"நிசமான கற்பங்கள் தின்னும் போது
நிசமான சடத்திற்கு வருத்த மேது
பாசமான கற்பமுண்போன் பத்திம்விட்டு
புசமான பெண்ணோடு புணர்ச்சிகொண்டால்
பேரான சயரோகம் சண்ணும் பாரு
வேளப்பா கற்பமுண்போன் புளிதின்றாக்கால்
மிடுக்கான பெரு வயிறு யுப்பலாகி
காளப்பா கால்கடுப்புமா குந்தானே"
- போகர் -
உண்மையான கற்பங்கள் உண்ணும் போது உண்பவரது உடலுக்கு எந்த வருத்தமும் இருக்காது, கற்பம் உண்பவன் பத்தியம் கடைப்பிடிக்க தவறி பெண்ணோடு புணர்ச்சிகொண்டால் சயரோகம் உண்டாகும், கற்பம் உண்பவன் புளி தின்றால் அவன் அழகான வயிறு வீங்கி, கால் கடுப்பும் உண்டாகுமாம்.
"தானென்ற கற்பமுண்போன் கிழங்கு தின்றால்
தன்னுடம்பில் சோகையோடு பாண்டுவாகும்
மீனென்ற மாமிசங்கள் மீறித் தின்றால்
மிக்கன மயக்கமொடு சுரமுமாகும்
மோனென்ற தாகத்தால் மோருகொண்டால்
மிகையான குன்மாவலி மிடுக்குமாகும்
பானென்ற பச்சையுப்பு தின்றாயானால்
பட்டுதடா கண்ணிரெண்டும் பரிந்துகாணே"
- போகர் -
கற்பம் உண்பவர் கிழங்கு சாப்பிட்டால் தன்னுடம்பில் சோகையோடு பாண்டு என்ற வருத்தமும் உண்டாகும், மீன், மாமிசங்கள் சாப்பிட்டால் அதிக மயக்கத்துடன் காய்ச்சலும் உண்டாகும், தாகம் என்று சொல்லி மோர் அருந்தினால் அதிகளவான வயிற்றுவலி வரும், உப்பு சாப்பிட்டால் கண்கள் இரண்டும் பார்க்கும் சக்தியை இழந்து விடுமாம் என்கிறார் போகர்.
Post a Comment
12 comments:
இதெல்லாம் ஆவறதில்லை...ஆவறதில்லை..ஆவறதே இல்லை :((
பத்தியமில்லாத முறை நாலஞ்சு இருந்தா தேடி கண்டு பிடிச்சு போடுங்க...புண்ணியமாப் போகும்.
@டவுசர் பாண்டி...
வருந்தாமல் எதுவும் வாராது... நன்றி.
பாவர்காய்,எருமை தயிர்+ நெய், புளி,உப்பு,மாமிசம்+ கருவாடு, கண்விழித்தல் (காலம் தவறிய உறக்கம் ) முக்கியம் மது வகைகள்+ போதை வஸ்து (பீடி to கஞ்சா) போன்றவையும் தவிர்த்தால் உடலுக்கு நல்ல பயன்கிடைக்கும். + தோழி சொன்னவையும்.
தோழி இது நான் எழுதிய காயகற்பத்துக்கும் இது பொருந்தும்.
பத்தியமில்லாத முறை நாலஞ்சு இருந்தா தேடி கண்டு பிடிச்சு போடுங்க...புண்ணியமாப் போகும்
நண்பா டவுசர் பாண்டி சித்த மருத்துவத்தின் மறு பெயர் இயற்கை விதியின் சாரமாகும்.
இதில் மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாதது.
ஆனால் எல்லாத்துக்கும் ஒரு குறுக்கு வழி (Short cut) உண்டு விபரம்+ பயிற்ச்சி (குரு அருளால்)உடையவர்கள் அதில் இருந்து அழகாக வெளியே வருவார்கள் இல்லை என்றால் அது தவறான (Worng Turn I-II-III :-)வழியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
காயகற்பத்துக்கு மாற்று ஒரு முறை ஒன்று முப்பு (அ) ‘பூநீறு’-ல் செய்யலாம்
( தோழி டவுசர் பாண்டிக்கு கல்வத்தில் மருந்து எப்படி அரைப்பது அதை அரைப்பவர் பின் பற்ற வேண்டிய விதிமுறையை கொஞ்சம் சொல்லுங்க)
மிகவும் பயனுள்ளது. இன்னும் பிரச்சனைகள் வரும் என்று சொல்லும் பாடல்கள் இருந்தால் கூறவும். பத்திய காலத்தில் சாப்பிட வேண்டிய தானிய, பருப்பு,காய்கறி வகைகள் இன்னும் இருந்தால் கூறவும்.
@♠புதுவை சிவா♠
//தோழி டவுசர் பாண்டிக்கு கல்வத்தில் மருந்து எப்படி அரைப்பது அதை அரைப்பவர் பின் பற்ற வேண்டிய விதிமுறையை கொஞ்சம் சொல்லுங்க//
இதை சித்தர்கள் சொன்ன மருந்துவம் சம்பந்தமான பதிவில் சொல்ல வுள்ளேன்.. நன்றி..
@chandru2110
தவிர்க்க சொன்னவைகளை விடுத்து மற்றவை அனைத்தும் உண்ணலாம். நன்றி.
very good...
"milagu karpam" unnavum idhai pin patra venduma?
should this be followed when taking "milagu karpam" ?..
should this be followed while taking "milagu karpam" ?..
ingu kayakarpathai muyanravargal yaravathu irukireergala? thayavu seithu thangal anubavathai pagiravum.
Nandri..
அறுமையான.செய்தி.நன்றி.தோலி
Post a Comment