அகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...

Author: தோழி / Labels: , , ,

அகத்தியர் அருளிய அறுபத்திநாலு சித்துக்களை தெரிந்து கொள்வதற்கு முன்னர் அந்த சித்துக்களின் பெயர்களை அகத்தியரின் வரிகளில் தெரிந்து கொள்ளுங்கள்.

"சித்தான அறுபத்தி நாலுக்கும் பேர்
செப்புகிறேன் புலத்தியனே தெளிந்து கேள்
முத்தான பிரவதிக சித்துவொன்று
சுத்தமான சுக்கிலத்தின் சித்துவொன்று
சுகமான பிரம்குலச் சித்துவொன்று
பத்தான பிறையதிகச் சித்துவொன்று
பாங்கான அங்கிசத்தின் சிதொன்றாச்சே"

"ஒன்றான பெண்மயமாம் சித்துவொன்று
வொடுங்காத பவமூலச் சித்துவொன்று
பன்றான ஈசற்குலச் சித்துவொன்று
பராபரமாம் தாதுவெனும் பரம சித்து
குன்றான அசுரமேனும் சித்துவொன்று
குறையாத தானியமாம் சித்துவொன்று
சென்றகன்ற பிரமாதிச் சித்துவொன்று
திறமான அனுமாதிச் சித்தொன்றாச்சே"

"ஆச்சப்பா விக்கித குலச் சித்துவொன்று
அடங்காத சித்திரமாம் சித்துவொன்று
மூச்சப்பா சிவநிதியாம் சித்துவொன்று
முறையான அருணவலுச் சித்துவொன்று
காச்சப்பா பருத்திஎனும் சித்து வொன்று
கரைகாணா அதி ரூபச் சித்துவொன்று
பாச்சப்பா சருவ குலச் சித்துவொன்று
பண்பான மோகினியாம் சித்துவாமே"

"ஆமப்பா வினோதமய சித்துவொன்று
அசையாத விகுர்த்திஎனும் சித்துவொன்று
நாமப்பா காரூபச் சித்துவொன்று
நாதமெனும் அன்புநிலைச் சித்துவொன்று
காமப்பால் விசயமெனும் சித்துவொன்று
கருணைபெறும் செயரூபச் சித்துவொன்று
தாமப்பா மதன சித்துமொன்று
தருகாத தும்பிவனச் சித்தொன்றாமே"

"சித்தான பரிநகுலச் சித்துவொன்று
திறமானா நரிபரியம் சித்துவொன்று
வித்தான வகாரமயச் சித்துவொன்று
விதமான சாந்த விதச் சித்து மொன்று
சுத்தமான தாம்பிரமாம் சித்துவொன்று
தொலையாத சலபேதிச் சித்துவொன்று
முத்தான அசுபதியாம் சித்தொன்று
முறையான சிங்கமுகச் சித்துவொன்றே"

"சித்திக்கும் ரிஷபமுகச் சித்தொன்று
சிவசிவா சித்துமாகச் சித்தொன்று
பத்திக்கும் பரமபரச் சித்தொன்று
பகர் பஞ்சி கர்ண சித்து அதிக வித்தை
உத்திக்கும் உத்திகரு உரிமைச் சித்து
உருவான மறைப்பினிலே அனந்த சித்து
வெற்றிக்கும் வெற்றி முனை சித்து வொன்று
வேடிக்கை மதுரகெளிச் சித்துவோன்றே"

"மதுராதி மாமோகச் சித்துவொன்று
மங்கையர்கள் அதிமோகச் சித்துவொன்று
விதனமுடன் விதானம் வரும் சித்துவொன்று
வேடிக்கை காலத்தில் அதிக சித்து
சுகாமான சலத்தம்ப சித்து வொன்று
சுருக்கமான அக்கினியில் லனந்தம் சித்து
அதமான மாரனத்தில் லனந்தம் சித்து
ஆக்கையுறு மாறாட்ட மான சித்தே"

"மாறாட்ட மான பேதனமாம் சித்து
வையகத்தோர் தனை மயக்கும் வாடைச்சித்து
நீறாட்டமானதிலே நனையாச் சித்து
நிஷ்டையிலே தம்பிக்கும் வாயுத்தம்பம்
கோறாட்ட விநோததந்தி லதிக சித்து
குமரி விளையாடு கின்ற கோலச் சித்து
பாராட்டம் பண்ணுகின்ற அரவின் சித்து
பகைத்தவர்த்த மதியகற்றும் பாரிச் சித்து"

"பாரப்பா முத்தி தரப் படைக்கும் சித்து
பார்க்கையிலே தீஎரிந்து பறக்கும் சித்து
நேரப்பா தீ அவிக்கும் சித்து
நிமைக்கும் முன்னே காதவழி நெருங்கும் சித்து
வீரப்பா செய்யாமல் அடங்கும் சித்து
வெகுகோடி சித்துக்கள் விபரமாக
ஆரப்பா அறிவார்க ளறுபத்து நாலு
மடக்கமுட னாடு நீதான் பாரே"


இனி வரும் பதிவுகளில் இவை ஒவ்வொன்றாய் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Radhakrishnan said...

சில சித்திகள் அல்ல பல சித்திகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவனாகவே இருக்கிறது. எப்படி ஒவ்வொரு சித்துகளும் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம அதிகம் ஏற்படுகிறது. மிகவும் திட்டமிட்டே ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக சொல்லி சென்று இருக்கிறார் அகத்தியர். அகத்திய முனிவர், அகத்தியர் சித்தர் இருவரும் வெவ்வேறா?

தோழி said...

அகத்தியர் புராணங்களில் முனிவராகவும்.... மெய்யுணர்வாளர்களால் சித்தராகவும் வணங்கப் படுகிறார்... நன்றி.

VELU.G said...

சித்தர்கள் காட்டும் சித்து அவர்கள் வலிமையை குறைக்குமாமே உண்மையா

தோழி said...

யோக சக்தியின் மூலம் செய்யும் சித்துக்களால் யோக சக்தி குறையும் என்பது உண்மைதான். சக்தி என்பது பாட்டரி செல்லை போல மனிதரில் உருவாகுவது அது பயன்பாட்டைப் பொறுத்துக் குறையும். இது யோக சித்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் மூலிகைகள் மூலம் செய்யும் சித்துக்களுக்கு அல்ல... நன்றி.

Unknown said...

how we will know our spritual guru AYS

Post a comment