பாதரசத்தில் உள்ள தோஷமும் குற்றமும்...

Author: தோழி / Labels: , ,

பாதரசத்திற்கு எட்டு வகையான தோஷமும் ஏழு வகையான சட்டையும் உண்டு என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

“உண்டீனங் கெளடில்யம் ஓதும நவர்த்தம்
சண்டத்வம் பங்கோடு சங்காரம் - விண்ட
பளுசாற்ச மலத்வம் பன்னுசவி ஷத்வம்
விளுமெண் ரசதோடம் வேறு.”


என்ற பாடலில், உண்டீனம், கெளடில்யம், அனவர்த்தம், சங்கரம், சண்டத்துவம், பங்குத்வம், சமலத்வம், சபிஷத்வம் என்ற எட்டு விதமான தோஷம் உண்டு என்று விளங்கப் படுத்தப்பட்டுள்ளது.

இதே போல இரசத்தில் எழு சட்டைகள் உள்ளதாக சொல்லப் படுகிறது, இந்த எழு சட்டைகள் என்று சித்தர்களால் சொல்லபடுவது இரசத்தில் கலந்துள்ள மாசுக்களான தாதுப் பொருட்களையே, அந்த எழு சட்டைகளையும் சித்தர்கள் வரிசைப் படுத்தியுள்ளனர் அவையாவன,
நாகம், வங்கம், அக்கினி, மலம், விடம், கிரி, சபலம் ஆகியவையே ஆகும்.

ஆகவே இந்த பாத ரசத்தை எடுத்ததும் பயன்படுத்தமுடியாது என்பது தெளிவாகிறது அப்படி பயன்படுத்த வேண்டுமாயின் அதை சுத்தி செய்து கொள்வது எப்படி? சுத்தி செய்வது என்றால் அதன் தோஷத்தையும், குற்றத்தையும் நீக்கிக் கொள்வதை சுத்தி செய்வது என்று அழைப்பர்.

இரசத்தை சுத்தி செய்ய சித்தர்கள் சொன்ன இலகு வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

chandru2110 said...

தோசம் மற்றும் குற்றம் என்பது அறிவியல் சார்ந்ததா?

செல்வமுரளி said...

ரசவாதத்தை செய்யும் இரண்டு நபர்களை சமிபத்தில் சந்தித்தபோது அவர்கள் சொன்ன ஒரே விஷயம் அரசாங்கம் தங்களை போலி மருத்துவர்கள் என்று முத்திரைகுத்தியது பற்றி வருத்தப்பட்டார்கள்.

பொதுவாக ரசவாதத்தை செய்பவர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து விலகித்தான் இருப்பார்கள். என்று அவர்கள் சொன்னார்கள். அது எந்த அளவுக்கு உண்மை

Kumar P said...

அறிவியல் சார்ந்தது எனில் எவ்வாறு ? விளக்கம் தரவும்... நன்றி...

thirumandhiram said...

பாதரசத்தில் தோசம் மற்றும் குற்றம் என்பவை அறிவியல் சார்ந்தது என்பதற்கு எனக்குத் தெரிந்த விளக்கம் பின்வருமாறு.

பாதரசம் இயற்கையில் சல்பைடு மற்றும் ஆக்சைடு ஆகவே கிடைக்கிறது. விஞ்ஞானப் பூர்வமாக பாதரசத்தை 100% சுத்தமானதாக மற்றுவதற்கோ, திடப் பொருளாக மற்றுவதற்கோ வழிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். பாதரசத்தை 100% சுத்தம் செய்தோமானால் அது அருமன் வாயு போன்று மாறிவிடுகிறது.

நன்றி.

e.nagaraj vignesh said...

good

e.nagaraj vignesh said...

good for your sithargal inforamation

e.nagaraj vignesh said...

good

e.nagaraj vignesh said...

good

Post a Comment