வெறுக்கத்தக்க சில மனிதர்கள்...

Author: தோழி / Labels: , ,

வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க மனிதர்கள் உள்ளனர், அவர்கள் யார் என்பதை நாம் அறியவேண்டும், அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும். அம மனிதர்கள் யார் என்று பட்டினத்தார் சொல்கிறார், அனைவருக்கும் புரியும் விதமாக மிகத்தெளிவாக அம்மனிதர்கள் பற்றி சொல்கிறார்.

வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள், வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம், என்றாலும், விடமாட்டார்கள் , வலிய இழுப்பார்கள்.

நன்மைக்கு உதவி செய்யார், தீமை என்றால் அதற்கு உதவ தயங்கமாட்டார். தினந்தோறும், துன்பப்பட்டு வஞ்சகம் செய்து பணம் சேர்ப்பார், அந்தப் பணத்தை தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு கொடுத்து அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர். அதாவது தான் சாகும் வரை இப்படியே நாளைப் போக்குவர். இப்படிப் பட்ட மனிதர்கள் இவ்வுலகில் ஏன் பிறந்தார்கள், இறைவனே என்று பாடுகிறார்.

"வாதுக்குச் சண்டைக்குப் போவார்;
. . வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார்,
. . தினந் தேடி ஒன்றும்
மாதுக் களித்து மயங்கிடுவார்
. . விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா!
. . கச்சி ஏகம்பனே!"


சிலமனிதர்கள் உண்மை என்பதையே பேசி அறிய மாட்டார்கள், நல்லவர்களை ஒருநாளும் போற்ற மாட்டார்கள். நல்லோரை நிந்திப்பதையே கொள்கையை இருப்பார்கள். வசை பாடுவதற்கு இன்னார் என்று பாராமல் தன்னைப் பெற்று வளர்த்த தாயையே திட்டுவார்கள், வணங்க வேண்டிய தாயையே பழித்துப் பேசும் இவர்கள் பயங்கரமானவர்களே. நல்ல செயல்களைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்களை எந்த வம்பில் மாட்டி விடலாம் என்று சதா சித்தி திட்டம் போடுவார்கள். தமக்காக உளைத்தவர்களுக்குக் கூட உபகாரம் செய்யாத இவர்கள் இருப்பதால் எவருக்கும் லாபமில்லை, இவர்கள் இறந்தாலும் நட்டமில்லை என்கிறார் பட்டினத்தார்.

ஓயாமல் பொய் சொல்வர், நல்லோரை
. . நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதி ஆயிரம்
. . செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்கு உபகாரம் செய்யார்;
. . தமைஅண் டினார்க்கு ஒன்று
ஈயார், இருந்தென்ன? போய் என்ன?
. . காண்! கச்சி ஏகம்பனே!


ஆகவே , இவ்வாறான மனிதர்களிடமிருந்து விலகி, மனித சமுதாயத்திற்கு உதவும் உத்தமர்களா வாழுங்கள், பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்! என்கிறார் பட்டினத்தார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

12 comments:

ஜெகநாதன் said...

ஆஹா..! ​தெளிவான கற்பிதங்கள்!!

தோழி said...

@ஜெகநாதன்
மிக்க நன்றி...

நிகழ்காலத்தில்... said...

சுய பரிசோதனைக்கும் உதவும் பாடல்கள், பகிர்ந்தமைக்கு நன்றி சகோ:

தோழி said...

@நிகழ்காலத்தில்...

மிக்க நன்றி...

அண்ணாமலையான் said...

ரொம்ப கஷ்டம்

தோழி said...

@அண்ணாமலையான்

மிக்க நன்றி...

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. இருந்தாலும் என்னைப் பத்தி நீங்க பப்ளிக்கா சொல்லக் கூடாது, ஹா ஹா.

நல்ல கருத்துக்கள், இது போல ஆட்களை இனங்கண்டு, விலக முயற்ச்சி செய்கின்றேன். நன்றி.

தோழி said...

@பித்தனின் வாக்கு

மிக்க நன்றி...

சேட்டைக்காரன் said...

சுவாரசியம். சாவகாசமாக வந்து ஒவ்வொரு பதிவாப் படிக்கிறேன். ஒருபானை சோற்றுக்கு இந்த ஒரு இடுகையே பதம். :-)

Ayodhyadasan said...

தோழி ! இக்காலாத்தில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே பகுத்தறிவாளன் என்று கூறிக்கொண்டு அமானுஷ்யமான ஒன்றிற்கு ஆதாராம் தேடிகொண்டு அலைகிறானே. சித்தர்களை நம்ப வேண்டாம், நம்முடைய வாழ் நாளிலேயே பல மஹான்கள் சாதாரண மனிதனாக வாழ்ந்து கொண்டே பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிச் சென்றனரே ! அதைப் பார்த்தாவது நமக்கு புத்தி வருமோ?

ganges said...

மதிப்புக்குரிய தோழி,
மிக சிறப்பான பதிவு இப்பாடலில் குறிப்பிடப் பட்டிருக்கும் மனிதர்கள் திருந்தி வாழ சித்தர்கள் மரபில் வழி உள்ளதா.....

தங்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்..

Ayodhyadasan said...

ஜெய் ஸ்ரீ ஸீதாராம்
சித்தர்கள் மரபில் வாழ வழி உள்ளதா என்று ஆராய்வதை விடுத்து, நம்முள்ளே இருக்கும் குறை நிறைகளை ஆராய்ந்து, குறைகளை அகற்றி, ஆழ்ந்து சிந்தித்தோமானால், நம்மைபோன்ற மனிதப் பிறவி எடுத்தவர்கள் தான், தன்னுடைய மூலாமான பரம்பொருளை நன்றாக உணர்ந்து கொண்டு சித்தர்களாக மாறி தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நல்ல உயரிய நோக்கத்தோடுதான் பல பாடல்களை பல சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கருத்தை நம்முள் பதித்து ஆராய்ந்து முடிவெடுத்தால் உண்மை விளங்கும்.

Post a Comment