
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு"
- திருக்குறள் -
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம், என்பார் திருவள்ளுவர்.
இந்த நிலையாமையை நீக்க எந்த வழியும் இல்லையா?
நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் இவைகளை எந்த அறிவியல் மேதைகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஏன் முடியாது? முடியும் என்றால் எப்படி?
இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டவர்களும், இவற்றிலிருந்து மீண்டவர்களும் சித்தர்கள் மட்டுமே. பிணியையும், மூப்பையும் வெல்லவும், இளமை குன்றாமலும், மரணம் அண்டாமலும் தங்கள் உடலைப் பாதுகாக்கும் வழிகளைத் தெரிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே.அந்த வழிகளை மக்கள் பயன்பெற பாடல்களில் எழுதியும் வைத்தனர். இவ்வாறு தங்கள் உடலைப் பேணும் சித்தர்களின் முறையே சாகாக் கலை எனப்படும் காயகற்ப முறையாகும்.
காயம் என்றால் உடல் கற்பம் என்றால் அழியாது வைத்திருக்கும் மருந்து. ஆகவே உடலை அழியாது வைத்திருக்கச் செய்வதே காயகற்பம் எனப்படும்.
"சாவாதிருந்திடப் பால்கற - சிரம்
தனிலிருந்திடும் பால்கற
வேவாதிருந்திடப் பால்கற - வேறு
வெட்டவெளிக்குள்ளே பால்கற!"
- என்பார் இடைக் காட்டுச் சித்தர்
இனி,
உடலை அழியாது பேண, அதாவது நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்பவற்றிலிருந்து உடலைக் காக்க என்ன என்ன காயகற்ப முறைகளைச் சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்..
Post a Comment



23 comments:
"காயமே இது பொய்யடா இது காற்று அடைத்த பைய்யடா " இது சித்தர்களோட பாடலா?
ம்ம்.. இதுக்காகதான் காத்துகிட்டு இருந்தேன். காயகற்பம் சம்பந்தமா நிறைய சந்தேகங்கள் இருக்கு. அடுத்து வரும் பதிவுகள் என் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் என்று நம்புகிறேன்.
@chandru2110
ஆமாம் சித்தர் பாடல் தான் இதோ முழுப் பாடலும்... நன்றி
“காயமே இது பொய்யடா
வெறும் காற்றடித்த பையடா
மாயனாராம் மண்ணு குயவன்
செய்த மண்ணு பாண்டம் ஓடடா”
@மாயாவி
மிக்க நன்றி...
@மாயாவிஉங்க சந்தேகம் ஏதாவது ரகசியத்தை கேக்குற மாதிரி இருந்துச்சுனா இப்பவே மறந்துடுங்க. ஏன்னா சித்தர்கள் வெளிபடுத்த நினைச்சாலும் தோழி விரும்பளை.
@தோழிமிக்க நன்றி . இந்த முழு பாடலை அறிய வேண்டுமென்று ஆசை. நிறைவேறிவிட்டது .
அவங்களே சொல்லனும்னு நினைச்சாக் கூட இந்த சந்துரு விடமாடார் போல :((
பாண்டி அண்ணே நீங்க இதுக்கு முன்னாடி பதிவுகளிலிருந்து ஏதாவது ரகசியம் சொல்லிருக்காங்களான்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.
நுகர்வு கலாச்சாரத்தில் ரகசியம் என்று எதுவும் இல்லை. . . இன்றைக்கு சித்த வைத்தியம் என்கிற பெயரில் பட்டப் படிப்புகளும், பட்டய படிப்புகளும் வந்துவிட்ட சூழலில் நீங்கள் சொல்லும் ரகசியங்கள் அத்தனையும் பொதுவில் வைக்கப் பட்டுவிட்டவை.
நீங்கள் மறைக்கச் சொல்லும் ரகசியங்கள் எல்லாம் இன்றைக்கு சித்த மருந்துகள் என்கிற பெயரில் ப்ளாஸ்டிக் குப்பிகளில் ஏற்கனவே கடைக்கு வந்துவிட்டவை.
