இரசம் :- இது சுத்தமான இரசத்தைக் குறிப்பதாகும், இலேசான சென்நிறமுடையது. குற்றமில்லாதது.
ரசேந்திரன் :- இது சற்று கருமை நிறம் படர்ந்தது. இதுவும் குற்றமில்லாதது.
பாரதம் :- இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது இது குற்றமுள்ளது, இதன் குற்றத்தை சுத்தி செய்தால் மட்டுமே ரசமணி கட்டப் பயன்படும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.
சூதம் :- இது சிறியளவு வெளிர் மஞ்சள் நிறமுடையது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும்.
மிசரகம் :- இது சற்று தாழ்ந்த நிலையில் உள்ளது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.
அது என்ன தோஷமும் , குற்றமும்? அதை எங்களால் நீக்கி ரசமணிகட்ட முடியுமா? அதை இலகுவாக நீக்க முடியுமா?... முடியும் சித்தர்கள் இலகுவான வழிகளை சொல்லி இருக்கிறார்கள்.
அதை விளக்கமாக அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
Post a Comment



1 comments:
சித்தர்களைப் பற்றிய பல அரிய தகவல்களை தரும் உங்களுக்கு என் நன்றிகள்...
உங்களின் ஒவ்வொரு பதிவும் பாதுகாக்கப்பட வேண்டியவை...
Post a Comment