பாதரசத்தை சுத்தி செய்யும் முறைகள்…

Author: தோழி / Labels: , ,


"ஆகாத கன்மச மகற்ற முறை(மை) கேளு
வாகான கல்லுப்பு மாட்டு சமபாகன்
தாகான குமரிப்பூ சாறொரு மூன்று நாள்
பாகாய்க் கழுவிப் பதனமாய் வாங்கிட "


இப்பாடலின் பொருள்:-
இரசத்திலுள்ள சகடுகள் அகற்ற ஒரு முறையைக் கேளு, கல்லுப்பை இரசத்திற்கு இணையாக எடுத்துக் கொண்டு. குமரிச் சாற்றை சேர்த்து மூன்றுநாள் அரைத்துக் கழுவி எடுத்துக் கொள்.

என்ற பாடல் மூலம் திருமூலர் இரசத்தில் உள்ள குற்றங்கள் தோஷங்கள் அகற்ற மிக இலகுவான வழியைக் கூறியுள்ளார்.

இதே போல் கொங்கணவரும் மிக இலகுவான வழி ஒன்றைச் சொல்லி இருக்கிறார்,

"உப்பது பலமும் நாலு
உயர்ந்தி டும்சூதம் எட்டு
கப்பதுக் கல்வத் திட்டுக்
கலந்து வார்குமரிச் சாறு
செப்பது யரைப்பா யப்பா
சிறந்துடன் மூன்று நாள் தான்
அப்புய கஞ்ச தோஷம்
ஆறொன் றும்போகும் பாரே"


இம்முறையும் எளிமையானதே.

இப்பாடலின் பொருள்:-
உப்பை நான்கு பலம் எடுத்து கல்வத்திலிட்டு அதில் எட்டு பலம் சூதத்தைவிட்டு, அதில் குமரி சாற்றை வார்த்து மூன்றுநாள் அரைக்க ஏழுவித தோஷமும் போய் விடும் பாரு.

இனி, இவ்வாறு சுத்தி செய்யப் பட்ட பாத ரசத்தைக் கொண்டு இரசமணி கட்டுவது எப்படி?

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

மாயாவி said...

பாடலை சற்று விளக்குங்களேன்.

மாயாவி said...

1.இங்கு உப்பு எனக் குறிப்பிடப்படுவது நாம் உணவில் சேர்த்து கொள்ளும் சாதாரண உப்பையா?
2. கல்வம், குமரி என்றால் என்ன?
3. ஒரு பலம் என்பது எவ்வளவு எடை?

தோழி said...

1, இங்கு உப்பு என்பது நாம் உணவில் பயன் படுத்தும் உப்பே ஆகும்,

2, கல்வம் என்பது ஒரு வகைப் பாத்திரம், குமரி என்பது ஒருவகை மூலிகைக்கு சித்தர்கள் சொன்ன மறை பொருள் பெயர்.

3,ஒரு பலம் என்பது தற் போதைய அளவுகளில் முப்பத்தி ஐந்து கிராம் (35g)

மாயாவி said...

நன்றி! (நம்மால செய்ய முடியாது போல இருக்கே!!!!)

manikandan said...

Dear Thozhi,

God bless you.

The kumari means Sotru katralai (Aloe vera). Normally this is used in siddha field as kayakalpa mooligai.

Sai manikandan.

RAJA said...

thozhi, ordinary mercury'la rasamani pannalama?

sanmgganesh said...

where we get 'Kumari' mooligai?

Bharathan Periasamy said...

kumari enbathu katalai thane

Dr.chack said...

patharasam suthi anatha epdi kandupdkurathu.....

Dr.chack said...

rasam suthi anatha epdi conform pandrathu...

Dr.chack said...

3 days continue uh araikanuma....

Ragu Nathan said...

இதில் சூதம் என்றால் என்ன

Ragu Nathan said...

இதில் சூதம் என்றால் என்ன

Post a Comment