தூய்மையற்றவர்கள், மூடர்கள், பாவிகள் போன்றோரிடம் தமது நூல்கள் கிடைத்தால் என்ன ஆகும் என்பது சித்தர்கா அறியாததல்லவே.. ஆகவே அவர்கள் ஒருவித எச்சரிக்கையுடனேயே மறைபொருள் கொண்டு தமது நூல்களை எழுதினார்கள்.
"பாடுகின்ற சித்தருட நூல்கள் எல்லாம்
பரிபாசை தெரியாத பாவியோர்க்கு
தேடுகின்ற பொருள் அழியச் சொன்னதல்ல
தினையளவும் பொன்காணச் சொல்லவில்லை".
- அகத்தியர் பரிபாஷை -
பாடப்பட்டுள்ள சித்தர்களின் நூல்கள் எல்லாம் பாவிகளுக்குச் சொல்லவில்லை, தினையளவும் தங்கம் செய்வதற்காகவும் சொல்லவில்லை என்கிறார் அகத்தியர்.
"திரணமுமே தெரியாத மூடர்க்கு ஈந்தால்
பாவியாவாய்; இந்நூலை அவர்கட் ஈயாதே"
- நந்தி நூல் -
ஒன்றும் பிரித்தறிய முடியாத மூடர்களுக்கு இந்த நூலைக் கொடுப்பாயானால் நீ பாவியாவாய் என்று நந்தி நூல் சபிக்கிறது.
ரசவாத நூல் என்று ஒரு அரிய, மிகப் பழமை வாய்ந்த நூல் ஒன்று உள்ளது. அந்த நூல் ஆரம்பத்திலேயே இப்படி சொல்கிறது..
"சித்தர்களுக்ககவே இந்நூல் சொன்னேன்
சிவயோகி மெய்ஞானிக்கு இந்நூல் சொன்னேன்
பட்டற்று ஆய்குருவுக்குத் தொண்டு பண்ணி
கற்றோம் என்றிருந்த கடைப் பிள்ளைக்கு ஆகும்
கல்வி அறிவுல்லோருக்கும் ஈயல் ஆகும்
மட்றுல்லோர்க்கு இந்நூல் ஈந்தாயானால்
மாண்டிடுவாய் மகத்தான சாபம் எய்தே"
சித்தர்களுக்கும், சிவயோகிகளுக்கும், ஞானிகளுக்கும், பற்றற்று குருசேவை செய்து கல்வியே குறிக்கோளாகக் கடைப்பிடிக்கும் சீடர்களுக்கும், சிறந்த கல்வியறிவு உடையோருக்குமாகவே இந்நூல் எழுதப் பட்டுள்ளது, மற்றவர்களுக்கு இந்நூலை கொடுத்தாயானால் சாபத்தால் பீடிக்கப் பட்டு மரணமடைவாய் என்கிறது.
பாவிகளும், மூடர்களும், முரடர்களும், பேராசை கொண்டவர்களும் சித்த ரகசியங்களை அறியக் கூடாது என்பதில் சித்தர்கள் மிகவும் கவனமாக இருந்ததையே இவை காட்டுகின்றன. அப்படி அவர்கள் கவனமாக இருந்ததே உலக மக்கள் நன்மைக்காகத் தானே...
இனி நான் சித்தர்கள் எப்படி ரசவாதம் செய்தார்கள் என்பதை சொல்ல முன்...
இந்த ரசவாதத்தை நான் சொல்வது நீங்கள் எல்லோரும் தங்கம் செய்ய வேண்டும் என்பதற்க்காக அல்ல, ரசவாதம் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்க்காக மட்டுமே. இதை முயற்சி செய்வதால் ஏற்படும் தீங்குகளுக்கும், விளைவுகளுக்கும் நான் பொறுப்பல்ல.
ஆகவே, நாம் இரசவாதம் செய்ய முயற்சிக்காமல், இதை ஒரு அறிதலாகக் கொள்வோம்.
ரசவாதம் செய்ய நாங்கள் ஒன்றும் ஞானியர் அல்லவே. எங்களுக்கு மதி மயக்கும் தங்கம் வேண்டாம். என்றும் நிலைக்கும் இறைவனின், இறை சொரூபமான சித்தர்களின் அருள் கிடைத்தால் போதும்.
Post a Comment



21 comments:
சீக்கிரத்துல சொல்ல மாட்டீஇங்க போல??!!? பரவாயில்லை காத்திருக்குறோம்.
