”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2

Author: தோழி / Labels:

முப்பூ என்பது மூன்று உப்புக்கள் சேர்ந்த கலவை என்பதை எல்லா ஆய்வாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் அவை எந்த மூன்று உப்புக்களின் கலவை என்பதில்தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் குழப்பங்கள்.

கறியுப்பு , வெடியுப்பு, இந்துப்பு என்கிற மூன்றின் கலவை தான் முப்பூ என்கின்றனர் ஒரு சாரார்.

பச்சைக் கற்பூரம், இந்துப்பு, பூநீர் இவைகளின் கூட்டே முப்பூ என்கின்றனர் இன்னொரு பிரிவினர்.

இல்லவே இல்லை! பூநீர், இந்துப்பு, வெடியுப்பு இவற்றின் கலவையே முப்பூ, இது ஒரு பிரிவினர்..

நீர், நெருப்பு , காற்று இந்த மூன்று பூதங்களின் கூட்டே முப்பூ என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

ஆக முப்பூ வில் சேர்க்கப் பட்டிருக்கும் மூன்று பொருட்கள் இன்னதென அறுதியிட்டு கூறுவதில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றது.

சித்தர்கள் என்னதான் சொல்லியிருக்கின்றனர் என பார்த்தால்.... அகத்தியர் வாதகாவியம், கொங்கணநாதர் சூத்திரம்,மச்ச முனி சூத்திரம், உரோமரிஷி ஞானம் 500, நந்தீசர் முப்பூ சூத்திரம், ஆகிய நூல்களில் முப்பூ பற்றிய விவரங்கள் சொல்லப் பட்டிருக்கிறது. இவை பெரும்பாலும் மறைமொழியில் சொல்லப் பட்டிருப்பதால் ஆய்வாளர்கள் ஆளுக்கொரு கருத்தினை முன் வைக்க நேரிடுகிறது.

முப்பூவின் உண்மையான மூலப் பொருட்கள் இதுதான் என்பதை அறுதியிட்டு சொல்ல இயலாத நிலைதான் இன்றைய நிதர்சனம். குருவருள் சித்திக்கப் பெற்றவர்களுக்கு இவற்றை அறியும் ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.

அடுத்த பதிவில் முப்பூ பற்றிய பாடலைப் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

Radhakrishnan said...

அட கண்டவர் விண்டில்லை, விண்டவர் கண்டில்லை மாதிரி இருக்கிறது. முப்பூ என்பது நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம். காலம் ஒவ்வொருன்றும் ஒரு விதத்தில் தொடர்புடையவாம்.

chandru2110 said...

சரி, அவங்க சொன்னதெல்லாம் இருக்கட்டும், நீங்க என்ன சொல்லவறீங்க? தெரியலைன்னா விட்டுடுங்க.

puduvaisiva said...

முறையான அல்லது முழுமையான முப்பூவின் தரம் கண்டு பிடிப்பது எப்படி?

Anonymous said...

மாமரத்து பூ + வாழைப் பூ + பலாமரத்து பூ
மா-->> மு
வா-->> ப்
ப -->> பு
இருக்கலாமா ?

தோழி said...

@V.Radhakrishnan

மிக்க நன்றி..

தோழி said...

@chandru2110

என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை இங்கே பதிவதாக இல்லை.... ஆகவே நான் சொல்ல ஏதுமில்லை... நன்றி

தோழி said...

@♠புதுவை சிவா♠

முப்பூ இலகுவில் நீரில் கரையாது , அத்துடன் பாலில் போட்டால் பால் மஞ்சள் நிறமாக மாறும் இதுவே தூய முப்பூவின் குணங்கள்.. நன்றி..

தோழி said...

@winmani

முப்பூ என்பது மூன்று உப்புக்கள் சேர்ந்த கலவை.. நன்றி..

aanmiga udhayam said...

சித்தர்கள் காய கல்பம் செய்ய முப்பு தான் அடிப்படையான மூலபொருள். சிதர்கள் காட்டிய யோகா நெறி என்ற நூலில் முப்பு பற்றி குறிப்பு இருக்கிறது. அதுபற்றிய நூலில் உள்ள சிறுகுறிப்பு:-

முப்பு என்பது 3 உப்புகள் சேர்ந்தது.
1 பூநீர் ( வெடியுப்பிவின் மூலம்) இது கைப்பு கசிவு உள்ளது. அதை போக்கி சுத்த உப்பாக்க வேண்டும். பூநீர் மலையடிவாரங்களில் உள்ள களர் நிலங்களில் கிடைக்கும். இது வெண்மையாகவும் மிருதுவாகவும் பசை போல் ஓட்டும் படியாகவும் இருக்கும். இதனை பணியும் வெப்பமும் நிறைந்த மாசி பங்குனி மதங்களில் இரவில் எடுக்கவேண்டும்.

