ரசவாதம் செய்ய அகத்தியர் சொல்லும் முறைகள்...

Author: தோழி / Labels: , , ,"கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே"


என்று ஒரு முறையையும்,

"பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே"


என்று ஒரு முறையையும்,

"சொன்னாலும் நீர் கேளீரே
சும்மா சுவர் போல் இருந்தீரே
பொன்னா பொன் ஆவரையுடன்
பொன்னும் அத்தனை மாலைச் சாற்றால்
கன்னார் பேதி சிலை ரசம்
காந்தம் வெள்ளியும் தானுருக்க
என்னாம் என்னாம் என்னாதே
பொன்னாம் பொன்னாம் பொன்னாமே"


என்று ரசவாதம் செய்யும் முறைகளைச் சொல்லும் அகத்தியர், இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

"எண்ணான வேதைகோடி
உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும்
தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி
உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும்
மேன்மையாம் பலிக்கும் தானே"


எண்ணிக் கணக்கிடமுடியாத கோடிக் கணக்கான ரசவாத முறைகள் உள்ளன, அவை உத்தமர்களுக்கும், உண்மையான சான்றோருக்கும், இரக்க குணமுள்ளோருக்கும் , உண்மையான தொண்டருக்கும், நல்ல மனம் உள்ளவருக்குமே பலிக்கும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

36 comments:

ATOMYOGI said...

***உத்தமர்களுக்கும், உண்மையான சான்றோருக்கும், இரக்க குணமுள்ளோருக்கும் , உண்மையான தொண்டருக்கும், நல்ல மனம் உள்ளவருக்குமே பலிக்கும் ****

ஸ்டார்டிங் நல்லா தான் இருக்கு பினிஷிங் ஒத்து வராது போலிருக்கே!!!!

நல்ல தகவல். நன்றி.

தோழி said...

@மாயாவி

மிக்க நன்றி...

டவுசர் பாண்டி... said...

எதாவது ஒரு முறைக்காவது பொருள் கூறியிருக்கலாம்.

chandru2110 said...

இது போன்ற மேலும் சில பாடல்கள் இருந்தால் கொடுங்கள், விள‌க்கம் தேவையில்லை. திறமையும் நல்லென்னமும் கொண்டோர் புரிந்து கொள்ளட்டும்.

டவுசர் பாண்டி... said...

விளங்கிக் கொள்வோருக்கு விளக்கம் தேவையில்லைதான், அத்தகையவர்கள் எவரும் இம்மாதிரி பதிவுகளில் வந்துதான் இப்பாடல்களை படித்தறிய வேண்டுமென்பதில்லை.

இம்மாதிரியான தளங்கள் எல்லாருக்குமானவை, இங்கே விளக்கத்துடன் இடுவதில் தவறொன்றுமிருப்பதாக நான் நினைக்கவில்லை.

தோழி said...

@டவுசர் பாண்டி...

பொருள் சொன்னால் முயற்சி செய்யும் ஆசை வரும் ஆகவே சொல்லவில்லை.. நன்றி

தோழி said...

@chandru2110

முடிந்தவரை மேலும் தருகிறேன். நன்றி

டவுசர் பாண்டி... said...

//பொருள் சொன்னால் முயற்சி செய்யும் ஆசை வரும் ஆகவே சொல்லவில்லை.. நன்றி//

இதைத்தான் பாதுகாப்பற்ற உணர்வு எனக் கூற வந்தேன். இந்த பாடல்கள் உங்கள் வசம் மட்டும் இருக்கவில்லை. எத்தனையோ பேர் இதை படித்திருக்கலாம், முயன்றிருக்கலாம்...ஆனால் எவரும் வெற்றி பெற்றிருப்பதாய் தெரியவில்லை.

இதற்கு என்ன அர்த்தமாயிருக்கும்....முட்டாள்களும், மூடர்களும், முரடர்களும் நம்மிடம் இல்லையென்று அர்த்தம் ஆகிறதா இல்லை இந்த புதிர் குறிப்புகள் அத்தனை எளிதில் கட்டவிழ்க்க இயலதாக இருக்க வேண்டும் ....இனி உங்கள் இஷ்ட்டம்.

உங்கள் பதிவு, உங்களின் முயற்சி இதற்கு மேல் நான் சொல்ல ஏதுமில்லை.

வாழ்த்துகள்....

தோழி said...

@டவுசர் பாண்டி...

