”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.

Author: தோழி / Labels: , ,

அகத்தியர் தனது மாணவரான புலதியருக்கு சொன்ன முப்பூ முறை...

"சொல்கிறேன் புலத்தியனே முப்பூகாண
சூடான நவச்சார லவண பூநீர் எடப்பா
துடியான கல்லுப்பு எட்டுங் கொண்டு
ஊடவே அமுரிதனில் கலக்கிக்கொண்டு
உத்தமனே படிஎட்டுத் தெளிவை வாங்கு
சாலவே காச்சி எடு ரவியில் போடு
சாந்தமாய் திங்களில் வெண்மையாகும்
வாடவே வேண்டன்கான் வதி சொன்னேன்
மகத்தான பெரியோர்க் கெய்தும் பாரே"


முப்பூவில் முதல் உப்பு பூநீர் என்றும், இரண்டாவது தூய கல்லுப்பு என்றும், மூன்றாவதாக அமுரியும் சேர்த்து காய்ச்சி வெய்யிலில் காய வைக்க முப்பூ கிடைக்கும் என்று சொல்லும்
அகத்தியர், இது மகத்தான பெரியவர்களுக்கே சரியாகக் கிட்டும் என்கிறார்.

அது என்ன பூநீர்? பூநீரும் பூநீறும் ஒன்றா? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

Ammu Madhu said...

cool

தோழி said...

@Ammu Madhu
மிக்க நன்றி...

aanmiga udhayam said...

சித்தர்கள் காய கல்பம் செய்ய முப்பு தான் அடிப்படையான மூலபொருள். சிதர்கள் காட்டிய யோகா நெறி என்ற நூலில் முப்பு பற்றி குறிப்பு இருக்கிறது. அதுபற்றிய நூலில் உள்ள சிறுகுறிப்பு:-

முப்பு என்பது 3 உப்புகள் சேர்ந்தது.
1 பூநீர் ( வெடியுப்பிவின் மூலம்) இது கைப்பு கசிவு உள்ளது. அதை போக்கி சுத்த உப்பாக்க வேண்டும். பூநீர் மலையடிவாரங்களில் உள்ள களர் நிலங்களில் கிடைக்கும். இது வெண்மையாகவும் மிருதுவாகவும் பசை போல் ஓட்டும் படியாகவும் இருக்கும். இதனை பணியும் வெப்பமும் நிறைந்த மாசி பங்குனி மதங்களில் இரவில் எடுக்கவேண்டும்.

2 கல்லுப்பு இது பூநீரை சுத்தமாக்க அவசியம். கடலில் இருந்து எடுக்க படுகிறது (கடல் நுரைக் கல் ) முத்து சிப்பி கிடைக்கும் இடங்களில் தேடி அனுபவ முறையில் எடுக்கவேண்டும். பூமிக்கு 3 அடிக்கு கீழ் கிடைக்கும் சுண்ணாம்பு கல் எடுத்து சுண்ணம் ஆக்கவேண்டும். அதனை பனிநீர் 4 படிக்கு அண்டகல் சுண்ணம் 1 படிக்கு தெளிவு எடுத்து பத்திரபடுத்தவேண்டும்.

3 அமுரி உப்பு, உடல் சிற்றின்பத்தில் ஈடுபடாமல் நெல்லி கெந்தியை சுத்திசெய்து சூரணம் ஆக்கி காலை மாலை அரை தோலஎடை அளவு சாப்பிடவேண்டும், அக்காலம் கருங்குறுவை அரிசி சாதமும் பசும் பாலும் ஆகாரமாக ஒரு நாளைக்கு இருவேளை உண்ணவேண்டும். அதிகநடை, காற்று, பனி, மழை, வெப்பம் இவை கூடாது. மனம் சஞ்சலமற்று இருக்கவேண்டும். 40 நாட்கள் இப்படி இருந்து 41 வது நாள் காலை முதலில் வரும் சிறுநீரை பத்திரபடுத்தவேண்டும் இப்படி சிலநாள் சேகரிக்கவேண்டும். சுத்தி செய்த பூநீரையும் கல்லுப்பையும் சமஅளவு சேர்த்து சுண்ணம் ஆக்கி அமுரி நான்கிற்கு ஒன்று சேர்த்து முதல் கொதிகாண எடுத்து முன்று நாள் பூமிக்கு அடியில் புதைக்கவும் இவ்வாறு பத்து முறை செய்தல் அமுரி(சிறுநீர்) சுத்தமாகிவிடும். பின்பு சுத்தி பூநீர், சுத்தி கல்லுப்பு, சுத்தி அமுரி உப்பு மூன்றையும் சம எடை கொண்டு அண்ட நீரால் அரைத்து வில்லை செய்து காயவைத்து பத்து எருவில் புடமிட்டு சுண்ணம் ஆக்கி பத்திரபடுதவும் இதுவே முப்பு சுண்ணம் ஆகும்.
காயகல்பம் செய்யவும் மற்றும் பல கொடிய நோய்களுக்கு மருந்து செய்ய நவலோகம் மற்றும் நவபாஷணம் செய்ய பயன் படுத்தியதாக குறிப்பு உள்ளது.

இப்படிக்கு

உதயகுமார்.s

Radhakrishnan said...

அருமையாக இருக்கிறது நன்றி தோழி, மேலதிக தகவலுக்கு நன்றி உதயகுமார்.

aanmiga udhayam said...

மிக்க நன்றி திரு.v .ராதாகிருஷ்ணன் அவர்களே. தோழியின் பதிப்பில் நல்ல விசயங்களை தெரிந்துகொள்வோம். மிக்க நன்றி தோழி.
உதயகுமார்.s

Anonymous said...

பிறந்து இறந்து உழலும் சனன சாகாரம் வேண்டாம் என்று எண்ணம் கொண்டு குருவருள் திருவருள் வேண்டி நின்றால் இப்பிறவி நோய் தீர அல்லது முக்தி அடைய மெய்ப்பொருள் அல்லது முப்பூ இறையால் உபதேசிக்கப்படும் மற்ற படி தேடினால் அவர் அவர் கர்மத்தின் படி விதி வேலை செய்யும்

Post a comment