கோபமறு, குன்றாப் புகழுக்கு...

Author: தோழி / Labels: , ,

கோபம் எத்தனை பெரிய அறிவாளியையும் முட்டாளாக்கிவிடுகிறது. எவ்வளவோ சிறப்புள்ளவரையும் சீரழியச் செய்துவிடுகிறது, கோபம் கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். தன்னையே மறக்கச் செய்துவிடும். கோபத்தால், மதியையும், மானத்தையும், நிம்மதியையும் இழக்க நேரிடும்.

கோபம் ஏற்படுத்தும் விளைவுகளை, பாதிப்புக்களை நாம் அறிய முற்படுவதில்லை. எது கோபத்தை தூண்டியது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதெல்லாம் பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை.

ஆனால், சித்தர்கள் கோபத்திற்கு மூலமான மாயையை அகற்றி விடுகிறார்கள், மாயை இல்லாத இடத்தில் , ஆசை, கோபம் இருப்பதில்லை, தங்கள் மனதை அடக்கியதால் தான் சித்தர்களுக்கு யோகம் சித்தியானது. முத்தி நிலை வாய்த்தது.

இதையே,

"மனமானது அடங்கியே போச்சு இந்த
மாயையை விட்டுக் கரையேறலாச்சு
சினமென்னும் கோபம் அறுந்தாச்சு யோகம்
சித்தியாகவே முத்தியும் ஆச்சு."


என்று பாடுகிறார் கல்லுளிச் சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

அண்ணாமலையான் said...

சினத்தால் அழிந்தவர்கள் அநேகம் பேர், சித்தர்கள் கூட கோபபடுவார்கள்.. இன்றைய மனித வாழ்க்கைக்கு தேவையான விஷயம்தான்... வாழ்க பதிவர்... கோபம் குறைப்போம்... குறைவிலா வளம் பெறுவோம்....

தோழி said...

@அண்ணாமலையான்
மிக்க நன்றி

நந்தா said...

கோபம் ... மூளைக்கு சத்ரு!!
சித்தர் வாக்கு என்றும் பொய்க்காது..

தோழி said...

@நந்தா
மிக்க நன்றி...

praveen said...

மிகவும் உண்மை . கோபம வந்ததாலே மனிதனுக்கு தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது . அவனை அவனுடைய கர்ம வினை ஆட்டிவைகிறது . அவனும் அது போன போக்கில் ஆடுகிறான் .

anantharam said...

vallalar is my guru

anantharam said...

Vallalar {ramalingasamy} is my GURU

anantharam said...

manam ennum pal manakundrea nee engu alainthu thirikindranayo

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Post a Comment