இம்மாதிரியான தளங்கள் பொதுவானவை, எனவே இங்கே இதைச் சொல்லாதே அதை மறைக்காதே என்பது ஏற்புடையதல்ல...
யாரோ ஒரு பணக்கார முதலாளிகள் இதை செய்து லாபமீட்டலாம்,அதே நேரத்தில் ஒரு சாமானிய வலைபதிவு வாசகன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளக் கூடாதென்பதும் முரண்நகை!
நல்லக் கருத்து . வாழ்த்துக்கள்
well written,i wud like to discuss on behalf of siddha matters...do you have gmail id?
//இம்மாதிரியான தளங்கள் பொதுவானவை, எனவே இங்கே இதைச் சொல்லாதே அதை மறைக்காதே என்பது ஏற்புடையதல்ல...///
நான் எதையும் மறைக்க சொல்லவில்லை, விரும்பவும் இல்லை.
என்னை பொருத்தவரைக்கும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மட்டுமே ரகசியம். மனிதனால் முழுமையாக புரிந்துகொள்ளபட்டுவிட்டால் அது அறிவு. நான் அறிவை வளர்க்க விரும்புகிறேன். நம் நாட்டில் நடுவண் அரசின் சித்த மருத்துவ ஆய்வகங்களிருந்து வெளிபடும் மருந்துகளை நம்பலாம். மற்ற நிறுவனங்களின் மருந்துகளின் நம்பகத் தன்மை எனக்கு இல்லை. அது பாரம்பரியமாக வந்தாலும் சரி. மருத்துவம் என்பது சித்தர்களால் வெளிபடுதபட்டு தற்போது வெற்றிகரமாக உபயோகபடுத்தபடும் விசயம். மற்ற பல விசயங்கள் புரிந்துகொள்ளபடாமல் உள்ளது.
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே
நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே.
saga kalai katrukodnu sagamal enna siya pogirom valum konjanatkalil nanamai seiyalame idanal dano sithargal idai ragasiyamai padi vaithargal
Hi,
I am your follower for the last one month. Really good and indepth stuff you are covering. I want to Practice soemthing for good. Can you suggest me which one to do ... Please guide me
Sekar
@vikram
மிக்க நன்றி...
@ஜெரி ஈசானந்தன்.
நான் ஜிமெயில் ஐ டி பெரிதாகப் பயன்படுத்துவதில்லை.நன்றி.
@Sekar
தங்களின் அக்கறைக்கு நன்றி....பதிவை தொடர்ந்து படியுங்கள்.... உங்கள் செய்முறையில் ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் தெரிந்தவரை விளக்குகிறேன்..
There are several Kayakapla medicines in Siddhars pattern. Infact,they are rare and difficult to prepare. There are simple karpa medicines like Karisalanganni keerai,kadukkai etc.
" Kayakalpam thedi nenju punnaavaar"- Idhu Thaayumaanavar.
Apart from all these,there is a Superioir Yogic Practice called 'Kayakalpa Yoga'. All siddhars gave hint about this yoga in their poems. Bogar taught this in India and China. Vethathiri Maharishi of South india
re-invented this mysterious process after 40 yrs research and refined it and taught through his service centre. If anyone is willing to know about the kayakalpa yoga, I am ready to give them a Theoritical outline about it. The outline will be based on scientific approach and rational thinking. So no one needs to be afraid of.
Kayakalpa excercise is simple to practise.
-Lingeswaran.
The purpose of kayakalpa yoga is to slow down the aging process and postpone the death.
deathless life can reach easily by everyone...with the help of god grace i know the deathless life
kayakalpa is poison, poison is kayakalpa. they are same, that is, "LITTLE DROP OF WATER MAKES A MIGTHY OCEAN" or "TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING".
உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி
Post a Comment