காய கற்பம் பற்றி...

Author: தோழி / Labels: , , ,



பொதுவாகச் சித்தர்கள் நீடூழி காலம் வாழ்வதற்காக செய்யும் மருந்தின் பெயர் தான் காய கற்பம். இதற்க்குச் சரகா மருந்தென்றும் சொல்வார்கள். இது உடம்பைப் பலப் படுத்தி, சாகாமல் இருக்கவும், மூப்பு, பிணி, பசி , இளைப்பு, தாகம், நித்திரை போன்றவைகள் வராமலும், எப்போதுமே உடல் இளமையுடன் இருக்கவும் அவர்கள் உண்ட மருந்தே இந்தக் காய கற்பமாகும்.

இதற்கான மூலிகைகளும், இந்த கற்ப மருந்தை தயாரிக்கும் முறைகளையும், சாப்பிட வேண்டிய நேர காலத்தையும், சித்தர்கள் அவரவர் அனுபவங்களுக்கேற்ப கூறியுள்ளனர். இவற்றை அவர்கள் வைத்திய காவியங்களில் விளக்கியுள்ளனர்.

"கற்பத்தை யுண்டல் காயமழியாது
கற்பத்தினாலே காணலாம் கலையை
கற்பத்தினாலே காணலாம் சோதியை
கற்பத்தினாலே காலையும் கட்டி டே
கட்டிட சித்தாம் காயப் பரீட்சை"


- என்கிறார் சட்டை முனி.

இதுபோல காய கற்பம் சாப்பிட்டவர்கள் உடல் எப்படி இருக்கும் என்று கோரக்கர் சொல்கிறார்,

"காலமதில் கடியரவம் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா
நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்"


"வேலணைய கத்திவாள் வேட்டுமேறா
விடந்தலை மேல் கொண்டவனும் விமலி
சீலமுடன் ஞாணப் பால் தந்து காத்தே
ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்!"


- என்பார் கோரக்கர்.

இப்படியாகப் பட்ட இந்த காய கற்ப மருந்து செய்யும் முறைகளைப் பல சித்தர்கள் பல விதங்களில் சொல்லி இருக்கிறார்கள். எல்லாம் இங்கு பதிவது படிப்பவர்களினதும், எழுதும் எனதும் கால நேரங்களை விரயமாக்கும் என்பதால், தற்காலத்தில் எல்லோராலும் இலகுவாகச் செய்யக் கூடிய சில வழிகளை மட்டும் சொல்லவிருக்கிறேன்..

அடுத்த பதிவில், இந்த காய கற்ப மருந்து உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய பத்திய முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.


Post a Comment

15 comments:

டவுசர் பாண்டி... said...

ஆர்வத்தினை தூண்டும் அரிய தகவல்கள்....

வாழ்த்துகள்....

தோழி said...

@டவுசர் பாண்டி...

மிக்க நன்றி...

♠புதுவை சிவா♠ said...

வாசியோக காயகல்ப முறைகள் - இது தமிழரின் மிக அறியவகை கலை.

கால் பிடித்து மூலக்கனலை மதிமண்டலத்தின்
மேலெழுப்பிற் றேகம் விழுமோ பராபரமே
- தாயுமானவர்

வாயுவழக்க மறிந்து செறிந் தடங்கில்
ஆயுட் பெருக்கமுண் டாம்
- ஓளவையார்

காலமே எழுந்திருந்து
நாலு கட்டு அறுப்பிரேல்
பால னாகி வாழலாம்
பரப் பிர்ம மாகலாம்..
- சிவவாக்கியர்

பதிவுக்கு நன்றி தோழி

chandru2110 said...

எளிமையான பாடல்கள் , அர்த்தம் புரிகிறது.

தோழி said...

@♠புதுவை சிவா♠

நல்ல தகவல்கள் மிக்க நன்றி.

தோழி said...

@chandru2110

மிக்க நன்றி.

மாயாவி said...

***தற்காலத்தில் எல்லோராலும் இலகுவாகச் செய்யக் கூடிய சில வழிகளை மட்டும் சொல்லவிருக்கிறேன்..***

மிக்க நன்றி தோழி!

தோழி said...

@மாயாவி

மிக்க நன்றி...

அண்ணாமலை..!! said...

தங்களின் சேவை பெரிது தோழி!
வாழ்க!

தோழி said...

@அண்ணாமலை..!!

மிக்க நன்றி தோழா...

jagadeesh said...

ஞானத்தை அடைவதர்காகவாது காயகல்பம் உண்ண வேண்டும். முயற்சிக்கிறேன்.

seethamani said...

எளியமுறை காயகல்பப் பயிற்சி:

இளமைகாத்து நீண்ட காலம் இந்த நிலவுலகில் வாழ்வது என்பது மனிதனது சாதனைக்கு உட்பட்டதே. இதற்கான வழி வகைகளை நம் நாட்டுச் சித்தர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்றிருந்தாலும், அவர்கள் கையாண்ட பரிபாஷைச் சொற்றொடர்களின் முழுப்பொருளும் விளங்காதிருந்த காரணத்தாலே "காயகல்பப் பயிற்சி" யானது பல நூற்றாண்டுகளாக மூடுமந்திரமாகவே இருந்தது.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 40 ஆண்டு காலம் தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாகக் "காயகல்பபப் பயிற்சி" அனைத்து மக்களுக்கும் கைகூடி வருகின்ற அளவுக்குத் தெளிவாக்கி உள்ளார்கள். இது குண்டலினியோகத்தின் உச்சக்கட்டப் பேறாகும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், இளமை நோன்பு (Celibacy) காக்கும் ஆண், பெண் அனைவருக்கும், இல்லறத்தார்க்கும் நெருநன்மை பயக்கத்தக்கது இந்த காயகல்பக் கலையாகும். மனிதகுல வாழ்க்கையில் நிலவி வரும் பெரும்பாலான சிக்கல்களைத் தீர்க்கவல்லதாகவும் இப்பயிற்சி முறை விளங்குகிறது.

இப்பயிற்சி பெறுவோர் அருளும், பொருளும், ஒருங்கே பெற்று, உடல்நலம், மனவளம், அறிவு நலம் ஓங்கிச் சிறப்பாக வாழ்வார்களாக.

வாழ்க வளமுடன்!

Kumar P said...

தோழி பாடலுக்கு விளக்கம் தேவை...

Kalil said...

@seethamani

Kalil said...

magarishi sonna kaaya kalpam patri ennum thelivaaga sollavum

Post a Comment