.
@chandru2110
மிக்க நன்றி...
சித்தர்களின் படம் காணவில்லையே தோழி...
உங்களின் தளத்திற்கு வரும் போது அவர்களையும் தரிசித்து
விட்டு செல்வோம் ஆனால் இப்போது அவர்கள்.....
@winmani
அவற்றையும் இணைத்து விட்டேன் மிக்கநன்றி..
indha padalil, ennai perin enpathai, ennai kuliyal endrum kollalaam allava...?
Post a Comment