காய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...

Author: தோழி / Labels: , ,

"யோகமாம் புளியுப்பு எண்ணெய் சுண்ணம்
உரிசையா மாங்கிசங்கள் மச்சமாகா
மோகமா மோரோடு கடுகு உள்ளி
முதிரான காரமமொடு பெருங்காயந்தான்
போகமாய் பெண்ணுட புணர்ச்சியோடு
பேரான நித்திரையும் சோம்பல் தள்ளி
வாகமாம் வாசிதனை மறித்துக் கொண்டு
மறவாமல் இரவு பகல் மனது உன்னே"


புளி, உப்பு, எண்ணைவகை, மோர், கடுகு, உள்ளி, மது, மங்கை, மாமிசம் புசித்தல், அதிக காரமும், பெருங்காயமும், நேரம் தவறி உறங்குதல், சோம்பல்குணம், இரவு பகல் எந்நேரமும் காய கற்பம் உண்பதை நினைத்திருந்து இவற்றை கட்டாயம் நீங்க வேண்டும்.

"உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு
ஒருசேர சமைத்துண்டு ஒரு போதையா
பண்ணியே ராமாறு பாலைக்கொள்ளு
பணியாரம் சிறு பயறு பழமும் தேனாம்
குன்னியே கோரக்கர் கற்பமாகும்
போமென்ற புளிமேல் ஆசையானால்
புளியாரை புளியரணை சீக்காய்க்கொழுந்து
நேமென்ர நெல்லிக்காய் பசலைக் கீரை
நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு
ஆமென்ற பயரோடு யிளநீருங்கரும்பும்
ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே"


பால், நெய், சிறு பயறு வகை, பழங்கள், தேன் கற்பத்திற்கு உண்ணக் கூடியவை என்றும், புளி சேர்க்காமல் சாப்பிட முடியாதவருக்கு புளியாக் கீரை, பசலைக் கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், கரும்பும், இளநீரும் , குளிர் நீரும் சேர்க்கக் கூடாது என்றும் போகர் சொல்கிறார்.

மேலும் கற்பம் உண்ணும் காலத்தில் குடிப்பதற்க்கு நீர் தயாரிக்கும் முறை ஒன்றும் சொல்கிறார்கள் சித்தர்கள். அது அருகம்வேர் ஒரு கை அளவும், மிளகு 25 தும் சேர்த்து இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை விட்டு அதை எட்டில் ஒன்றாகக் காய்ச்சி, வடிகட்டிப் பருகலாம் என்கிறார்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

25 comments:

rajsteadfast said...

ஆனந்த விகடன் வரையும் வந்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. உண்மையில் உங்கள் பணி போற்றுதலுக்குரியது. தொடருங்கள்...

உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்ப்பார்கிறோம்...

நன்றி

டவுசர் பாண்டி... said...

வாழும் காலத்தில் ஒருவர் நோய் நொடியில்லாமல் வாழ இவை உதவுமாயின் இதை விட மகத்தான பணி ஏதுமிருக்காது.

வாழ்த்துகள்....

தோழி said...

@rajsteadfast

என்னால் முடிந்தவரை தொடர்ந்து தருகிறேன்... மிக்க நன்றி.

தோழி said...

@டவுசர் பாண்டி...

மிக்க நன்றி...

chandru2110 said...

இந்த உணவு முறைகளை பின்பற்றினாலே அதிக ஆயுள் கிட்டுமே.

தோழி said...

@chandru2110

அதிக ஆயுள் கிடைக்க விட்டாலும் நோய் நொடி இல்லாதிருக்கலாம்.. நன்றி

அண்ணாமலை..!! said...

வாழ்த்துகள் தோழி.!
உங்களின் வளர்ச்சியால் பெருமிதமடைகிறேன் !
தொடர்க!படித்துக்கொண்டேயிருக்கிறோம்!

தோழி said...

@அண்ணாமலை..!!

மிக்க நன்றி தோழா...

♠புதுவை சிவா♠ said...

விளக்கங்கள் அருமை வாழ்த்துகள் தோழி

எளிய முறை காயகல்பம் ஒன்று உண்டு அதை நீங்கள் விரும்பினால் நாளை பின்னோட்டத்தில் தெரிவிக்கிறேன்.

நன்றி

தோழி said...

@♠புதுவை சிவா♠

சொல்லுங்க சொல்லுங்க... மக்களிடம் சென்றடையட்டும்... படிக்கும் மக்கள் அனைவரும் பயனடையட்டும் .. மிக்க நன்றி...

மாயாவி said...

***எளிய முறை காயகல்பம் ஒன்று உண்டு***

அடடே! சீக்கிரம் சொல்லுங்க சிவா. ஆனா ஒண்ணு ரொம்ப சிம்பிளா இருக்கனும். சித்தர் பாட்ட இருந்தாலும் பரவால்ல. நல்லா விளங்குற மாதிரி இருக்கனும்.

தோழி ! நீங்க ஏதாவது காயகற்ப முறையை பின்பற்றியதுண்டா? இருக்குமாயின் அதை முதலில் சொல்லுங்களேன். அனுபவமே மிகச்சிறந்த்த்து அல்லவா! அதுவும் இல்லாம நான் ஒரு காயகற்ப முறையை கடந்த 10 தினங்களாக முயற்சித்து வருகிறேன்(கடுக்காய்). உங்களுக்கோ அல்லது நமது பதிவுலக நண்பர்கள் யாருக்கேனும் இதில் அனுபவமிருப்பின் சொல்லுங்களேன். எனது அனுபவங்களும் உங்களது அனுபவங்களும் ஒத்து போகிறதா என்று பார்ர்போம். நான் செல்லும் பாதையை சரிபார்க்கவும் உத்வும்.

