அடிக்கு ஒரு பொற்காசு...

Author: தோழி / Labels: , ,
கருவூரார் என்று அழைக்கப்படும் கருவூர்த்தேவர் ஒரு சமயம் நெல்வேலிக்குச் சென்று இருந்தார்.நெல்லையப்பரைத் தரிசிக்கும் ஆசையில் கோவிலுக்குச் சென்றார். அப்போது நிவேதன காலம், இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை அழைத்தும் இறைவனின் தரிசனம் கிடைக்கவில்லை. "அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?" என்று இவர் நகைவுடன் கூறவும், கோவிலைச் சுற்றி ஏருக்கும், வேண்டாத புல் பூண்டுகளும் முளைத்துக் கோவிலை மறைத்து நின்றன.

அங்கிருந்து திரும்பியும் பாராமல் நடந்தார் சித்தர், சித்தனின் கோவம் சிவனையும் நடுங்க வைத்தது. கருவூரார் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்தார். "அப்பனே இத்தனை கோவம் ஆகாது உனக்கு நீ என்னைக் காண வந்த போது நைவேத்திய நேரம். நான் உன்னுடைய குரலுக்கு செவிசாய்த்தும் பதில் சொல்ல முடியாமல் போயிற்று" என்று பக்குவமாய் சொன்னார். "சரி, போனது போகட்டும், திரும்பிவா திருநெல்வேலிக்கு" என்று இதமாக அழைத்தார்.

கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு வழங்கினார் இறைவன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

sury said...

சிலிர்க்கவைக்கும் நிகழ்ச்சி.

சுப்பு ரத்தினம்.

உருத்திரா said...

இப்படியெல்லாம் இருந்தவங்க,இன்று ஏன்?இப்படிப் போனாங்க?

chandru2110 said...

கடவுளே சித்தர்களுக்காக ஒடி வந்திருக்கிறார்..

நாளைப்போவான் said...

ivarthan raja raja chozhan kaalaththiya karuvoor thevara???

Kumar P said...

சித்தர்களை எவ்வாறு உணர்வது ?

Guru pala mathesu said...

சித்தர்களின் வேண்டுதலுக்கு சிவனே வந்திருக்கிறாரா? வியப்பான பகிர்வு நன்றி தோழி

Post a Comment