2 கல்லுப்பு இது பூநீரை சுத்தமாக்க அவசியம். கடலில் இருந்து எடுக்க படுகிறது (கடல் நுரைக் கல் ) முத்து சிப்பி கிடைக்கும் இடங்களில் தேடி அனுபவ முறையில் எடுக்கவேண்டும். பூமிக்கு 3 அடிக்கு கீழ் கிடைக்கும் சுண்ணாம்பு கல் எடுத்து சுண்ணம் ஆக்கவேண்டும். அதனை பனிநீர் 4 படிக்கு அண்டகல் சுண்ணம் 1 படிக்கு தெளிவு எடுத்து பத்திரபடுத்தவேண்டும்.

3 அமுரி உப்பு, உடல் சிற்றின்பத்தில் ஈடுபடாமல் நெல்லி கெந்தியை சுத்திசெய்து சூரணம் ஆக்கி காலை மாலை அரை தோலஎடை அளவு சாப்பிடவேண்டும், அக்காலம் கருங்குறுவை அரிசி சாதமும் பசும் பாலும் ஆகாரமாக ஒரு நாளைக்கு இருவேளை உண்ணவேண்டும். அதிகநடை, காற்று, பனி, மழை, வெப்பம் இவை கூடாது. மனம் சஞ்சலமற்று இருக்கவேண்டும். 40 நாட்கள் இப்படி இருந்து 41 வது நாள் காலை முதலில் வரும் சிறுநீரை பத்திரபடுத்தவேண்டும் இப்படி சிலநாள் சேகரிக்கவேண்டும். சுத்தி செய்த பூநீரையும் கல்லுப்பையும் சமஅளவு சேர்த்து சுண்ணம் ஆக்கி அமுரி நான்கிற்கு ஒன்று சேர்த்து முதல் கொதிகாண எடுத்து முன்று நாள் பூமிக்கு அடியில் புதைக்கவும் இவ்வாறு பத்து முறை செய்தல் அமுரி(சிறுநீர்) சுத்தமாகிவிடும். பின்பு சுத்தி பூநீர், சுத்தி கல்லுப்பு, சுத்தி அமுரி உப்பு மூன்றையும் சம எடை கொண்டு அண்ட நீரால் அரைத்து வில்லை செய்து காயவைத்து பத்து எருவில் புடமிட்டு சுண்ணம் ஆக்கி பத்திரபடுதவும் இதுவே முப்பு சுண்ணம் ஆகும்.
காயகல்பம் செய்யவும் மற்றும் பல கொடிய நோய்களுக்கு மருந்து செய்ய நவலோகம் மற்றும் நவபாஷணம் செய்ய பயன் படுத்தியதாக குறிப்பு உள்ளது.

இப்படிக்கு

உதயகுமார்.s

Anonymous said...

))))))))))
Sure, except Siddhas no one knows what true Muppu, and also no one understands the lyrics. Anyone who understands the grace of God that is Muppu, like a true alchemist, never advertise, no one even knows what he's doing. He will reach the secret of immortality, and to keep secrets of God Shiva.
As proof of my words I give here my verse from Guru Agastyar Poorana Suttiram 216. Everyone gets the curse of Siddhas and God Shiva, who knows the secret and makes this show advertised. Agastiyar said that such a caste of drummers, who talk a lot and can not keep secrets, get the curse. They will never know the secrets to Immortality.

"பரமசிவன் சாபமிடப் பாலித்தார்காண்
ஏகமாய்ச் சாபமிட்டோம் வாமத்துக்கும்
மியலான வச்சரங்கள் தீட்சைமார்க்கம்
போகமாய் உயிர்களைத்தான் வாங்கிப் போட்டோம்
போட்டதனால் நூல்களெல்லாம் பொய்யாப் போச்சே."

Unknown said...

very nice

Raj said...

Muthusamy read a couplet in `Yogagnana Thirattu' about a salt which could help in alchemical work required for preparing the remedy for leprosy. After lots of hard work he was able to identify six different salts e.g. Sodium Carbonate, Silicon Nitrate, Copper Sulphate, Ammonium Carbonate, Calcium Carbonate and Sodium chloride. He discarded three salts out of six by trial and error process and finally learnt the art of using Cl (-), NO3 (+), SO4 (+) ions, which could help alchemical process to add potency to herbal preparations. He struggled for years together to standardize the protocol for combining these three salts and developed the `Trine salt'.

Post a comment