காயகற்ப முறை - 04

Author: தோழி / Labels: , , ,

"உண்மையாய்க் கருப்பாக வேம்புண்டாக்கி
உகந்துமே மண்டலம் தான் கொண்டாயானால்
வெண்மையாஞ் சரீரமது கருவண்டு போலாம்
மேனியில் ரோமமெல்லாம் நிமிர்ந்தெழும்பும்
தண்மையாய் சடந்தானும் கற்பாந்தகாலம்
சமாதியிலே யிருக்கலாந் தழுக்காய்க்காணும்
ஒண்மையா இருட்டறையி லிருந்தாயானால்
உதிக்கின்ற கதிர்போலே யிருக்கும்பாரே"


- போகர் -


கருவேம்பின் பட்டை, வேர் இவைகளை எடுத்து உலர்த்தி காய வைத்து, தூளாக்கி தினமும் மாலை வேளையில் ஒரு பலம் அளவு எடுத்து ஒருமண்டலத்திட்கு உண்டு வந்தால் உடம்பில் உதிர்ந்த ரோமமெல்லாம் சீராக மீண்டும் வளரும், இந்தக் கற்பம் உண்ணும் காலத்தில் சமாதியிலே இருக்கலாம் அது சிறப்பாகக் கைகூடும், இந்த கற்ப மருந்து உண்ணும் காலத்தில் இருட்டறையில் இருந்தால் உடம்பானது சூரியன் உதிக்கும் போது எப்படி இருக்குமோ அது போல ஒளி வீசும் என்கிறார் போகர்.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

Unknown said...

கருவேம்பு என்பது வேப்ப மரம் என்றே கருதுகிறேன்.
ஒரு பலம் என்றால் எவ்வளவு தோழி!

rajsteadfast said...

Nalla Thagaval.

கருவேம்பு என்பது வேப்ப மரம் என்றே கருதுகிறேன்.
ஒரு பலம் என்றால் எவ்வளவு தோழி!

Nanri.

டவுசர் பாண்டி... said...

ஒரு பலம் என்பது தற் போதைய அளவுகளில் முப்பத்தி ஐந்து கிராம் (35g)

ATOMYOGI said...

***கருப்பாக வேம்புண்டாக்கி ***

சித்தர்கள் காயகற்ப முறைகளுக்கு கருப்பு நிற மூலிகைகளை சிறந்தவைகளாக கூறுகின்றனர். கருப்பாக இல்லாத மூலிகைகளை கருமூலிகை ஆக்கிய பின் காயகற்பத்திற்கு பயன்படுத்தினால் பயன் அதிகம், என்கின்றன்ர்.
இங்கு போகர் குறிப்பிடுவது கருப்பாக்கப்பட்ட வேம்பு (கருமூலிகையாக்கப்பட்ட வேம்பு)என்று நினைக்கின்றேன். அந்த வரியின் இறுதியில் வரும் பதத்தை கவனிக்கவும்.

தோழி said...

@டவுசர் பாண்டி...

இதற்கு முந்தைய பதிவு ஒன்றின் எனது கருத்தை அப்படியே கோப்பி பண்ணி பேஸ்ட் செய்திட்டீங்களே...

தோழி said...

@மாயாவி

கருவேம்பு என்பது 100 வயதாகிய வேப்பமரத்தை.. நன்றி

டவுசர் பாண்டி... said...

//இதற்கு முந்தைய பதிவு ஒன்றின் எனது கருத்தை அப்படியே கோப்பி பண்ணி பேஸ்ட் செய்திட்டீங்களே...//

அவ்ளோவ் கருத்தா பதிவ படிக்கிறோமாக்கும்.... :)

தோழி said...

@டவுசர் பாண்டி...
மிக்க நன்றி...

Unknown said...

மிக்க நன்றி .

செல்வமுரளி said...

கருநொச்சி, கருவேம்பு கருசீரகம்...?

Unknown said...

i have doubt
no pattiyam in this

தோழி said...

பத்தியமில்லாத கற்பமுறைகள் வெகு குறைவே!, நான் இதுவரை இங்கே பகிர்ந்த கற்பங்களுக்கான பத்திய முறையினை தனி பதிவாக தந்திருக்கிறேன்...அது எல்லாமுறைகளுக்கும் பொதுவானது... நன்றி

Ruban George said...

ungal thonduku mikka nandri

pogar said...

தங்கள் தகவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.

நன்றி

சுரேசு

Post a comment