
இரசவாதம் என்பது தாழ்ந்த உலோகங்களை சில வேதியல் முறைகளைக் கையாண்டு முறைப்படி உயர்வகை உலோகங்களாக மாற்றுவதாகும்.
இந்த உலோக மாற்றத்தை சித்தர்கள் தங்கம் செய்யும் பேராசையால் செய்யவில்லை, அழியக் கூடிய உடம்பை அழியாமல் பாதுக்காக்கும் காயகல்ப்ப மருந்துகள் செய்யவே பயன்படுத்தினார்கள். இவ்வாறு இரசவாதம் காயகல்ப்ப மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் பட்டதே தவிர தங்கத் தயாரிப்புக்கு அல்ல. இதற்கு சித்தர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே உதாரணம். அவற்றை பின்னர் பார்க்கலாம்.
உலோகங்களைப் பொன்னாக மாற்றியது போக, கல்லையும் மண்ணையும் பொன்னாக மாற்றிய சம்பவங்களும் சித்தர்கள் வாழ்வில் நடந்தேறியுள்ளன.
உலோகங்களை மட்டுமே இரசவாதத்தால் தங்கமாக்கமுடியும் என்ற நியதியை மாற்றி கல்லையும் தங்கமாக மாற்றிக் காட்டியவர் கோரக்கர்.அதே போல் சிவவாக்கியார் வாழ்விலும் கல்லைத் தங்கமாக மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சம்பவங்களை பின்னர் சொல்கிறேன்.
ஆனால், இந்த சித்தர் ஜாலங்கள் எல்லாமே மிகவும் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. அந்த ரகசியங்கள் மட்டும் வெளியாகி இருந்தால் தற்போதுள்ள மனிதர்களின் பேராசை பூமியிலுள்ள கல்லையும் மண்ணையும் கூட தங்கமாக மாற்றி விட்டிருக்கும்.
இந்த ரசவாத வித்தையை தற்போதும் பலர் முயற்ச்சி செய்து தொல்விகண்டதாக அறிய முடிகிறது. அப்படி தொல்வியாடைவதன் காரணம் என்ன? இந்த ரசவாதம் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பேணப்படுவது ஏன்? இதை சரியாக செய்து வெற்றியடைய முடியாதா? இவ்வாறான கேள்விகள் எங்கள் மனதில் எழுவது இயற்கையே. இவற்றிற்கான பதிலையும் சித்தர்களே விளக்கி சொல்கிறார்கள். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Post a Comment



29 comments:
கொல்லிமலையில் ஒரு சித்தர் பாதரசம் மற்றும் சில உலேகம் + மூலிகைச்சார் கொண்டு தங்கம் செய்வதை பார்து இருக்கிறேன். பின்பு அவர் அதை பூசை செய்து நீங்கள் கூறியதுபோல் மருந்து செய்வதற்கு வைத்துக்கொள்வார்.
அவர் உப்பை கொண்டு சில முலிகையுடன் கட்டு செய்து அதை சிறு வடிவமாக செய்வார் அதை அவர் ஒடும் நீரில் வைப்பார் அந்த உப்பு வடிவம் பல நாள் ஆகியும் சிறிது கூட கரையவில்லை.
துப்பறியும் கதை போலவே கொண்டு செல்கிறீர்களே.
//தற்போதுள்ள மனிதர்களின் பேராசை பூமியிலுள்ள கல்லையும் மண்ணையும் கூட தங்கமாக மாற்றி விட்டிருக்கும்//
நீங்கள் சொவது மிகவும் சரியே. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@♠புதுவை சிவா♠
ஆமாம் இவற்றை செய்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள் அவர்களை சந்திப்பதே பாக்கியமான விடையம்..
கொடுத்து வைத்தர்வர் நீங்கள், என்னக்கு இன்னும் அந்த மாதிரியான சித்துக்கள் செய்பவர்களை சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை.. :(
தோழி, சித்தர்களிலே உயர்த்த சித்தர் யார்....? சித்தார்த் என்ற புத்தர் அவர் உண்மையை விரும்பினவர் உபதேசித்தவர். தன் இறந்த மகனை காப்பாற்றுங்கள் என்று கூறிய தாய்யிடம் எந்த ஒரு வீட்டில் யாரும் இரக்கவில்லையோ அந்த வீட்டில் ஒரு பிடி எள் வாங்கிட்டு வா என்று கூறினார். அந்த தாயால் முடியவில்லை. மரணத்தின் உன்மையை புரியவைத்தார். அதுபோல் எது உண்மையோ அது சொல்வோம். எதற்கு இந்த அற்புதம், வசியம், செய்வினை எல்லாம் "சத்தியமே உண்மை". மற்றதெல்லாம் கானல் நீர்
@ஜோதிஜி
துப்பறியும் கதை கூட இலகுவாக எழுதிவிடலாம்.. அனால் இந்தமாதிரியான விஷயங்கள் எழுதுவது கடினமானது.. ஏன் எனில் இந்தமாதிரியான விசயங்களை செய்ய முயற்ச்சிக்கும் பொது ஏற்படும் பின்விளைவுகலானது செய்பவரை மட்டுமல்ல செய்ய வழிகாட்டியவரையும் பாதிக்கும்... அதை சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்..
