யோக காயகற்ப முறை...

Author: தோழி / Labels: ,

மருத்துவ முறையிலான காய கற்பத்திற்கும், யோக முறையிலான காய கற்பத்திற்கும் பல வேறுபாடுகள் உண்டு, மருத்துவ காயகற்பம் உண்டவர்கள் அதை சாப்பிட்டதன் மூலமாக மரணத்தைத் தள்ளிப் போடலாம், ஞானம் இல்லாமல் உலக விஷயங்களில் ஈடுபடலாம்.

ஆனால், யோக முறையில் காய கற்மானது, நான், எனது என்கிற ஆணவங்களை அழித்து மனதை அடக்கும். உடலை அருள் தேகமாக்கும்.

யோக கற்ப முறையில் மனத்தைக் கட்டுவதே அதாவது மனதை அடக்குவதேயாகும்.எவரால் பிராணவாயு கட்டப் படுகிறதோ, அவரால் மனமும் கட்டப்படும், அதேபோல் எவரால் மனம் கட்டப் படுகிறதோ, அவரால் பிராணவாயுவும் கட்டப்படும். ஏன் எனில் மனம், பிராணன் இவற்றுள் எதாவது ஒன்றைக் கட்டினால் மற்றொன்று கட்டப்படும். இதுவே யோக கற்பமாகும்.

இதை திருமூலர் திருமந்திரத்தில் தெளிவாகச் சொல்கிறார்.

"ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியதுவாமே"


- திருமந்திரம் -

அப்படியானால் எல்லோராலும் இந்த யோக கற்பம் அடைய முடியாதா? அதற்க்கு என்ன தான் வழி? அதையும் திருமூலரே சொல்கிறார்.

"வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனும் ஆமே"


- திருமந்திரம் -

அதாவது ஒரு குரு மூலமாகவே இதை அடைய முடியும் என்கிறார் திருமூலர்.

அப்படியானால் எங்களுக்கு உரிய குருவை அடையாளம் காண்பது எப்படி? இது எல்லோர் மனதிலும் பொதுவாக எழும் கேள்வி. அந்தக் குருவை அறிவது எப்படி என்பது பற்றி சித்தர்கள் என்ன சொல்லி இருக்காங்க என்று அடுத்தபதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

nandhalala said...

தோழி, உங்கள் வலைப்பூவில் இந்த பதிவு சற்று வித்யாசமானது எனலாம். ”யோக கற்ப முறையில் மனத்தைக் கட்டுவதே அதாவது மனதை அடக்குவதேயாகும்.மனம், பிராணன் இவற்றுள் எதாவது ஒன்றைக் கட்டினால் மற்றொன்று கட்டப்படும்” இதை பல குருமார்கள் பல
வழிகளில் சொல்லியிருக்கிறார்கள். அவை முறைப்படியான பயிற்சி மூலம் மட்டுமே அடையகூடியதும் என்பது நிதர்சனமான உண்மை.

அத்தகைய குருவை அடையாங்காண்வது பற்றி கூட
சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்ற தகவல் உண்மையில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.உங்கள் அடுத்த பதிவிற்க்கு காத்திருக்கிறேன்.

தோழி said...

@நந்தா
உங்களுக்காக விரைவில் வரும் நன்றி..

kani said...

very nice

Anonymous said...

unmaiyana guru kidaika vendum enathan virupukirenyapothu entruthan thyriyavilai

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

sivakumar said...

vazhga valamudan ! vathathiri maharishiyin kayakalpa yogam payila www.vethathiri.org

Post a comment