“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை ”
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள், யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனி மந்திரத்தைக் கேள்,
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
இத்துடன் "பாவி தானாக்கால் யேது மேன்மை" என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.
இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
இல்லையேல் பலிக்காது.
Post a Comment



21 comments:
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே !
பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே
.
இவ்ளோ பெரிய மந்திரத்த சொல்றதுக்குள்ள யாராவது அரிவாளோட வந்து வெட்டிட்டா என்ன பன்றது? சுருக்கமா எதாவது சூபர் பவர் மந்திரம் சொல்லுங்க ப்ளீஸ் (நம்பி ஒரு ஓட்டு போட்டுருக்கேன்)
அறிய வேண்டிய விஷயங்கள்
தெரிய படுத்தி இருக்கீங்க!
மிக்க நன்றி....
@அண்ணாமலையான்
உங்க பெயரையே சொல்லுங்க அண்ணாமலையானே காப்பாத்துவாரு... மிக்க நன்றி...
@அண்ணாமலையான்
ஏனுங்கோ குசும்பு ஏதும் இல்லிங்க தானே?
poda dai madaya
இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.///சுத்தம், அசுத்தம்,பர்றி கொஞ்சம் விழக்கமாக சொல்லவும்....
@hai_cha70
அது உங்கள் மனதைப் பொறுத்தது நன்றி..
ஜோதிஜி said...
@அண்ணாமலையான்
ஏனுங்கோ குசும்பு ஏதும் இல்லிங்க தானே?
சத்தியமா இல்லீங்கோ!
நல்ல தகவல்கள் மிகவும் நன்றி தோழி
ஜலதோஷம் நிவர்த்தி ஆவதற்கு சித்தர்கள் மந்திரம்
சொல்லி இருக்காங்களா தோழி. கொஞ்சம் சொல்லுங்களேன் .
நல்ல தகவல்கள் மிகவும் நன்றி தோழி
நல்ல பதிவு ...இதனை விட ஒரு குடும்பமே அழியும் படி செய்யும் சூனிய வேலைகளுக்கு உடனடி முறிவு இருக்கின்றதா (மூலிகை சம்பந்தமானது ) இருந்தால் தயவு செய்து கூறவும் ..
நன்றி
எந்த பல்கலை கலமும்
எந்த பேராசிரியரும்
விளக்க முடியாதது
THEYAGARAJAN JAYANTHI
மிக நல்ல தகவல். நான் அருணகிரிநாதரின் வேல் வகுப்பு மற்றும் கந்தர் சஷ்டி கவசத்தை தினமும் பாராயனம் செய்வேன்.
pengalai vasiyam seium mandthiram erukeratha?
intha manthiram entha nerathil / ethanai naal Koora vendum enbathi kooravum please.
Prakash
En manaivi ennudam onru sernthu vaala enna seyya vendum please valikattungal
அருமையான பதிவு.
நன்றி.
அன்பு தோழிக்கு,
அகத்தியர் மாமுன்னி அத்ர்வண்ண வேதத்துக்கு (பில்லி,சூனியம்) கருத்து உரைக்க மாட்டார் தானே .பின்னர் எப்படி அனுமார் கவசம் அருளின்னர் .தவறாக கூறி இருந்தால் மனிக்கவும்
For all
fine. Is there any chakkara is available for this manthra? please reply
Post a Comment