சித்த மருத்துவம்...

Author: தோழி / Labels: ,

"மருந்து" என்பது பிணி போக்கும் பொருள். குறை நீக்கியாகும்.

அக, புற நிலையின் எவ்வகையிலும் மருந்து ஒன்றே சிறப்பாக வாழ வழியாகும்.

"வீர மருந்தொன்றும் விண்ணோர் மருந்தொன்றும் வொன்
நாரி மருந்தொன்றும் நந்தி அருள் செய்தான்
ஆதி மருந்தொன் றறிவா அகலிடஞ்
கொத்தி மருந்திது சொல்லவொண்ணாதே"


என்ற திரு மூலரின் பாடல் மருந்தின் தன்மைகளையும் அதன் தகமைகளையும் உணர்த்துகிறது.

கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் மருந்து கொண்டுவர அனுமான் புறப்படும் போது அதன் தன்மைகளை ராமன் அனுமானுக்கு சொல்வதாக இந்தப் பாடல் அமைகிறது...

"மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
...........மெய்வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒருமருந்தும்,
...........படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்
...........மெய்ம்மருந்தும், உள"


மக்கள் வாழும் சூழல், வாழ்க்கை முறைக் கேற்ப அவரவர்கள் மருத்துவ முறைகளும் வேறுபடும்.

நம் தமிழ் நாட்டவர்களால் உருவாக்கப் பட்டு இன்றுவரை போற்றிப் பாதுகாத்துப் பயன்படுத்தப் பட்டு வரும் மருத்துவமுரையே சித்தமருத்துவ முறையாகும்.

இந்த சித்த மருத்துவ முறையில் மாண்டவருக்கு உயிர் கொடுக்கக் கூட முடிந்தது என்றால் அதன் சிறப்பு எத்தகையது என்று சொல்லத்தேவையே இல்லை.

சித்த மருத்துவம் இவ்வளவு சிறந்ததாயின், அதை உருவாக்கியவர்கள் எவ்வளவு சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த சித்த மருத்துவத்தை தந்தவர்களையே இன்றுவரை சித்தர்கள் என்று போற்றி வணங்குகின்றனர் தமிழர்கள்.

நோயைச் சோதித்தறிய சித்த மருத்துவத்தில் எட்டு வகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அவையாவன, நாடி, நா, மொழி, மலம், பரிசம், நிறம், விழி, சிறுநீர் போன்றவையாகும்.

இது தவிர எளிய வழியாக,

ஒரு கண்ணாடிக் குடுவையில் (குவளை) விடியக்காலைச் சிறுநீர் பிடித்து அதில் இரண்டு சொட்டு எள் எண்ணெய் விடவேண்டும்.

1, மோதிரம் போல் இடைவிட்ட வட்டத் தோற்றம் கொண்டால் - வாத நோய்.

2, எண்ணெய்த்துளி பாம்பு போல் தொற்றங்க்கொண்டால் - பித்த நோய்.

3, முத்துப் போல் திரண்டு நின்றால் - கப நோய். என்று முடிவு செய்யலாம் என்கிறார் போகர்.

சித்த மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை முறை உள்ளது என்பதற்கு ஆதாரமாக கீழ்வரும் பாடலைத் தருகிறேன்...

"குத்துங் காச முத்துப் போல்
கூடிப் பிரியும் குன்றாமல்
சற்றுங் களிம்போன்றில்லாமல்
தாம்பிரச் சாலகை முப்பதாம்
முற்றும் ஆறு விரல் நீளம்
மூன்றும் பின்னும் விரல் நீக்கி
மற்ற நிலையை வத்தனைத்தும்
வைத்துக் கட்டிக் குறை தீரே"


இந்தப் பாடல் காச நோய்க்கான சத்திர சிகிச்சை பற்றி விளக்குகிறது.

இவ்வளவு சிறப்புப் பெற்ற சித்த மருத்துவ முறைகளில் நாமே செய்து கொள்ளக் கூடிய எளிய சில மருத்துவ முறைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

chandru2110 said...

எந்த நோயும் இல்லன்னா எண்ணெய் எந்த வடிவத்தில் இருக்கும்?

தோழி said...

@chandru2110

மேலே குறித்த மூன்று வகையும் அல்லாமல் வேறு எந்த வகையில் இருந்தாலும் பிரச்சனை இல்லை என்று அர்த்தம் .. நன்றி

Anonymous said...

இந்த முறையில் சுகர் கண்டுபிடிக்க முடியுமா ?

தோழி said...

@winmani

இல்லைங்க... இது சொல்லப்பட்ட நோய்கள் பற்றி அறிய மட்டுமே உதவும். நன்றி.

டவுசர் பாண்டி... said...

வாதம், பித்தம், கபம் பற்றியும், இவை மனித உடலில் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ ஏற்படும் தாக்கங்கள், இவற்றை சமநிலையில் வைத்திருக்க என்ன செய்வது என்பது பற்றி தனியே ஒரு பதிவில் விளக்கினால் நன்றாக இருக்கும்.

:)

டவுசர் பாண்டி... said...

சத்திர சிகிச்சையும் அறுவை சிகிச்சையும் ஒண்ணுதானே....?

நான் தமிழ்ல கொஞ்சம் வீக், ஆதான் கேட்டேன் :)

rajsteadfast said...

Arumaiyaana pathivu.

Nanri.

தோழி said...

@டவுசர் பாண்டி...

சத்திர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை இரண்டுமே ஒன்றைத்தான் குறிக்கிறது. நன்றி.

Unknown said...

Dear Madam,
My wife last 5 year affected by stomach ulcer& Mouth Ulcer. Please tell me any remidies.(We already taken a lot of alopathy medicine but not use(We are pure veg).

Please do the needful,

Sankar Raj

maheswari said...

namathu entha arputhamana maruthuvathai patri innum namathu makalidaiye vizhipunarvu vara vendum.

eedu enai illa namm thamzhil mozhi...
namm thaiyai pol kappom...

Anonymous said...

சித்த மருத்துவம் பயணுள்ளவை நன்றி.

Post a comment