ரசவாதம் செய்யும் இன்னுமொரு முறை...

Author: தோழி / Labels: , , ,
"எட்டான போன்னத்துவத்தை தகடடித்து
எழிலாய்ப் புடமிட்டால் தங்கமாகும்
கட்டான தங்கமது என்ன கூறுவேன்
காசினியில் நாதாக்கள் கண்ட தங்கம்
பட்டான தங்கமதை பூசை கொள்வீர்
பாங்கான சிவபூசை உறுதி காண்பீர்
மட்டான தங்கமென்று எண்ணவேண்டா
மகத்தான குருபூசைத் தங்கமாமே"


என்று ரசவாதம் செய்யும் முறை ஒன்று சொல்கிறார் கருவூரார்.

"பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் பிறந்தது பேராத் துரிசியில்
பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் உபதேசப் போக்கில் பிறந்ததுவே"


என்றும்,

"செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே"


என்று சொல்வதோடு ரசவாதம் பற்றிச் சொல்வதை நிறுத்திக் கொள்கிறார் திருமூலர்.

மற்ற சித்தர்கள் எல்லாம் தங்கள் ரசவாத முறையில் ஏதாவது ஒரு செய்முறையை மறைத்தார்கள் என்றும்,அவர்கள் மறைத்தவை என்ன என்று அகத்தியர் தனது சீடர்களுக்கு விளக்கி இருக்கிறார். அப்படி அவர் விளக்கிய பாடல்களின் ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

"வேதிக்கக் கொங்கணவர் எழுகடை என்றார்
விளக்காமல் இது ரெண்டை மறைத்துப் போட்டார்"


என்று கொங்கணவர் மறைத்த ரகசியத்தை வெளியிடும் அகத்தியர்,

"ஆச்சப்பா கருவூரான் கடுங்கா நீரும் ஆதி
என்ற வழலை உப்புத் தீட்சை மறைத்தார்"


என்று கருவூரார் மறைத்ததையும்,

"பாரப்பா கோரக்கர் கருக்கிடையை மறைத்துப்
பாடினார் கருக்கிடைதான் ஏதென்றாக்கால்"


என்று கோரக்கர் மறைத்ததையும் தனது சீடர்களுக்கு சொல்லும் அகத்தியர்,

"நேரப்பா வாசமுனி மறைத்த சூத்திரம்
நிறைவான சுண்ணம் தான் ஏதென்றாக்கால்"

என்று வாசமுனி மறைத்த சூத்திரத்தையும்,


"கேள் மக்காள் பிரம முனி மறைத்த சூத்திரம்
பிசகாமல் செப்பு சுத்தி மறைத்துப் போட்டார்"


என்று பிரம முனி மறைத்த சூத்திரத்தையும், இன்னும் மற்ற சித்தர்கள் மறைத்தவைகளையும் தனது சீடர்களுக்காக அகத்தியர் விளக்கி இருக்கிறார் தனது நூல்களில்.

நானும் இத்துடன் ரசவாத விளக்கங்களை நிறுத்திக் கொள்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

♠புதுவை சிவா♠ said...

நன்றி தோழி

இன்று சிதம்பரத்தில் உள்ள மூலவர் அம்பலக் கூத்தனின் அழகு திருமேனி மேனியை ரசவாத முறையில் உருவாக்கியவர் கருவூரார்.

மற்றும் காசியிலும் கருவூரார் உருவாக்கிய ரசவாத லிங்கம் ஒருமுறை பார்த்தால் செம்பு போலவும், மற்றொரு முறைப் பார்த்தால் பொன் போலவும் தோன்றும். இது போன்ற சிலை தமிழ்நாட்டிலும் இவர் வடிவமைத்துள்ளார்.

தோழி said...

@♠புதுவை சிவா♠

ஆகா..!! நல்ல தகவல்கள் தருகிறீர்கள்.. மிக்க நன்றி

டவுசர் பாண்டி... said...

இத்தனை சீக்கிரமாய் முடித்துவிட்டீர்களே!

Metallurgy துறையில் சித்தர்களின் பங்களிப்பு இன்னமும் பரந்துபட்டது. அதை பற்றியும் தொட்டுச் சென்றிருக்கலாமே!

தோழி said...

@டவுசர் பாண்டி...

இனி வரும் விசயங்களில் ரசவாதம் எப்படி பயன் பட்டது என்பதை சொல்ல தான் இந்த ரசவாதத்தை சொன்னேன் நன்றி.

ஜெகதீஸ்வரன். said...

எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை என்கிறது அறிவியல். அந்த அணுக்களின் மூலக் கூறுகளி்ன் அமைப்பினை மாற்றியமைப்பதனால் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்று ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்சைடு சோதனையில் தெளிவாக்கிவிட்டது.

முயன்றால் ரசவாதத்தினை சாத்தியமாக்களாலம்.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

victoria said...

பொலிகோனம் மல்ட்டி புளோரம் polygonum multiflorum என்னும் கருணைக்கிழங்கு வகை ஒன்று காயகற்ப டானிக்காக இன்றும் சீன மருந்துக் கடைகளில் மலேசியாவில் விற்கிறார்கள். இந்தக் கிழங்கை Fo Ti Root என்றும் சொல்கிறார்கள்.20 நாட்களுக்கு உட்கொள்ளும், இந்தக் கிழங்கின் சாரம் கலந்த டானிக் போத்தல் 70 ரிங் என விற்கப் படுகிறது. 50 வயதில் இதை யதேச்சையாக கண்டுபிடித்து உண்டுவந்த He-shou-wu,என்ற கிழவன் 132 ஆண்டு வரை உயிர்வாழ்ந்தானாம்.
http://www.naturalnews.com/026786_He_Shou_Wu_herb_liver.html

Beneficial effects:
Constant consumption of this famous "longevity herb," also known as Fo Ti, is said in the Orient to help return an aging person to youthfulness. It is a classic Yin essence (Jing) tonic, as well as a major blood tonic. It is said to increase energy and to clean the blood. Polygonum is believed to be a powerful marital tonic when consumed regularly. Polygonum is widely believed in China to increase sperm production in men and to increase fertility in women. Polygonum is used in almost all tonics that are believed in the Orient to nurture the hair and teeth.
http://www.yahwehsaliveandwell.com/polygonumroot.html

Side effects
http://www.livestrong.com/article/149915-side-effects-of-he-shou-wu/

Post a Comment