முயன்று வென்றவர்கள் இருக்காங்க, அப்படி வெற்றி பெற்றவங்க செய்வதை பார்த்தவங்களும் இருக்காங்க.. அப்படி பார்த்தவர்களில் ஒருவர் என்னுடைய முந்திய பதிவு ஒன்றுக்கு கருத்தும் சொல்லி இருந்தாரு.. முடியாது என்றில்லை தவறான பொருள் கொண்டால் வெற்றி கிடைக்காது என்பது தான் உண்மை.. நன்றி.

டவுசர் பாண்டி... said...

கடுவெளிச் சித்தரின் பாடலொன்று. . .

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம்.

தோழி said...

@டவுசர் பாண்டி...

மிக்க நன்றி

டவுசர் பாண்டி... said...

தங்கத்தை விடுங்கள்...எனக்கு உங்களிடம் வேறொரு கேள்வி இருக்கிறது. நாடிகள் பற்றி பெரிய அளவில் பேசிய சித்தர்கள். யோக முத்திரைகளை பற்றியும் கூறியிருக்கின்றனர்.

அக்கு பஞ்சர், அக்கு ப்ரஷர் இவைகளெல்லாம் சித்தர்களின் பங்களீப்பாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இந்த வரிசையில் முத்திரகளின் மூலம் உடல் மற்றும் மன நலம் குறித்தவைகள் பற்றிய குறிப்புகள் ஏதேனுமிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

puduvaisiva said...

அட சென்ற மூனு பதிவையும் இப்பதான் படித்தேன் தோழி
உங்கள் ஈடுபாடும் உழப்பும்க்கும் பாராட்டுகள்.

எல்லாத்துக்கும் ஒரு நல்லதுனா அதுக்கு எதிரா ஒரு கெட்டதும் உண்டு சொல்லுவாங்க ( உ.ம் நெருப்பு = தண்ணீர்) அதுபோல இந்த ரசவாத செய்முறையில் சூரியகிராணம் அன்று செய்யும் தங்கத்தை
அக்காலங்களில் மன்னர்கள் எதிரிகளிடம் இருந்து தம் நாட்டைகாக்க நாட்டின் எல்லைகளில் இந்த ரசவாத தங்கத்தில் இருந்து காவல் தெய்வங்கள் செய்து அதற்கு மூன்று மண்டலம் மந்திர உறுவேற்றி
சில பலிகள்இட்டு அம்மாவசை இரவில் மண்ணில் புதைத்துவிடுவார்கள். இவைகள் நாட்டைகாக்கும் என்று நம்பினார்கள்.

டவுசர் பாண்டி... said...

இது எனக்கு புதிய செய்தி சிவா :)

தோழி said...

@♠புதுவை சிவா♠

நீங்கள் சொன்னது உண்மை தான், எங்கள் இலங்கை நாட்டிலும் வன்னி ராச்சியம் என்று ஒரு பண்டைய ஆட்சிப் பகுதி இருந்தது அந்தப் பகுதியை ஆண்ட மன்னனும் தனது இராச்சியத்தைக் காக்கவேண்டி இந்த ரசவாத தங்கத்தில் இருந்து காவல் தெய்வங்கள் செய்து மண்ணில் புதைத்து வைத்திருந்தானாம் என்று இன்றும் அந்த தங்க சிலைகளைத்தேடி ஒரு கூட்டம் அலைந்து கொண்டு தான் இருக்கிறது... மிக்க நன்றி.

டவுசர் பாண்டி... said...

சித்தர்களைப் பற்றிய திரு.ஜெயமோகன் அவர்களின் கட்டுரையின் இனைப்பினை நான் இங்கே தரலாமா?

nandhalala said...

மதி மயக்கும்
விதி கெடுக்கும்
வீனர் தூக்கம் தொலைக்கும்
பொன்னாசை பெண்னாசை
இரண்டும் கொண்டால்,
இறைவா உன் முன்
இத்தங்கம்
எம்மாத்திரம்!!!

தோழி, இந்த வலைப்பூ பதிவுகள் பலகாலம்
பேசப்படும்.பாராட்டுக்கள்

chandru2110 said...

பாண்டி கூறியது போல் நாடிகள், முத்திரைகள் பற்றி அறிய விறும்புகிறேன். சீக்கிரம் பதியுங்கள்.

nandhalala said...

பதிவுகளை போலவே இங்கு கிடைக்கும் தகவல்களும் உண்மையில் அரிது. நன்றி புதுவை சிவா அவர்களே

nandhalala said...

அட ... தோழி நீங்க தகவல் களஞ்சியம் தான்

தோழி said...