தோழி said...

@தோழி


நான் தற்போது பல்கலைக் கழகம் செல்வதால் முயற்ச்சிக்க முடியவில்லை, காரணம் பத்தியம் இருக்க வழியில்லை.. முடிந்ததும் முயற்ற்ச்சி செய்ய சில வழிகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.. நீங்கள் பயன்படுத்தும் காயகற்ப முறை பற்றி விளக்குங்களேன்.

மாயாவி said...
This comment has been removed by the author.
தோழி said...

@மாயாவி

என்னுடைய அனுபவம் என்று இதில் ஒன்றும் இல்லை, ஆனால் கடுக்காய் சாப்பிடுவதற்கு ஒரு கால அளவை வயதைக் கொண்டு சித்தர்கள் சொல்லி இருக்காங்க அதின் படி நீங்க முயற்சி செய்தால் சரியாகவே வரும்...

நீங்கள் எப்படி இந்த காய கற்ப்பத்தை உண்கிறீர்கள், எத்தனை நாட்களுக்கு உண்பீர்கள்..

winmani said...

தோழிக்கு ,

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

கடுக்காய்த் தோலை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தோலை சந்தனக் கல்லில் உரைத்து, விழுதைக் காலில் பித்தவெடிப்பு, சேற்றுப் புண் மற்றும் ஆறாத புண்களுக்குத் தடவி உடனடி குணம் பெறலாம். பல்வலி தீர்க்க பற்பசை தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.


உப்புச் சுவை தவிர இதர சுவைகள் அனைத்தும் பெற்றது கடுக்காய். கடுக்காயை உப்புடன் சேர்த்து உண்டால் ஐயமும், வெல்லத்துடன் சேர்த்து உண்டால் முன்குற்றமும் நீங்கும். எனினும் செரிப்புத் தன்மை அற்றவர், இல்லறத்தில் ஈடுபட்டோர், பட்டினி கிடந்தோர், கருவுற்றோர், தொண்டையிறுகல் உள்ளோர் பயன்படுத்துதல் ஆகாது. கடுக்காய் பொடி பல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும். பல் இறுகும். பாலுடன் காய்ச்சி கொடுக்க சீதபேதி நிற்கும். நாள்தோறும் காலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் நரைமுடி இருக்காது. மேனியில் சுருக்கம் விழாது.

தோழி said...

@winmani

ஆமாம் உண்மை தான்... மிக்க நன்றி...

மாயாவி said...

திரு.விண்மணி சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் அவர் கூறியிருப்பது சித்த மருத்துவ குறிப்பு ஆனால் காயகற்பம் என்று வரும் போது அதில் சிற்சில மாறுபாடுகள் வருகிறது.

தோழி said...

@மாயாவி

மிக்க நன்றி...

♠புதுவை சிவா♠ said...

வணக்கம் தோழி
இது வள்ளலார் சுவாமிகள் சொன்ன மிக எளிய காயகல்பம் முறை.

தேவைப்படும் பொருள்கள்

1.வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்
2. தூதுவளை 50 கிராம்
3.முசுமுசுக்கை 50 கிராம்
4. சீரகம் 50 கிராம்

மேற்கண்ட பொருள்ளை பொடியாக நல்ல நாட்டு மருந்து கடையில் வாங்கி கொள்ளவும். இதில் சீரகம் மட்டும் தனியாக வாங்கி சுத்தமாக பொடித்துக் கொள்ளவும்.


இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும் பின்பு ஒரு சுத்தமான பாத்திரத்தில் (Bottle)சேமித்து வைக்கவும்.

சாப்பிடும் முறை
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் சீரான தீயில் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து குடிக்க வேண்டும்.


இது காயகல்ப்ப மருந்து மட்டும் இன்றி ஒரு சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனித உடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

நன்றி.

தோழி said...

@♠புதுவை சிவா♠

மிக்க நன்றி சிவா.. இதற்க்குப் பத்தியங்கள் ஏதும் உண்டா?

அண்ணாமலை..!! said...

கற்பம் சாப்பிடுவது பெரிய விடயமல்ல.
ஆனால், பத்தியத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.!
திரு.புதுவை சிவா அவர்களுக்கும் நன்றிகள்!

தோழி said...

@அண்ணாமலை..!!

ஆமாம், மிக்க நன்றி...

IRAIANBU said...

anbula tholiku,

Vethathiri maharishi kurum kayakalpa kalai patriya anubavam onda...

suresh said...

அன்புள்ள தோழிக்கு,
என்னுடைய சகோதரியின் மகன் பிறக்கும் பொழுதே தோலில் வியர்வை சுரப்பிகளின் செயல் இல்லாமலே பிறந்தான்.அதனால் அவனுடைய தோல் எப்பளுதும் வறண்டே காணப்படும். அவ்வபொழுது என்னை தடவி தோலின் வறண்ட தன்மையை தற்காலிகமாக நீக்குகிறார்கள் .இதற்கு சித்தர் வழியில் நிரந்தர தீர்வு தருக

THIRUMAL said...

nice

Post a Comment