எதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்...

Author: தோழி / Labels: ,

மனிதர்கள் உட்பட மற்ற ஜீவராசிகளுக்கு உள்ளது போல தாவர வர்க்கமாகிய மூலிகைகளுக்கும் உயிர் உண்டு. சாதாரணமாக நாம் அவற்றைப் பிடுங்கும் பொது அதன் உயிரானது பிரிந்து அது இறந்து விடும்.

பொதுவாக உயிரற்ற ஜடத்தால் எதுவும் செய்யமுடியாதல்லவா? உயிர் இருந்தால் தானே செயல்படமுடியும்.

ஆகவே,

மூலிகைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின் அதன் உயிரை உடலிலே இருக்க செய்து பிடுங்க வேண்டியது அவசியமாகிறது.

மூலிகைகளின் சாப நிவர்த்தி செய்து பிடுங்கும் போது அதன் உயிர் உடலிலேயே தங்கி விடும். அப்போது அதன் செயற்பாடு சரிவர நடக்கும் அதனால் சாப நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

இப்படி சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கும் மூலிகைகள் எதற்கும் பயன்தரா.

சாப நிவர்த்தி செய்யப் பட்ட மூலிகைகளே மருத்துவத்திற்கும் பயன்படும், ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் போது சாப நிவர்த்தி வேறு விதமாக இருக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

23 comments:

R.Gopi said...

//மனிதர்கள் உட்பட மற்ற ஜீவராசிகளுக்கு உள்ளது போல தாவர வர்க்கமாகிய மூலிகைகளுக்கும் உயிர் உண்டு. //

மிக மிக சரியான விளக்கம்...

//மூலிகைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின் அதன் உயிரை உடலிலே இருக்க செய்து பிடுங்க வேண்டியது அவசியமாகிறது. //

அப்படியென்றால் வேருடனா??

//சாப நிவர்த்தி செய்யப் பட்ட மூலிகைகளே மருத்துவத்திற்கும் பயன்படும், ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் போது சாப நிவர்த்தி வேறு விதமாக இருக்கும்.//

மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது என்றால் என்ன, எப்படி செய்வது...??

விளக்கம் ப்ளீஸ் தோழி...

rajsteadfast said...

மிக நன்று. அகத்தியர் பற்றியும் அவரது புத்தகங்களும் எங்கு கிடைக்கும் தோழியே..

rajsteadfast said...

அப்படியென்றால் வேருடனா??

மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது என்றால் என்ன, எப்படி செய்வது...??

R.Gopi மற்றும் rajsteadfast ன் சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்...

தோழி said...

இருவருக்கும் மிக்க நன்றி…

//மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது என்றால் என்ன,//

சாபம் என்று சொன்னதன் உண்மையான அர்த்தம் என்னவேன்றால், உயிருள்ள மூலிகைச் செடியைப் பறிக்கும் பொது அதன் தன்மை குணம் மாறாமல் அப்படியே பேணுவதாகும்.

அத்துடன் அந்த மூலிகையை என்ன தேவைக்காக பயன் படுத்தப் போகிறோமோ அந்த செயலை மட்டும் அது செய்யும் படி உருவேற்றுவது.

வசியத்திற்கு எப்படி மூலிகைகளை உருவேற்றுவது என்பதை அந்தந்த வசிய முறைகளில் சொல்லி இருக்கிறேன் இன்னும் சொல்வேன்.

ஆனால் சித்தர்கள் சாபநிவர்த்தி என்றால் அதன் உயிரை அதன் உடலில் நிறுத்துவது என்று தான் சொல்லி இருக்கிறார்கள்.

//எப்படி செய்வது...??//

அது நீங்கள் அந்த மூலிகையை எதற்குப் பயன் படுத்துவீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

ஆனால் பொதுவான சாபநிவர்த்தி முறைகளும் உண்டு. (இது மூலிகைகளைப் பொதுவாக சேகரித்து வைப்பவர்கள் செய்யும் வழி)

முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்த சாப நிவர்த்தி செய்யாத மூலிகைகள் எதற்கும் உபயோகப் பட மாட்டாது. சாப நிவர்த்தி செய்யாத மூலிகைகளைப் பயன்படுத்தி செய்யும் வேலைகள் சரியான முடிவைத் தராது.