சில நூல்களில் சித்தர்கள் இந்த நூலைப் பற்றி வெளியில் சொன்னாலோ தீயவர்கள் கையில் கிடைக்க நீ காரணமாக் இருந்தாலோ.. பிடி சாபம் என்று சாபமும் வழங்கியே நூல்களை எழுதியுள்ளனர்.. அதைப் பற்றியும் அடுத்த அடுத்த பதிவுகளில் சொல்வேன்.. நன்றி
@சசிகுமார்
மிகக் நன்றி...
@rk guru
நீங்கள் சொல்வது உண்மை தான் , ஆனால் சித்தர்கள் சொல்லிய அனைத்தையும் பதிய வேண்டும் என்ற ஆவலில் தான் இந்த வலைப் பூவை தொடங்கினேன் , தொடர்ந்து அவர்கள் சொல்லிய ஞான, யோக, மருத்துவ விசயங்களும் சொல்வேன்.. மிக்க நன்றி..
தோழியின் சித்தர்கள் பதிவுகள் ஒரு விருந்து போல!
விருந்தில் யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்து கொண்டு சுவைக்கலாம்.
பிடிக்காமல் இருப்பதை விட்டு விடலாம். என்ன தோழி சரிதானே!
@Sri Kamalakkanni Amman Temple
மிகச் சரியாக சொன்னீர்கள்... மிக்க நன்றி..
ஆர்வத்தை உண்டு பண்ணும் விதமாக உள்ளது ஆக்கங்கள். நிச்சயம் மாறுபட்ட விஷயங்களை வாசித்த திருப்தி உள்ளது.
@தமிழ் உதயம்
மிகக் நன்றி...
ஜலதோஷம் நிவர்த்தி ஆவதற்கு சித்தர்கள் மந்திரம்
சொல்லி இருக்காங்களா தோழி. கொஞ்சம் சொல்லுங்களேன்
maanaviyaaga irukkeenga ippadiye padivittu irundaal eppodu padipeergal.
nalla padinga . padivugal vaaram irandu podungal. nanri .
@muni
ஜலதோஷம் நிவர்த்தி ஆவதற்கு சித்தர்கள் மந்திரம்
சொல்லி இருக்காங்களா தோழி. கொஞ்சம் சொல்லுங்களேன்
நக்கலா கேட்கிற மாதிரி இருக்கிறது...
@muni
இங்கு மட்டுமல்ல தோழரே.. நான் வேறு சில தளங்களில் அங்கத்தவராகவும் இருக்கிறேன். அங்கும் பதிவுகள் போடுகிறேன்.. பதிவுகள் என் படிப்பை பாதிக்காமல் கவனமாகக் கையாள்கிறேன் நன்றி..
இரசவாதம் செய்ய முடியுமா முடியாதா? முடியும்னா எப்டி?
@அண்ணாமலையான்
சொல்லத்தானே போறேன் இப்படி அவசரப் பட்டா எப்படி?
ஜலதோஷம் நிவர்த்தி ஆவதற்கு சித்தர்கள் மந்திரம்
சொல்லி இருக்காங்களா தோழி-- realy realy realy serious tozhi. iam not joke..
@muni
சித்தர்கள் சொன்ன மருத்துவங்கள் பற்றி சொல்லும் போது அவர்கள் சொன்ன ஜலதோஷத்திற்கான தீர்வுகள் பற்றி சொல்கிறேன்... மிக்க நன்றி.
அறிவியல்பூர்வமாக பாதரசத்தை தங்கமாக மாற்ற முடியும். பாதரசமும் தங்கமும் மெண்டெலீவ் அணு பட்டியலில் (periodic table) அடுத்தடுத்து உள்ளன. பாதரசத்தின் மீது அதிவிரைவு நியூட்ரான்களை செலுத்தினால் அது தங்கமாகும். அதிவிரைவு நியூட்ரான் என்பது அணுகுண்டு வெடிக்கும் போது வெளிப்படுகிறது. அது அணு உலைகளில் கிடைப்பதில்லை. எனவே இந்த முறையில் தங்கம் செய்வது கடினமாக இருக்கிறது. ஆனால் அணு உலைகளில் இந்த அதிவிரைவு நியூட்ரான்களை தயாரிக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
@shaan
மிகக் நன்றி...
@தோழி
மிக்க நன்றி.
தோழி. தொடருங்கள் ..அருமை..!!
@அண்ணாமலை..!!
மிகக் நன்றி...
excellent
Thiruvambala chakkaram patri satru virivaaga koorungalaen pooja vidhi utpada thozhi nandri
Sivanai sabitha Bringi maa munivarum THEETCHAI petrathu nam chennai PARANGI Malai than Nanbargaley
Unmaiyill Kaarthigai JOOTHI muthalil yetra paduvathu BRINGI (Parangi) Malai thaan Pinar than ANNA Malaiyill yena SUVADI sollum sathiyam
vellai Kaaranidam pari poonathu nam Parangi malai.BRINGI MALAI (ipothaiya PARANGI Malai) patri suvadu kidaithathu,,, ungaludan viraivul pagithu kolla virumbukiren.
Post a Comment