அகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...

Author: தோழி / Labels: , ,

'அகத்தியர் கலைஞானம் 1200' என்கிற நூலில் அறுபத்தி நாலு வகையான சித்துக்களைப் பற்றி அகத்தியர் விளக்கியுள்ளார். நூலின் துவக்கத்தில் இப்படிச் சொல்கிறார்.

"நீதான் சித்தாடுகின்ற வகையைக் கேளு
நீள்புவியில் இக்கருவைச் சொன்னாயானால்
கோதறவே வாதத்தால் பிடிக்கப் பட்டு
கொடும் பிணிகள் சூழ்ந்து கொடுமையாகி
வேதாளமாகி பூதமாய்ப் போவாய்
வேதாந்த சத்தியமாய் நின்றாயானால்
தலைவனாய் உலகில்லுள்ளோர்க் காவாயப்பா
தண்மையுள்ள புலத்தியனே கேளுகேளே!"


மென்மையான மனத்தைக் கொண்ட என் மாணவனே!, புலத்தியனே!, சித்தாடுவதை சொல்கிறேன் கேள், பூமியில் உள்ளவர்களுக்கு இதை நீ சொன்னால், வாதம் முதலான பல நோய்களினால் பீடிக்கப் பட்டு , வேதாளமாகி , பூதமாகி போவாய், வேதாந்த சத்தியத்தைக் கடைப்பிடித்து, இந்த சித்துக்களைக் கொண்டு உலகிலுள்ளவர்களுக்கு எல்லாம் நீ தலைவனாகலாம். என்று கூறி சொல்லத்தொடங்குகிறார் அகத்தியர்.

இனி வரும் பதிவுகளில் அவர் சொன்ன அந்த 64 சித்துக்களை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

Radhakrishnan said...

அச்சுறுத்தும் வண்ணம் பாடல் தொடங்கி இருக்கிறதே. பூமியில் இருப்பவர்களுக்கு சொல்லக்கூடாது என்ற பின்னர் எப்படி சொல்ல முடிந்தது?

தோழி said...

அகத்தியர் இதை அருளிய காலகட்டத்தின் சமூக சூழல் மற்றும் தீயோர் கையில் கிடைப்பதால் உண்டாகும் விளைவுகளை கருத்தில் கொண்டு இத்தகைய எச்சரிக்கைகளை முன் வைத்திருக்கலாம்... நன்றி.

டவுசர் பாண்டி... said...

உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே!

Radhakrishnan said...

ஒரு பாடல் என்பது நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். தீயவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நல்ல விசயங்களை மறைப்பது எவ்விதத்தில் நியாயம்? இருப்பினும் எழுதி விட்டார், நமக்கும் கிடைத்து விட்டது, முறையாக பயன்படுத்துவார் எவரும் இல்லை. உங்கள் அரிய முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

தோழி said...

இத்தகைய அரிய நூல்கள் அழிந்து போனதற்கு இம்மாதிரியான பயமுறுத்தல்களும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்... நன்றி

தோழி said...

மிக்க நன்றி... டவுசர் பாண்டி...

Unknown said...

MULUVATHU PADIKA AASAI PADUKIREN THODARCHI ENGU ULLATHU

Unknown said...

dear friends, am from gudiyatham.
am trying to research in sidda maruthuvam
i request you please send your ebook collection in sidda based to my mail id : rajasekargtm@gmail.com
thanking you

Post a comment