@chandru2110
அப்படி இல்லை விளக்கம் சொல்லாட்டா அது வேற வம்பா இல்ல போகும்... நன்றி
முப்பு அப்படின்னா என்னன்னு சொல்லுங்க சித்தரே.
அக்காலத்து patent என்பது இதுதான் போலிருக்கு. விளக்கம் மிக அருமை
மெய்யாலுமே ஞானத்தை தேடுபவர்களுக்காக மட்டுமே இவைகளைப் படித்தால் புரியும்! அப்படித்தானே?
பாம்பு கீரிய வச்சு வித்த காட்டறவன் மாதிரி இருக்கெ...
@அக்கினிச் சித்தன்
மன்னிக்கவும்.. நான் சித்தரில்லீங்க... நன்றி
@சொல்லச் சொல்ல
தூய சிந்தனையோடு படிப்பவர்களுக்கும் நிட்சயம் புரியுங்க.. மிக்க நன்றிங்க...
@அண்ணாமலையான்
மிக்க நன்றி...
பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே.
நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே.
பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே.
maraivai irukumporulai maraivai irukavidu thozhi edo arivipu seigiren endra peyaril iraivirodam vendam thozhi .
உங்கள் blog- ல் மேலே உள்ள சித்தர்கள் படங்களை பார்த்தேன்.
ஆண்கள் மட்டுமே சித்தர்களாக இருக்கிறார்கள்.
பெண்கள் சித்தர்களாக ஆகா முடியாதா!
not this
உங்களிடம் ஒரு பொதுவான கேள்வி.
சித்தர்கள் சொன்னதை பலவற்றை தாங்கள் முயற்சி செய்து உள்ளீர்களா!success in try. Or
இல்லை அறிந்து மட்டும் வைத்து உள்ளீர்களா!
@vikram
இங்கு இறை விரோதம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள், என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?
@Sri Kamalakkanni Amman Temple
//ஆண்கள் மட்டுமே சித்தர்களாக இருக்கிறார்கள்.
பெண்கள் சித்தர்களாக ஆகா முடியாதா!//
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்... என்ற பதிவில் சொல்லப் பட்டுள்ள 108 சித்தர்களில் சில பெண் சித்தர்களும் உள்ளார்கள். நன்றி.
@Sri Kamalakkanni Amman Temple
//சித்தர்கள் சொன்னதை பலவற்றை தாங்கள் முயற்சி செய்து உள்ளீர்களா!success in try. Or
இல்லை அறிந்து மட்டும் வைத்து உள்ளீர்களா!//
நான் அறிந்த அனைத்தையும் முயன்று பார்க்கவில்லை, ஆனால் சிலவற்றை முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டுள்ளேன்.. நன்றி
"மட்றுல்லோர்க்கு இந்நூல் ஈந்தாயானால்
மாண்டிடுவாய் மகத்தான சாபம் எய்தே"
ஐயையோ..இது வேறா..
உமது தொண்டிற்கு வாழ்த்துகள்.
வாழ்க..
@அண்ணாமலை..!!
மிகக் நன்றி...
தற்போது நமது கையில் இருக்கும் நூட்குறிப்புகளை வைத்து தங்கம் செய்ய முடியுமென்கிற மாதிரியான எதிர்பார்ப்புகளை உருவாக்குவது கூடாது.
குரு பரம்பரையில் நேரடியாய் உணர்த்தப் பட்ட ஒன்றின், விடுகதையைப் போன்ற புதிர் வடிவமே தற்போது எஞ்சியிருக்கும் பாடல்கள்.
ஒரு சுவாரசியமான புதிரை அவிழ்ப்பதைப் போல ஒரு எல்கை வரையில் இந்த முறைகளை கட்டவிழ்க்கலாமே ஒழிய, அதைத் தாண்டி தங்கம் செய்வதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. இதனை புரிந்து கொள்ளுதல் அவசியம்.
மேலும் தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைத்திருக்காது என்கிற தோற்றமும் இந்த பாடல்களின் மூலம் நான் உணர்கிறேன். ஒரு வித பாதுகாப்பற்ற தன்மை அநேகமாய் எல்லா சித்தர்களின் பாடல்களில் தொக்கியிருப்பதாய் நினைக்கிறேன்.
@டவுசர் பாண்டி...
மிகக் நன்றி...
ragaisya irukatum endrum sithargal soothirathai ippaidiya karuthuraikren endra peyaril seivaithu
maraivanai maraivagave irupathu nadrallava
ini thangal virupam
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே
@vikram
மிகக் நன்றி...
unga thagavalgala PDF file la yenaku anupi vaika mudiyuma
ponniMSD@ovi.com
help me
Post a Comment