மூலிகையைப் பறிக்கும் பொது முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

# - முதலில் நாம் பயன்படுத்தப் போகும் செயலுக்கு ஏற்ப சாப நிவர்த்தி செய்யவேண்டும்.

# - ஆணிவேர் அறாமல் பிடுங்க வேண்டும்.

# - நமது சுண்டு விரலும் நகமும் படாமல் பிடுங்க வேண்டியது அவசியம் என்று சொல்லப் பட்டுள்ளது. ( இதற்க்கு சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை தெரிந்ததும் சொல்கிறேன்.)

//அகத்தியர் பற்றியும் அவரது புத்தகங்களும் எங்கு கிடைக்கும் தோழியே..//

மன்னிக்க வேண்டும். நான் இலங்கையில் வசிக்கிறேன் இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்று சொல்ல தெரியவில்லை.

முக்கிய விடையம் புதிய நூல்களைக் கொண்டு சித்தர்கள் சொன்னவற்றை செய்ய முயற்சிக்க வேண்டாம் ஏன் எனில் அதில் பல இடைச் செருகல்கள் உண்டு.

இடைசெருகல் என்ற பிரச்னைக்கு முடிவு காணும் விதமாகவே சித்தர்களின் மூல ஏடுகளின் பாடல்களை முன்வைத்து பதிவுகளை பதிகிறேன்.

பொதுவான சாப நிவர்த்தி முறைகளைஅறிந்து செய்து மூலிகைகளைச் சேகரித்து வைத்து முயற்சிப்பதே இவற்றுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே என்னது கருத்து.

பலர் இவற்றில் முயற்சி செய்து தொல்வி கண்டதாக அறிகிறேன். அதன் காரணம் தெளிவான விளக்கமின்மை என்று நினைக்கிறேன்.

rajsteadfast said...

தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. இலங்கையில் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தவும். நண்பர்கள் மூலமாக பெற முயல்கிறேன். நன்றி.

தோழி said...

@rajsteadfast

இலங்கையில் சரஸ்வதி புத்தக நிலையத்தில் பழைய சித்தர் நூல்கள் கிடைக்கும்... மிக்க நன்றி.

b.s.ramanan said...

நல்ல விளக்கம். மற்றுமொரு விளக்கமும் சொல்வார்கள். அந்தச் செடியை, நாம் செய்யப் போகும் செயலுக்கான விளைவுகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் அவ்வாறு காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்வதாக முன்பு படித்திருக்கிறேன்.

ஒரு மூலிகை வைத்தியர் என்னிடம் சொன்னது என்னவென்றால், எந்த ஒரு செடி/கொடி/மரத்திலிருந்து இலைகளைப் பறிக்கும் முன்னர் மானசீகமாக அவற்றிடம் பிரார்த்தனை செய்து, அவற்றின் அனுமதி பெற்றுப் பறித்தால், அந்த இலைகளில் உயிர்ச் சத்தை அந்தச் செடி அதிகம் அனுப்பி நாம் செய்யும் காரியம் நல்லபடி நிறைவேற உறுதுணையாக இருக்குமாம்.

செடி,கொடி, மரங்களுக்கு உணர்வு உண்டு என்பது நாம் அறிந்ததே. ஜே.சி.போஸூம் ஆய்வு செய்து அதை மெய்ப்பித்திருக்கிறார்.

தோழி said...

@b.s.ramanan
காப்புக் கட்டி சாப நிவர்த்தி செய்யும் முறையும் உண்டு... மிக்க நன்றி.

rajsteadfast said...

இலங்கையில் சரஸ்வதி புத்தக நிலையத்தில் பழைய சித்தர் நூல்கள் கிடைக்கும்...

எந்த ஊர் என்று சொல்லவில்லையே தோழி..(விடவேமாட்டானா.!!??)

தோழி said...

@rajsteadfast
சரஸ்வதி புத்தக நிலையம் என்றால் இலங்கையில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் சொல்லவில்லை... மிகப் பழமை வாய்ந்த புத்தக நிலையம் இது... கொழும்பு புறக்கோட்டையில் இது அமைந்துள்ளது... நன்றி

rajsteadfast said...

மிக்க நன்றி தோழியே...
பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

நன்றி

தோழி said...

@rajsteadfast

மிக்க நன்றி...

Anonymous said...

” ஓம் மூலி ஓம்கார மூலி உன் உயிர் உன் உடலில் தங்குக சுவாஹா “

பறிக்கும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்.