@chandru2110

நான் ஒரு வரிசையை உருவாக்கிக் கொண்டு அதன் பிரகாரம் பதிவுகள் போடுறேன், ஆனால் சித்தர்கள் சொன்னவை எல்லாம் பதிய தான் முடிவு செய்துள்ளேன். ஆகவே, முடிந்தவரை சித்தர்கள் சொன்ன அனைத்தும் பதியவே முயல்வேன். உங்கள் விருப்பப் பகுதிகள் வரும் போது முடிந்தவரை தெளிவு படுத்துகிறேன். சற்று பொறுத்து இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் மிக்க நன்றி

தோழி said...

@நந்தா

மிக்க நன்றி...

டவுசர் பாண்டி... said...

அநேகமாய் தினமும் உங்கள் பதிவின் பக்கம் வந்து போகிறவன் நான்....எல்லாவற்றுக்கும் சேர்த்து இன்று பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களின் வரிசைப்படி பொறுத்திருந்து படிப்பதற்கு நான் தயார் .

தோழி said...

@டவுசர் பாண்டி...
முடிந்த வரை தினமும் ஒரு பதிவு போடவே முயற்சி செய்கிறேன்... உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

puduvaisiva said...

"நந்தா said...
பதிவுகளை போலவே இங்கு கிடைக்கும் தகவல்களும் உண்மையில் அரிது. நன்றி புதுவை சிவா அவர்களே"

நண்பா நந்தா
நன்றி அனைத்தும் நம் தோழிக்கே சொந்தம்

நான் சிறுகல்
நம் எண்ண அலைகள் ஒன்றுபடும் போது
அந்த உரசலால் எழும் பொறி.
அந்த ஒளியில் நனையும்
பழைய நினைவுகள்..

"டவுசர் பாண்டி... said...
இது எனக்கு புதிய செய்தி சிவா :)"

பாண்டி எப்படி இருக்கீங்க ? உங்க கடைய ரொம்ப நாளாக பார்க்கமுடியலை.

puduvaisiva said...

"இன்றும் அந்த தங்க சிலைகளைத்தேடி ஒரு கூட்டம் அலைந்து கொண்டு தான் இருக்கிறது"

நன்றி தோழி

வாசியோகத்தில் "வீடு கட்டல்" என்ற உயர்நிலை உண்டு அதை தெரிந்தவர்களால் அந்த காவல் தெய்வம் இருக்கும் இடத்தை அடையாளம் காட்ட முடியும்.

ஆனால் அந்த சிலைகளில் மறைவிடத்தில் உள்ள மிக சக்திமிக்க யந்திரம் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த இயந்திரங்கள் அவ்வளவு சாதரமானது இல்லை.

அண்ணாமலையான் said...

சொக்க தங்கம் ..... நடக்கட்டும்... நாலு பேருக்கு கிடைக்கட்டும்

அண்ணாமலையான் said...

நன்றி வனக்கம்

Sekar said...

நன்றி !

தோழி said...

@♠புதுவை சிவா♠

நல்ல தகவல்கள் மிக்க நன்றி..

THIVAKAR said...

தோழி தங்கள் முயற்சிகளே இங்கே தங்கமாக எங்களுக்கு இருக்கிறது . இவ்வித விசயங்களே உன்னமையில் நிலைக்கும் தங்கம். தங்கள் முயற்சியை தொடருங்கள் . எனது வாழ்த்துகள் .

sikandhar said...

கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே"

என்று ஒரு முறையையும்,

"பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே"

என்று ஒரு முறையையும்,

"சொன்னாலும் நீர் கேளீரே
சும்மா சுவர் போல் இருந்தீரே
பொன்னா பொன் ஆவரையுடன்
பொன்னும் அத்தனை மாலைச் சாற்றால்
கன்னார் பேதி சிலை ரசம்
காந்தம் வெள்ளியும் தானுருக்க
என்னாம் என்னாம் என்னாதே
பொன்னாம் பொன்னாம் பொன்னாமே"

என்று ரசவாதம் செய்யும் முறைகளைச் சொல்லும் அகத்தியர், இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

"எண்ணான வேதைகோடி
உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும்
தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி
உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும்
மேன்மையாம் பலிக்கும் தானே"

எண்ணிக் கணக்கிடமுடியாத கோடிக் கணக்கான ரசவாத முறைகள் உள்ளன, அவை உத்தமர்களுக்கும், உண்மையான சான்றோருக்கும், இரக்க குணமுள்ளோருக்கும் , உண்மையான தொண்டருக்கும், நல்ல மனம் உள்ளவருக்குமே பலிக்கும் என்கிறார்.

arulmozhi sethuram said...

உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.

sundaramoorthy.k said...

nandri....

sundaramoorthy.k said...

nan mudhal murai partha unmai ithu... nandri.... please let me know all the original books..

Unknown said...

Hi my friend thanks.

Post a comment