தங்கம் ஒரு அதிசயப் பொருள். மனித ஆசைகளின் மறுவடிவம், செல்வச் செருக்கின் சின்னம், இன்றைய உலகில் நமது பொருளாதாரத் தகுதியைச் சமூக அந்தஸ்தை மதிப்பிடும் பொருளாகத்தான் தங்கம் இருக்கிறது. தனிமனித அந்தஸ்தை மட்டுமல்ல நாடுகளின் தலைவிதியைக் கூட இந்தத் தங்கம் தான் நிர்ணயிக்கிறது.
சங்க காலத்திலே முற்றத்திலே காய்ந்து கொண்டிருந்த தானியங்களை உண்ணவரும் பறவை, விலங்குகள் மீது தங்க ஆபரணங்களை வீசியெறிந்து விரட்டிய தமிழ் நங்கையர் பற்றி இலக்கியங்களில் காணலாம். அதுமட்டுமல்லாமல் சங்கத் தமிழர்களின் தட்டு முட்டு சாமான்கள் கூட தங்கத்தில் இருந்ததாம் என்கிறது இலக்கியங்கள்.
இந்தச் செல்வச் செளிப்புத்தான் தமிழர் மீது அயல் நாட்டவர் பொறமை கொள்ள வைத்தது, அதனால் ஏற்பட்ட போர்கள் தான் எத்தனை எத்தனை, இவ்வாறு போர்களில் கொள்ளை அடிக்கப் பட்ட தங்க ஆபரணங்கள் தான் எவ்வளவோ...
தங்கம் உருவாக்கும் மாயாஜாலம் மட்டும் நமக்குத் தெரிந்துவிட்டால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும், என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது தான். மறுப்பதற்க்கில்லை.
ஆதிசங்கரர் தனக்கு நெல்லிக் கனியை தானமிட்ட பெண்ணுக்கு பொன்மழையை பொழிய வைத்ததை பற்றி அறிகிறோம் இது எப்படி அவரால் முடிந்தது?
இதற்குப் பெயர் தான் சொர்ண ஜாலம். இந்த சொர்ண ஜாலம் என்பது தான் சித்தர்கள் சொன்ன இரச வாதம்.
இரசவாதம் என்றால் என்ன? எப்படி சித்தர்கள் இந்த இரசவாதம் செய்தார்கள்? எங்களாலும் இந்த இரச வாதம் செய்ய முடியுமா?
Post a Comment



6 comments:
யாரும் சொல்லாத ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக இருந்தது பதிவு.
சொன்னாத்தான் தெரியும்
@தமிழ் உதயம்
மிக்க நன்றி...
@அண்ணாமலையான்
மிக்க நன்றி...
want to know about sorna jaaiam
its a great news, can you please give more details about the rasa vatham
Post a Comment