தோழி said...

@winmani

இது சித்தர்கள் சொன்ன மந்திரம் அல்ல தோழரே... நன்றி

Unknown said...

Please brief "சாப நிவர்த்தி செய்யும் முறை" methods

Unknown said...

Is there any specific methods for "சாப நிவர்த்தி செய்யும் முறை"

SUMAN said...

நீங்கள் தருகின்ற பதிவுகளில் போதிய விளக்கங்களை இட மறுக்கிறீர்கள்.. கிட்டத்தட்ட சித்தர்களைப்போல...

உங்களிடம் விடுத்து விடுத்துக்கேட்டால்தான் உரிய பதில் கிடைக்கிறது. முழுமையான விளக்கங்களுடன் பதிவிடுங்கள்

நன்றி

yuvaraj Anand said...

மூலிகை சாப நிவிர்த்தி


ஓம் குருப் பிரம்மம் - குருசிவம் - குருவிஷ்ணு
சாஷாத் குரும்யம் ஜெகத்

குருமூலி - சிவமூலி - சக்திமூலி - விஷ்ணுமூலி
பிரம்மமூலி

ஓம் குருசாபம் நசி - சிவசாபம் நசி - சக்திசாரம் நசி - பிர்ம்மசாபம் நசி - அகஸ்தியர்டட் சர்வசாபமும்

நசி- மசி, மசி-நசி, ஓம் சுவாஹா

robinson said...

@R.Gopi

Rudras Breeders said...

@ suman
Yes suman I too go with you.

I have read most of dharshi's posts. Her endeavor on making the works of sidhars transparent is really great. But, I have noticed that holding some information in the name of guru and for some god forsaken reasons makes her again to be thought that of like the works of sidhars only. I appeal to her to be fully transparent on the works of sidhars. I have adored her work but due to this mystery of holding back some information and jumping from one topic to another without completing the work of one complete chuvadi drives me away. Any human being should be left free with his/her own choice to interpret the information presented. The mark of an educated mind is to entertain a thought without accepting it.
I appeal to the author of this blog to be completely open on the works of sidhars.This is my personal request and am looking forward for more post from the author of this blog. Please do not ignore my comments as it is in english.

Anonymous said...

தோழியின் பதிவுகளில் போதிய விளக்கம் இல்லை என்று பொதுவாக கூறிவிட முடியாது. ஒரே வகுப்பில் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் ஓர் மாணவனுக்கு எளிதில் விளங்கிவிடும், ஆனால் மற்றோருவருக்கோ பல முறை விளக்கினாலும் விளங்காது. இது அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது. மேலும் எல்லா கருத்துக்களையும் ஒரே இடத்தில் விளக்கிவிட முடியாது. உதாரணத்திற்கு, குண்டலினி தந்திரம் என்ற தலைப்பில் சத்தியானந்த சரஸ்வதி ஆயிரம் பக்க புத்தகம் எழுதி உள்ளார். அவ்வளவு கருத்துகளை வலைப்பதிவில் விளக்குவது சாத்தியமற்றது.

SANGAMES said...

அன்புள்ள தோழிக்கு,
            
    வணக்கம். உண்மையான காயத்திரி மாந்திரம்என்பது தமிழ் மொழியில் உள்ளதா அல்லது  சமஸ்கிருத  மொழியில்  உள்ளதா, இவற்றில்  எதைப் பயன்படுத்துவது மிகச் சிறந்தது ஆகும்.

Kcmohan1987@gmail.com said...

வணக்கம் தோழி. என் இலங்கையிலா தாங்கள் இருகின்றிகள் என் குரு அகஸ்தியர் தன் உங்களை எனக்கு காடி இருக்க வேண்டு. என் வேடுதல் பலன் கிடைத்து விட்டது.
என் குரு அகஸ்தியரே நன்றி.
நானும் இலங்கையில் தான் இருக்கிறேன். கொழும்பில் இருக்கிறேன். தங்களின் முகவரி, தொலைபேசி இலக்கம் , மெயில் முகவரி வேண்டும்
e-mail முகவரி தெரியாமல் இருக்குறேன்
என் குறைகைளை திர்த்து வையுங்கள்.
எனது ஈ -மெயில் முகவரி kc1987_mohan@yahoo.com
mobile: 0757818913
தொலை பேசில் உரையாட நேரம் இருக்காது.

Post a comment