சித்தர்களின் தனித்துவமான உத்திகளில் ஒன்று முப்பு. இதில் தேர்ந்தவர்களால் மட்டுமே ரசவாத முறையில் எதனையும் செய்திட முடியும்.இரசவாதக் கலையின் உயிர் நாடியே முப்பூ என்றால் அது மிகையாகாது.
இதையே வசிட்டர்,
"அண்டரண்டம் நிறைந்த பொருள் முப்பூவப்பா
ஆறாப்பிணிகள் நீக்க ஒரு குருவுமாச்சு
அண்டரண்டம் நிறைந்த பொருள் தனைத் தொட்டு
ஆடலாம் வெகுகோடி வித்தை தன்னை
கண்ட கண்ட விதமாக உலகத் தோர்கள்
கருவறிந்து மருந்து செய்யத் தெரியாமற்றான்
கண்ட கண்ட மருந்துகளை தானே வாங்கி
கடை கெட்டுப்போய் வீணாய் கலங்குவரே"
என்று சொல்கிறார்.
மனிதன் யோகம் பயில குருவானவர் எத்தனை அவசியமோ அதே போல, உயர்வான ஒரு கோடி சித்துக்கள் செய்திடவும், தீர்க்க முடியாத நோய்களை தீர்த்திடவும், அழியும் உடலை அழியாது பேணிடவும், தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாய் மாற்றிடவும் தேவையானது முப்பூ.
"முப்பூ வதுலாகம் முடிந்ததொரு காரியமாம் என்னையா
அப்பூவை விட்டு அலைந்தால் வாதம் வருமோ
தொட்டவிடம் பட்டவிடம் தொல்புவியும் பொன்னாகும் - என்னையா
பட்ட பகல் போலே பக்குவமாய் சொல்லி விட்டேன்"
என்று முப்பூவின் சிறப்பை சொல்கிறார் நாதநாதச் சித்தர்.
முப்பூக்களையும் கண்டு கொள்பவனே உண்மையான சித்தனாவான், இவனுக்கு ரசவாதம் எல்லாம் சின்ன விசயமாகிவிடும், இவனால் அட்டமாசித்திகளையும் கொண்டு விளையாட முடியும்.
இந்த முப்பூ என்பது மூன்று உப்புக்களின் கலவையாகும், அந்த மூன்று உப்புக்கள் என்ன என்பதில்தான் தற்கால ஆய்வாளர்கள் ஒருவருக்கொருவர் முரண் படுகிறார்கள்.
அப்படி என்னதான் முரண்பாடு என்பதை அடுத்த பதிவில் விரிவாய் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

15 comments:
முப்பு – இது காயசித்தி வல்லபம் தருவது
முப்பு – இது மரணம் நீக்குவது
முப்பு – ஏம சித்தி வல்லது.
ஆவலோடு காத்திருக்கிறோம்!
அறிந்து கொள்ள!
மூப்பை நீக்கும் முப்பூ!
அற்புதமான பணி. சித்தர்கள் குறித்து நம்பகமான மற்றும் சுவாரசியாமான தகவல்களை தொடர்ந்து தருவதற்கு. உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல சித்தர் பெருமக்களை வேண்டுகிறேன்.
முப்பூ என்றால் மூன்று வகையான பூக்கள் என்று அர்த்தம் வராதா?
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
@அண்ணாமலை..!!
மிக்க நன்றி...
@ஜீவன்சிவம்
மிக்க நன்றி..
@டவுசர் பாண்டி...
ரசவாதத்தில் முப்பூ என்பது மூன்று உப்புக்களையே குறிக்கும்.. நன்றி.
@V.Radhakrishnan
மிக்க நன்றி...
எனது குருனாதருடன் முப்பு எடுத்த நினைவு வருகிறது. நன்றி.
Ashwinji
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
pls say where i get information about the holy place paruvathamalai ....in this blog ... waiting for your reply ....
pls say where i get the informations about the holy place ... paruvathamalai in this blog ...waiting for your reply .....
பர்வத மலை பற்றி அறிய இந்த இணைப்பை பார்க்கவும்.
http://temple.dinamalar.com/New.php?id=1034
திருவண்ணாமலையிலிருந்து தென்மாதிமங்களம் செல்ல தனியார் பேருந்துகள் உள்ளன. மலை ஏற்றம் சற்று கடினமான பயணம். சூர்ய அஸ்தமனத்திற்குப் பிறகு மலை ஏறி, இரவு கோயிலில் தங்கி, விடியற்காலை சூர்ய உதயத்திற்கு முன் இறங்கி விடுதல் நன்று. தேவையான அளவு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் விவரம் அறிய manikandan.citeee@gmail.com தொடர்பு கொள்ளவும்.
@தோழி ok.but what are the names of those three salts.
Post a Comment