தன்வினை தன்னைச்சுடும்...

Author: தோழி / Labels: , ,

பட்டினத்தார் துறவு நிலையில் வீடு வீடாக உணவு பெற்று உண்டது கண்டு அவரது உறவினர்கள் சினமடைன்தனர் தங்கள் குலப்பெருமை இவரால் சீரழிகிறதே என்று ஒருநாள் அந்த உறவினர்கள் அப்பம் ஒன்றில் நஞ்சு கலந்து, அதை உண்ணும்படி பட்டினத்தாரிடம் தந்தனர்,

உண்மையை உணர்ந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை உண்ணவில்லை,

"தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்"
என்றபடி, அப்பம் கொடுத்த உறவினர் வீட்டுக் கூரை மீது அதை எறிந்தார். உடனே அவர்கள் வீடு தீப்பற்றி எரிந்தது.

பட்டினத்தார் பெருமையை உலகம் அறியச்செய்த முதல் அற்புதம் இது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

7 comments:

தாமோதர் சந்துரு said...

அன்ன விசாரம், அதுவே விசாரம்,
அது ஒழிந்தால், சொர்ணவிசாரம் தொலையா விசாரம்,
நல்தோகையரை பண்ணும், விசாரம் பலகால் விசாரம்,
இப்பாவி நெஞ்சுக்கு, என்ன விசாரம் வைத்தாய், இறைவா, இது ஏன் நித்தியானந்தாவுக்குப் புரியவில்லை

D.R.Ashok said...

காமம் தவறில்லை சந்துரு.. அவர்களின் படுக்கை அறையில் போய் காமிரா வைத்தும்.. அதை வைத்து மீடியா காசு பார்த்ததும் தான் தவறு :)

chandru2110 said...

பட்டினத்தாருக்கு அந்த பெயர் எப்படி வந்தது தோழி.

உருத்திரா said...

காலன் வருமுன்னே! கண் பஞ்சடை முன்னே!
பாலூன் கடைவாய்ப் படுமுன்னே! -மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே!,ஊரார் சுடு முன்னே!
குற்றாலத் தானையே கூறு!

R.Gopi said...

உறவினர்கள் கொடுக்க, அந்த அப்பத்தை பட்டினத்தாரின் சகோதரியே அவருக்கு அளித்ததாக “பட்டினத்தார்” படத்தில் பார்த்த ஞாபகம்..

பட்டினத்தாரின் இயற்பெயர் திருவெண்காடார்.. அவரின் மகன் பெயர் மருதவாணன் என்பதே சரியாகப்படுகிறது தோழி...

kalavum kattrum ara said...

நித்யானன்தரை பற்றி சொல்லும் போது .. அவர் அதுசமயம் .. மயக்க நிலையில் இருந்ததாக குறிபிட்டுகிறார் .. அதாவது பிறர் கட்டுபாட்டில் ( செய்வினை மூலம் இது சாத்தியமே ) தற்போது அப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கத்தானே செய்கிறார்கள் .... அவரும் சுமார் ௨௦௦௦௦ கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆயிற்றே .... இப்படியும் நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கும் போது ..நிச்சயமாக எதையும் கூறிட இயலாது

இவன்... said...

பட்டினதாரின் தமக்கைதான் அவருக்கு விஷம் வாய்த்த அப்பம் கொடுத்தது.. அவரின் சொத்துக்காக அதை செய்தார்... பட்டினதாரின் மகனின் பெயர்தான் மருதவாணன்..அவர் வாழ்ந்த ஊரின் அரசனை விட பெரும் செல்வந்தராக திகழ்தார்... அவரின் வீட்டில், 16 ஆள் உயர தொட்டிகள் நிறைய தங்க காசுகள் இருந்ததாக சில பதிவுகளில் குறிப்பிட கண்டேன்...

தோழி, அருமையான பதிவுகள்... இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்கின்றேன்...

Post a Comment